கல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை

கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு நவராத்திரி பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி, கேள்விக்கு அதிபதியான சரஸ்வதியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வழிபடுகின்றனர்.

சரஸ்வதியின் படத்தின் முன் தமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, குழந்தைகளின் பாடபுத்தகங்கள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். வசதியானவர்கள், அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாகவும் வழங்குகின்றனர்.அடுத்த நாள், அந்த பாடப் புத்தகங்களை எடுத்து குழந்தைகளைப் படிக்கச் செய்கின்றனர்.

இது ஒரு சாதாரண பக்தரின் பார்வையில், சரஸ்வதி பூஜையைப் பற்றிய ஒரு அறிமுகம். நிற்க.

எதற்காக  இதையெல்லாம் செய்கின்றனர்?

ஒருசில வரிகளில் சொல்வதானால், தனது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கி, அவர்களுக்கு ஓர் ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றனர். ஏற்கனவே வேலைக்குச் செல்பவர்கள், இருக்கின்ற வேலை எவ்வித பிரச்சினையின்றி செல்ல வேண்டும், அலுவலகத்தில் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று கல்விக்கடவுள் சரஸ்வதியிடம் வேண்டிக்கொள்கின்றனர்.

ஆனால் எதார்த்தம் என்ன என்று நாம் சற்று நிதானமாகச் சிந்திக்க ஆரம்பிக்கலாமே.

அரசு தனது முக்கியமான அடிப்படைக் கடமையான கல்வித் துறையிலிருந்து விலகி அத்துறையை முழுவதுமாக தனியார் வசம் ஒப்படைப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளை மூடுவது. நீட் தேர்வு , 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு என்று இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்த சில மாதங்களாக பள்ளிக் கல்வி சார்ந்த பல அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இவை அனைத்தும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் ஆணைகளாகவும் காசுள்ளவனுக்கே கல்வி என்பதை அடித்துக் கூறுவதாகவுமே உள்ளது.

அதையெல்லாம் மீறி, நன்றாகப் படித்து , வேலை கிடைத்தாலும், நிரந்தரமற்ற வேலை நிலைமையை நிரந்தரமாக நாம் பெற்றுள்ளோம் என்பதை மறுக்க முடியுமா!

சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும், அறிவியலை வளர்க்கும் இடமான பல்கலைக் கலகங்களில் பகவத் கீதை போன்ற கட்டுக்கதைகளை கட்டாயப்படுத்துவது என வரும் தலைமுறையின் மூளையை சிந்திக்கும் திறனற்ற உறுப்பாக்கி வருகிறது.

ஆனால், அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய முடிந்தது? ஜல்லிக்கட்டு போல ஒரு எதிர்ப்பலையை உருவாக்க முடியவில்லை. வெகு சில புரட்சிகர முற்போக்கு அமைப்புகளே இதை எதிர்த்து களத்தில் நிற்கின்றனர்.

இந்த அவலத்தின் அடித்தளமாக இருப்பது இது போன்ற மத பண்டிகைகள் கருத்தியல் ரீதியாக நமது மூளையில் சம்மனம் போட்டு உட்கார்ந்துள்ளதும் ஒரு காரணம் தானே.

இவ்வாறு எதார்த்த நிலைமைகளில் இருந்து சிந்தித்தால் கல்விக் கடவுளாம் சரஸ்வதி எங்கிருக்கிறாள் என்ற கேள்வி வருவது இயல்பு தானே.

காசிருப்பவனுக்குத் தான் கல்வி என்றால் , சரஸ்வதி பணக்காரர் களுக்கு மட்டும் தான் அருள் புரிவாரா?

ஆனாலும் படித்த பணக்காரர்களுக்கும் படிப்புக் கேற்ற வேலை இல்லை எனும் நிலையில் கல்வி என்பது வெறும் கொள்ளைக்கான சரக்காகி விட்டது என்பது தானே எதார்த்தம்.

இதற்கும் மேலே தற்போது நீட் தேர்விலும் ஆள்மாறாட்டம் எனும் போது இன்றைய சமூகத்தில் கல்வியின் நிலை என்ன?  அதற்காகவே இருப்பதாகச் சொல்லும் சரஸ்வதி தான் எங்கே?

நீட் தேர்விற்கு எதிரான தெருமுனைக்கூட்டம் – பு.ஜ.தொ.மு-ஐ.டி ஊழியர்கள் பிரிவு – தோழர்.சரவணகுரு

இது தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளப் போகிறோமா?

இல்லை நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர்ந்து சிந்தித்து செயல்பட போகிறோமா?

என்னதான் இருந்தாலும், இது தனது தனிப்பட்ட நம்பிக்கை விவகாரம் என்று எடுத்துக் கொண்டாலும், சரஸ்வதிக்கு பூசை செய்யும் போதும், கண்மூடி கும்பிடும் போதும் நம் கண் முன் நடந்தேறிய இரத்த சாட்சியான அனிதா, மனசாட்சியுள்ள ஒவ்வொருவருடைய மனக் கண்ணிலும் வருவது இயல்பு தானே!

பின் குறிப்பு:

மதம் என்றென்றும் மக்களை ஒடுக்குவதற்கு ஆளும் பிற்போக்கு அரசால் பயன்படுத்தப்படும் ஒரு கருவி தான்.

சிந்திக்கும் மூளையற்ற தக்கைகளாக மக்களை வைப்பதன் மூலம் ஆளும் வர்க்கம், தனது சுரண்டலை எளிதாக செய்ய முடியும். மக்களை அடிமைகளாக வைத்திருக்க முடியும் என்பதை உணர முற்படுவோம்.

  • பழனி

Permanent link to this article: http://new-democrats.com/ta/saraswathi-pooja-ayudha-pooja-2019-celebration/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ரஜினி என்னும் அரசியல்வாதி – ஒரு ரஜினி ரசிகரின் பார்வையில்

இப்பொழுதும் ரஜினி நல்ல ஒரு நடிகர்தான். பாரதிய ஜனதா இயக்கும் இந்தத் "தேர்தல்"-ல் அவர் வழக்கம் போல சிறப்பாக செயல்படுவார் என்றே நடக்கும் நிகழ்வுகள் கூறுகின்றன. "ரஜினி"...

தொழில்துறை நிலையாணை சட்டம் – கர்நாடக அரசின் தொழிலாளர் விரோத போக்கு

இப்படிப்பட்ட சூழ்நிலையிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள ஐ.டி தொழிலாளர்களாகிய நாம் சங்கமாக ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர் சட்ட உரிமைகளை பாதுகாக்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் தொடர்ந்து போராட வேண்டும்.

Close