5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!

This entry is part 21 of 22 in the series பண மதிப்பு நீக்கம்
 1. கருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”
 2. டாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்
 3. ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்
 4. கருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு
 5. கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?
 6. “10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்
 7. வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்
 8. டெல்டா விவசாயம் நெருக்கடியில்! விவசாயிகள் தற்கொலை! ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி!
 9. செல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்
 10. வங்கிப் பணத்தை எடுப்போம்! வங்கிக் கணக்கை முடிப்போம்!
 11. பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!
 12. ரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு
 13. கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி
 14. மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா?
 15. ரூ 500, 1000 செல்லாது! மோடியின் கருப்புப் பண மோசடி!
 16. பண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…?
 17. பண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்
 18. மலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி!
 19. “மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ
 20. பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை
 21. 5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!
 22. நீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”

ந்தியாவின் 2016-17 (அக்டோபர்-டிசம்பர்) நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு உள்நாட்டு உற்பத்தி சென்ற ஆண்டை விட 7% அதிகரித்திருப்பதாக மத்திய புள்ளியியல் நிறுவனம் அறிவித்துள்ளது பற்றி இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான பிரபாத் பட்நாயக் கூறிய கருத்து…

புள்ளிவிபரத்தை திருத்தும் மோடி - ஜெட்லி

அம்பலமாகும் புள்ளிவிபர மோசடி

புள்ளியியல் நிறுவனம் வேண்டுமென்றே தரவுகளை வளைத்து திருத்தி வளர்ச்சி வீதத்தை அதிகமாக காட்டியிருப்பதும், இது மத்திய அரசின் அழுத்தத்தின் பேரில் நடந்துள்ளது என்பதும் தெளிவாகிறது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம் 6.2% என்ற அளவிலிருந்து 7 சதவீதமாக அதிகரித்துக் காட்டப்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை பொருளியல் ஆலோசகர் பொறுப்பில் இருப்பவரான சௌமியா கோஷே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

1. நவம்பர் 8-ல் நடைமுறைப்படுத்தப்பட்ட பண நீக்க நடவடிக்கையின் தாக்கம் உணரப்பட்ட 2016-17 அக்டோபர்-டிசம்பர் காலாண்டுக்கான நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அளவு ரூ 30,27,893 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.“ வளர்ச்சி வீதத்தை கணக்கிடுவதற்கான முந்தைய ஆண்டின் இதே காலாண்டின் (2015-16 அக்டோபர்-டிசம்பர்) உள்நாட்டு உற்பத்தி அளவு பிப்ரவரி 9,2016 ல் ரூ 28,52,339 கோடி என அறிவிக்கப்பட்டது. அது மே மாதம் சிறிதளவு குறைத்து ரூ 28,51,682 என்று மறுமதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த இரண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது 2016-17 அக்டோபர்-டிசம்பருக்கான வளர்ச்சி வீதம் 6.2%தான். ஆனால், இந்த வளர்ச்சி வீதத்தை வெளியிட்ட பிப்ரவரி 28 2017 அன்று முந்தைய ஆண்டுக்கான உள்நாட்டு உற்பத்தி திடீரென்று ரூ 28,30,760 கோடி என்ற குறைக்கப்பட்டு, 2016-17 மூன்றாவது காலாண்டின் உற்பத்தி வளர்ச்சி வீதம் 7% என்று காட்டப்பட்டுள்ளது.

2. புள்ளிவிபர கோல்மால் இது மட்டுமில்லை.

மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் உள்நாட்டு உற்பத்திக்கான தரவுகள் உற்பத்தி ஆலைகளின் மதிப்புக் கூட்டலில் இருந்து கணக்கிடப்படாமல், பதிவு செய்யப்பட்ட கார்ப்பரேட்டுகளின் நிதிநிலை அறிக்கை (பேலன்ஸ் ஷீட்)யில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளதால் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட முறைசாரா துறை உற்பத்தியாளர்கள் தொடர்பான தரவுகள் இதில் குறைந்த அளவே பிரதிபலிக்கிறது.

பிரபாத் பட்னாயக்3. பண மதிப்பு நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து வணிகர்கள் 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி கொடுக்க வேண்டிய கடன்களை உடனடியாக தீர்த்து விட்டார்கள். இது தொடர்பான வரிகளும் அதிகமாக செலுத்தப்பட்டன. எனவே, மறைமுக வரி வசூலிப்பு வழக்கமானதை விட அதிகமாக இருந்தது. இவற்றை மொத்த மதிப்புக் கூட்டலாக கணக்கிட முடிவு செய்ததால் உள்நீட்டு உற்பத்தி அளவு கணிசமாக ஊதிப் பெருக்கப்பட்டிருக்கிறது.

மோடி - ஹார்வர்டா, கடின உழைப்பா, அல்லது வேறு ஏதாவதா?

மோடி – ஹார்வர்டா, கடின உழைப்பா, அல்லது வேறு ஏதாவதா?

அதாவது, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 7% வளர்ச்சி வீதம் முந்தைய காலகட்டத்துக்கான உள்நாட்டு உற்பத்தி மதிப்பை குறைத்து கணக்கிடாவிட்டால் 6.2% ஆகவும், முறைசாரா துறை உற்பத்தியையும், கூடுதலாக வசூலான மறைமுக வரிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இன்னும் குறைந்து சுமார் 5% அளவாக இருக்கும்.

சுதந்திர இந்தியாவில் இதுவரை பார்த்திராத தலைகீழ் தர்க்கம் இது. ஒருவர் வீட்டிற்கான மளிகை பொருட்கள் வாங்கும் அவருடைய தெருவில் உள்ள மளிகைக் கடைக்கு சென்று பார்த்தாலே பண நீக்க நடவடிக்கை காரணமாக அந்த வணிகர் சந்தித்த இழப்பை உணர்ந்து கொள்ள முடியும்.

இதை அங்கீகரிக்காத பிரதமர் மோடி, பேராசிரியர் அமர்த்யா சென் போன்ற பொருளாதார நிபுணர்களை ஹார்வர்ட்-ஹார்ட் வொர்க் என பொருளற்ற வார்த்தை விளையாட்டுகள் மூலம் தாக்குகிறார்.

அம்மணமாக பவனி வரும் பேரரசர், அதைச் சுட்டிக்காட்டுபவர்களை பார்த்து “என்ன தப்புத் தப்பாக உளர்றீங்க. என்னோட அரசவை புலவர்கள், நான் முழு உடை உடுத்திருக்கிறேன் என்று நிரூபித்து விட்டார்கள்” என்று சொல்வது போல உள்ளது, இது.

மொழிபெயர்த்தவர் : வெளிச்சம்
மேலும் படிக்க : மத்திய புள்ளியியல் நிறுவனத்தை கிண்டலடிக்கும் ஆங்கிலக் கட்டுரை RUPE – GDP Puzzle Solved

Series Navigation<< பண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லைநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்” >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/real-gdp-growth-5-modi-govt-doctored-data-to-arrive-7-rate-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்...

மார்ச் 8 – சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்

சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்! உழைப்பு சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! உலக மகளிர் தினத்தில் உறுதியேற்போம்!

Close