காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு! முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு! – நோட்டிஸ்

காண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு!
முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு!

ன்பார்ந்த தொழிலாளர்களே,

தற்காலிக வேலைகள், திடீரென்று வருகின்ற வேலைகள் தவிர தொடர்ச்சியாக செய்யப்படுகின்ற வேலைகளில் காண்டிராக்ட் தொழிலாளர்களை பயன்படுத்தக்கூடாது என்று காண்டிராக்ட் தொழிலாளர்கள் முறைப்படுத்துதல் மற்றும் ஒழிப்புச் சட்டம் சொல்லிக் கொண்டது. ஆனால் இன்றைய நிலவரம் என்ன?

டாக்டரும் காண்டிராக்ட்; கம்பவுண்ட்ரும் காண்டிராக்ட்!
கல்லூரி பேராசிரியரும் காண்டிராக்ட்; பஸ் டிரைவரும் காண்டிராக்ட்!
எஞ்சீனியரும் காண்டிராக்ட்; மெஷின் ஆபரேட்டரும் காண்டிராக்ட்!
கம்ப்யூட்டர் நிபுணரும் காண்டிராக்ட்; ஐ.டி ஊழியரும் காண்டிராக்ட்!

இதில் அரசு நிறுவனம், தனியார் நிறுவனம் என்கிற வேறுபாடு இல்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு வாழ்வளித்த விவசாயம், நெசவு, சிறுவணிகம், மீன்பிடித்தல் மற்றும் சிறுதொழில்களை அழித்து, கோடிக்கணக்கில் அவர்களை வேலையில்லாத ரிசர்வ் பட்டாளமாக்கி உள்நாட்டின் சுயசார்புப் பொருளாதாரத்துக்கு வேட்டு வைத்துவிட்டு பன்னாட்டுக் கம்பெனிகளும், அம்பானி, அதானி போன்ற இந்திய தரகு முதலாளிகளும் கொழுத்த இலாபத்தில் திளைப்பதற்காகவே காண்டிராக்ட்மயமாதல் நடவடிக்கை அரசு துணையோடு தீவிரமாக நடக்கிறது. இதே நோக்கத்தில் காண்டிராக்ட் முறைக்கு ஆதரவாக சட்டங்களைத் திருத்தி உரம் போட்டு வளர்க்கிறது, அரசு.

காண்டிராக்ட் முறையை முறைப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் கொண்டு வரப்பட்ட சட்டம் முதலாளியின் காலைத்தான் நக்கி வருகின்றது. விதிமுறை மீறல், விபத்துகளில் கொத்துக் கொத்தான சாவுகள் ஆகிய அந்த குற்றத்திலும் காண்டிராக்ட் முதலாளிகளோ, அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் நேரடி முதலாளிகளோ தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை. நீதிமன்றங்களோ பெரும்பாலும், காண்டிராக்ட் முறையை ஆதரித்து தான் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. காண்டிராக்ட் முறையில் இருக்கும் சட்டமீறல்களை அங்கீகரிப்பதன் மூலம் காண்டிராக்ட் முறையிலான சுரண்டல்களை சட்டபூர்வமாக்கி விட்டன நீதிமன்றங்கள்.

எனவே, பணி நிரந்தரம், 8 மணி நேர வேலை, சம வேலைக்கு சம ஊதியம், பணியிட விபத்துப் பாதுகாப்பு போன்ற கோரிகைகளுக்காக போராடும் போதே சட்டம் என்ற வரையறைக்குள் சிக்கிக் கொள்ளாமல், அந்தக் கைவிலங்கை உடைத்து வெளியேறுவதும், நமக்கான உரிமையை நிலைநாட்ட தொழிலாளர்களாகிய நாமே அமைப்பாகத் திரள்வதும் தான் நம்மீதான வரம்பற்ற சுரண்டல்களை முடிவுக்கு கொண்டு வர முடியும். முதலாளிகளால், முதலாளிகளுக்காகவே நடக்கின்ற அரசை தூக்கியெறிந்து, நம்முடைய நலன்களுக்காக, நாமே நடத்துகின்ற அரசு ஒன்றினை அமைக்காமல் நிரந்தர விடியல் இல்லை. இதற்காக வழிநடத்தக்கூடியது புரட்சிகர அரசியலை தாங்கி நிற்கின்ற தொழிற்சங்கமே.

காண்டிராக்ட் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை இல்லை என்பது வீணர்களின் பேச்சு. ஐ.டி ஊழியர்களுக்கு சங்கம் அமைக்கின்ற உரிமையை நிலைநாட்டி, முதலாளி வர்க்கத்தின் கனவைக் கலைத்த நம்மால், காண்டிராக்ட் தொழிலாளர்களை அமைப்பாக்கி, நம்மை இறுக்கிப் பிடித்திருக்கும் கூலியடிமை முறைக்கும் முடிவு கட்ட முடியும்.

