வேலை போச்சு, நிவாரணம் வேண்டும் – நடுவர் மன்றம் அமைப்பு

ரு சாதாரண ஐ.டி ஊழியர் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் அடுத்து என்ன செய்ய முடியும்? பொதுவாக, ரிசியூமை துடைத்து, மெருகேற்றி புதிய ஒரு வேலை தேடுவதற்கு இறங்க வேண்டியதுதான். அடுத்த வேலை கிடைப்பது வரை குடும்பச் செலவுகளையும், கடன் தவணைகளையும் சமாளிப்பது எப்படி என்று மருக வேண்டியதுதான்.

sanjay-kapoorஆனால், மேல்மட்ட மேலாளர்களுக்கும், பணக்காரர்களுக்கும் இது எப்படி போகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள் :

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் ஆக இருந்த சஞ்சய் கபூர் தன்னை முறைகேடாக வேலை நீக்கம் செய்து தனக்கு வர வேண்டிய பணத்தை நிறுத்தி விட்டதாக, நிறுவனத்திடமிருந்து ரூ 600 கோடி முதல் ரூ 700 கோடி நஷ்ட ஈடு கேட்கப் போகிறார் என்கிறது எகனாமிக் டைம்ஸ். நிறுவனத்தின் நிர்வாகத்தை தொழில்முறையாக மாற்றுவதற்காக, முன்னர் ஏர்டெல் தலைமை செயல்பாட்டு அலுவலராக பணி புரிந்த கபூரையும் இன்னும் சில மேலாளர்களையும் ஜூன் 2014-ல் வேலைக்கு எடுத்தது மைக்ரோமேக்ஸ். ஆனால், நிறுவன முதலாளிகளுக்கும், கபூருக்கும் இடையே ஒத்துப் போகாமல் உறவு கசந்து போய் கபூர் போலி கணக்கு காட்டி பணம் பெற்றதாக குற்றம் சாட்டி ஆகஸ்ட் 2015-ல் அவரை பணி நீக்கம் செய்தது நிறுவனம்.

செப்டம்பர் 2015-ல் கபூர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, அவருக்கு சேர வேண்டிய பங்குகளின் மதிப்பை மைக்ரோமேக்ஸ் தனக்கு தர மறுக்கிறது என்று வழக்கு தொடுத்தார். தான் வேலையிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த அவர், பிரச்சனையை தீர்ப்பதற்கு நடுவரை நியமிக்கும்படியும், தொடர்ந்து நீதிபதிகள் அடங்கிய நடுவர் மன்றத்தை ஏற்படுத்தவும் கோரினார். இப்போது, கபூரின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ். அகர்வால், மைக்ரோமேக்சின் சார்பில் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தேவிந்தர் குப்தா ஆகியோரை உறுப்பினர்களாகவும், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சிங்-ஐ தலைவராகவும் கொண்டு ஒரு நடுவர் மன்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது மே 10-ம் தேதி தனது விசாரணையை தொடங்க உள்ளது

உங்கள் நிறுவனத்துடனான பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள இது போன்று ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியை உங்கள் சார்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நியமிப்பது குறித்து உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

செய்தி ஆதாரம்

படங்கள் : நன்றி economictimes.indiatimes.com

Permanent link to this article: http://new-democrats.com/ta/sanjay-kapoor-ex-chairman-of-micromax-may-file-claim-against-company/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
உழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது,...

படிப்பதும் ஒரு போராட்டமே! படித்தெழு தொழிலாளி வர்க்கமே!

ஏன் படிக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்தவுடனேயே, எதைப் படிக்கவேண்டும்? என்ற தெளிவையும் பெற வேண்டும். எழுதப்பட்ட எல்லாமும் பொதுவானது என்று நம்புவதும் தவறு.

Close