செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

வ்வொரு ஆண்டும் வேலை செய்யும் வயதை எட்டுபவர்களுக்கும் சந்தையில் புதிதாக உருவாகும் வேலை வாய்ப்புகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கிய பொருளாதார மந்தத்திற்குப் பிறகு இந்த இடைவெளி அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது.

குறிப்பாக, இந்தியாவில் வேலையற்றோரின் எண்ணிக்கை விகிதம் சென்ற 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2015-16ல் அதிகரித்துள்ளளது. இது அரசு மதிப்பீட்டின்படி அளிக்கப்பட்ட அதிகாரபூர்வ தகவல். அதாவது, வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை கிடைக்காதவர்களின் எண்ணிக்கையைப் பற்றி மட்டுமே பேசுகிறது. உண்மையில் 45 கோடி உழைப்பாளர்கள் முறைசாரா துறைகளில் வேலை செய்து வரும் நிலையில் வேலையின்மையின் தீவிரத்தை நாம் புரிந்து கொள்ளலாம். கிராமப் புறங்களில் இந்த எண்ணிக்கை வீதம் நகர்ப்புறங்களை விட அதிகமாக இருப்பதாக தொழிலாளர் துறை அறிக்கை குறிப்பிடுகிறது.

மோடியின் “மேக் இன் இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, திட்டங்கள் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்து விடவில்லை. என்பதையும் இது காட்டுகிறது. மேலும், சமீபத்திய் பணமதிப்பிழப்பு நடவடிக்கையுன் மூலம் விவசாய, சிறு, குறு வணிகர்களை அழித்து அவர்ளை வேலையில்லாதோர் பட்டாளத்தில் சேர்த்திருக்கிறார்; விவசாயத்தை முடக்கிப் போட்டு முறைசாரா தொழிலாளர்களை நடுத்தெருவில் சாப்பிடக் கூட வழியில்லாமல் நிறுத்தியிருக்கிறார்.

அதே நேரம், தொழிலாளர் திட்டங்களில் திருத்தம், சமூக நலத் திட்டங்களின் மானியங்களை வெட்டுவதன் மூலம் உழைக்கும் மக்களின் வாழ்நிலையை மேலும் நெருக்கடியில் தள்ளும் கார்ப்பரேட் சேவையில் தீவிரமாக இறங்கியிருக்கிது இந்த தேச விரோத இந்துத்துவ கும்பல்.

இந்நிலையில் சென்ற வாரம் வெளியான சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் அறிக்கை முதலாளித்துவ அரசுகளையும் ஆளும் வர்க்கங்களையும் மேலும் கலக்கமடையச் செய்துள்ளது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன என்றும் அது எச்சரித்துள்ளது. அதனுடைய மதிப்பீட்டின்படி சமூகத்தில் போராட்டங்கள் வெடிப்பதற்கான குறியீட்டு எண் 2015-ம் ஆண்டை விட 2016-ம் ஆண்டு அதிகரித்துள்ளது. இது கடந்த 40 ஆண்டு கால சராசரி குறியீட்டு எண்ணை விட அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சூழலில் உலகப் பொருளாதார வளர்ச்சி கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக தொடர்ந்து ஏமாற்றமளிக்கக் கூடிய நிலையில் இருப்பதையும், உலக அளவில் வேலையற்றோரின் எண்ணிக்கை 34 லட்சம் அளவில் உயரவிருப்பதையும் அது சுட்டிக் காட்டியுள்ளது. இது உலகெங்கும் உள்ள முதலாளித்துவ அரசுகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது, அமெரிக்காவில் கொடூர கோமாளி டிரம்ப் அதிபராக பதவியேற்பு, பிற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பது என்று ஆளும் வர்க்கங்கள் உலகை வன்முறையை நோக்கியும், பிளவை நோக்கியும் தள்ளிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே மோடியின் தொழிலாளர் விரோத செயல்களுக்கு எதிராக போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெற்றாலும் ஊடகங்கள் அவற்றை திட்டமிட்டே இருட்டிப்பு செய்கின்றன. குறிப்பாக, தமிழகம் இவ்விசயத்தில் போராட்டக் களத்தில் முன்னுக்கு நிற்கிறது.

முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாத இத்தகைய நெருக்கடிகள் கால அலைவட்ட முறையில் மேலும் மேலும் குறுகிச் செல்லும் திருகுச் சுருள் போல ஒட்டு மொத்த சமூகத்தையும் நெரிக்கும் நச்சுச் சுழலாக உலகை நெருக்கிக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலைமைகள் கோருவது என்னவெனில் நாடு தழுவிய அளவில் இந்த அரசுக்கு எதிராகவும் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும், தொழிலாளர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதும், சர்வதேச அளவில் தொழிலாளர் ஐக்கியத்தை கட்டியமைப்பதுமே ஆகும்.

– மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/rule-of-1-percent-disaster-for-the-rest-99-percent-and-the-world/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தமிழக விவசாயிகளை பாதுகாக்க நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஐ.டி ஊழியர்கள் அனைவரும் அன்றைய தினம் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் களத்தில் இறங்குவோம். விவசாயிகளையும் விவசாயத்தையும் காப்போம்!

B1 விசா முறைகேடு – உஷார்!

இந்த விசாவை பயன்படுத்தி மேற்சொன்னபடி ஆண்டுக்கு மூன்று மாதம், ஐந்து மாதம் என்று ஊழியர்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் மற்றவகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது கண்டுபிடிக்கப்படும்....

Close