இதனடிப்படையில் இந்திய அளவில் 4 தொழிற்சங்க அமைப்புகள் ஒன்றிணைந்து காண்டிராக்ட் தொழிலாளர்களடு பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க திட்டமிட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக நாடு தழுவிய அளவில் காண்டிராக்ட் தொழிலாளர் சங்கங்களது கூட்டமைப்பு உருவாக்குவது எனவும், கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டத்துக்கு குடும்பத்தோடு அணிதிரண்டு வருமாறு அழைக்கிறோம்.

  • காண்டிராக்ட் கொத்தடிமைக்கு முடிவுகட்ட தொழிற்சங்கம் கட்டியமைப்போம்!
  • வேலைகள் அனைத்திலும் நிரந்தரத்தை நிலைநாட்டுவோம்!
  • 8 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்ய மறுப்போம்!
  • சமவேலைக்கு சமஊதியம் என்கிற உரிமையை அடைந்தே தீருவோம்!
  • முழுமையான பணியிடப் பாதுகாப்பினை உத்தரவாதம் செய்ய போராடுவோம்!
  • வேலை பறிப்பு, பசி-பட்டினியில் தள்ளுகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

நிகழ்ச்சி நிரல்

கருத்தரங்கம்

28.1.2018 காலை 9.30 மணி
கேரளா சமாஜம், நேரு பூங்கா அருகில், பெரியார் நெடுஞ்சாலை, சென்னை.

துவக்க உரை : தோழர்.சே.வாஞ்சிநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்

(ஓய்வு பெற்ற் நீதிபதி திரு.து.அரிபரந்தாமன் அவர்கள் துவக்க உரையாற்றுவார் என அறிவித்திருந்தோம். தவிர்க்க இயலாத காரணங்களால் திரு. அரிபரந்தாமன் அவர்கள் கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர்.சே.வாஞ்சிநாதன் அவர்கள் துவக்க உரை ஆற்றுகிறார்.)

கருத்துரை
வேலை நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், பணியிட பாதுகாப்பு, தொழிற்சங்கம் அமைத்தல் – மேற்படி கோரிக்கைகள் வென்றெடுப்பது எப்படி?
4 சங்கங்களது பிரதிநிதிகள் உரையாற்றுவர்.

பொதுக்கூட்டம்

28.1.2018 மாலை 6 மணி
ஆவடி, நகராட்சி அலுவலகம் அருகில்

தலைமை தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை :
தோழர் பா. விஜயகுமார், பொருளாளர், பு.ஜ.தொ.மு, தமிழ்நாடு
தோழர் பிரதீப், பொதுச்செயலாளர், IFTU, தெலுங்கானா

நன்றியுரை
தோழர் மு.முகிலன், மாவட்டச் செயலாளர், பு.ஜ.தொ.மு,  திருவள்ளூர் (மேற்கு) மாவட்டம்

கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டத்தில் ம.க.இ.க-வின் புரட்சிகர பாடகர் கோவன், தெலுங்கானாவின் அருணோதயா கலைக்குழுவினரது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF), தமிழ்நாடு – புதுச்சேரி
இந்திய தொழிற்சங்கங்களது கூட்டமைப்பு (IFTU)
புதிய தொழிற்சங்க முனைப்பு (NTUI)
அனைத்து கிழக்கு நிலக்கரி சுரங்க காண்டிராக்ட் தொழிலாளர்கள் & ஊழியர்களது தொழிற்சங்கம் (ALL ECLC W & EU)

தொடர்புக்கு : தோழர் அ. முகுந்தன் 110/63, என்.எஸ்.கே சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24 செல் : 9444442374

Permanent link to this article: http://new-democrats.com/ta/put-an-end-to-contract-system-notice-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வெறியர்களாக இருக்க விரும்பும் படித்த மேட்டுக்குடி

இது போன்ற வெளிப்படையான ஆணாதிக்கத்தையும், சாதிவெறியையும், மதவெறியையும் கசப்பான தேசவெறியையும் நாம் எப்படி எதிர்கொள்வது? தினந்தோறும் காலையில் வாட்ஸ்-அப் அறிவிப்பில் ஆஜராகும் ஓரவஞ்சனைக்கு என்ன எதிர்வினையாற்றுவது?

ஐ-பாட், ஐ-ஃபோன் – ஆப்பிள் சீனாவிலிருந்து திருடுவது எவ்வளவு?

சீன உற்பத்தித் தொழிலாளர்கள் ஆண்டுக்கு தலா $1,540 ஊதியம் பெற்றனர், அல்லது வாரத்துக்கு $30 — இது அமெரிக்காவில் சில்லறை விற்பனைத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி...

Close