செய்தி: ஆசிபா கொலை குறித்து “இதுபோன்ற குற்றங்களை தடுப்பது கடினம், ஓரிரு பலாத்கார சம்பவங்கள் நடந்தால் அதை பெரிது படுத்தக்கூடாது” – சந்தோஷ் கங்கவார், பா.ஜ.க மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சர்
கண்ணோட்டம்:
அந்த அமைச்சர் பேசுவதிலிருந்தே தெரியவில்லையா அந்த கொடூரமான இரக்கமில்லாத கொலையை அவர்களின் கூட்டாளிகள்தான் செய்திருப்பார்கள் என்று. நாடுமுழுவதும் நடக்கும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்துத்துவத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது பெண்களை ஆணுக்கு அடிபணிந்து சேவை செய்வதற்கான ஒரு ஜடப்பொருளாக பார்ககும் ஆணாதிக்க மனநிலை. அதனால்தான் இந்து ஞானமரபு, ஒரு ஆண் ஒழிக்க வேண்டியவை மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்று பெண்களை இழிவுபடுத்துகிறது.
அதே அடிப்படையில், இவர்கள்தான் காதல் செய்யக் கூடாது, பப்க்கு போக கூடாது, சினிமா பார்க்கக் கூடாது என்று கலாச்சார காவல் செய்பவர்கள். திரைப்படங்களில் இவர்களின் போலியான நம்பிக்கைக்கு எதிராக ஏதாவது சொல்லப்பட்டாலும் அதற்கெதிராக வன்முறை சம்பவங்களை அரங்கேற்றுபவர்கள்.
பெண்களை தெய்வமாக போற்றுவோம் என்று கதையளக்கும் இவர்கள்தான் பாலியல் ரீதியாக பெண்களை துன்புறுத்தி கொண்டிருக்கிறார்கள். பலபேர் சாமியார் வேஷம் போட்டுக்கொண்டு பக்தி போதையில் இருக்கும் பெண்களிடம் எந்த அளவுக்கும் தரம்தாழ்ந்து நடந்துகொள்கிறார்கள் என்பதற்கு பல சாட்சியங்களை நாம் பார்த்திருக்கிறோம்.
யோகி ஆதித்யநாத் உத்திரபிரதேசத்தில் பதவி ஏற்றதும் அதிக அளவிலான பாலியல் வன்முறைகள் நடந்து வருகின்றன என்கிறது ஒரு செய்தி.
இவ்வளவு திமிர்த்தனமாக பேசும் அமைச்சரின் பிள்ளை ஆசிபாவுக்கு நடந்தது போல பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு பேசுவாரா? சிந்தித்துப்பாருங்கள். போலீஸ் பாதுகாப்போடு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் இவர்கள் பாதுகாப்பாய் இருப்பதாகவும் தங்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்ற எண்ணத்தில் பேசுகிறார்கள்.
உண்மைதானே, இந்த அரசு மற்றும் அதன் உறுப்பான காவல் துறை யாருக்காக வேலை செய்கிறது பணம் உள்ளவருக்கும் அதிகாரத்தில் உள்ளவருக்கும்தானே தவிர பாமர மக்களுக்காக இல்லை. அப்படி எங்கயாவது கொஞ்சமாக தென்பட்டாலும் அதுவெறும் கண்துடைப்புக்காகவே இருக்கும்.
– சுகேந்திரன்