புரட்சி வரும் இல்லையா அம்மா?

 

 

ஏய்… அம்மா! புரட்சியென்றால் என்ன?

அது போராட்டமடா கண்ணா !

வீரர்கள் சண்டை போடுவார்களே… அதுவா?

ஆமா குழந்தை!

போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க.

நாம் அன்னியனை எதிர்த்துப் போர் செய்கிறோமா?

ஆமாகண்னு! அப்படித்தான் நினைக்கிறேன்.

நாம் ஏன் அவங்களோட போரிடனும் அம்மா?

ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள்.

அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா?

ஆமாண்டா அது அப்படித்தான்,

அப்படியென்றால் நான் அடிமையாகமாட்டேன்.அம்மா…

எனக்குத் தெரியும் மகனே – நாம்

ரொம்ப நாளைக்கு இப்படி இருக்கமாட்டோம்

கண்ணே தூங்கு!

புரட்சி வரும் இல்லையா அம்மா?

ஆமாம் மகனே புரட்சி வரும். வாயை மூடித்தூங்கடா,

 

ஏய் அம்மா…எப்போ புரட்சி வரும்?

சீக்கிரம் மகனே… சீக்கிரம்மகனே.

ஆனால் அம்மா நம்மிடம் இராணுவம் இல்லையே?

சொன்னால் கேளடா தூங்கு.

நாம் இராணுவம் அமைப்போம் கவலைப்படாதே.

ரொம்ப நாளாகுமா இராணுவம் அமைக்க?

இல்லையடா மகனே அப்படி நினைக்கல்லே.

நம்ம படையிலே யாரு இருப்பினம்?

ஒ… நம்ம அப்பா, உன்னோட மாமன்மார், நம்ம ஜனங்கள் எல்லோரும்…

வாயை மூடித் தூங்கடா கண்ணு.

நானும்கூட… நானும்கூட

பெரியவனான‌தும் சேரலாமா?

நீ அதிலே சேர முடியாது

வாயை மூடித் தூங்கடா..

வீரன் ரொம்பப் பலசாலியாக இருக்கனும்

ராத்திரி முழுவதும் கண்முழிச்சிருந்தா

எப்படித்தான் நீ பலசாலியாவே.

சொல்வதைக் கேளடா,

உன் துப்பாக்கியை எடுத்துக்கோ,

அதோட கொடியையும் எடுத்துக்கோ,

தூங்கி அதையே கனவிலபாரு.

சரிதானே கண்ணே…

ச…ரி..ம்மா . .

–  ரஷ்யக் கவிதையிலிருந்து…

நன்றி –

  • புதியகலாச்சாரம் – நவம்பர் – 1989

Permanent link to this article: http://new-democrats.com/ta/russian-revolutionry-poem-nov7-2019/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இன்றைய தேவை உரிமைகளை வெல்வதற்கான டெல்லிக்கட்டு

விவசாயிகளுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, விவசாயிகளுக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது. நமது பொருளாதார சுயேச்சையையும், உழவர்களின் வாழ்வையும் பாதுகாக்க களம் இறங்குவோம்! டெல்லி அதிகாரத்தை...

பி.பி.ஓ / கால்சென்டர்கள் : ஐ.டி துறையின் ‘சேரிப்பகுதி’!

உண்மையில், இந்தத் துறையில் லே ஆஃப் என்பது இல்லை. குறைந்த சம்பளம், அதிக பணிச் சுமை என்று பல ஊழியர்கள் ஓரிரு ஆண்டுகளில் உடலும், மூளையும் தளர்ந்து...

Close