அனிதாவின் போராட்டத்தை தொடர்வோம்

SEETHA WRITES என்ற வலைத்தளத்தில் வெளியான பதிவு இது. பல பத்தாண்டுகள் போராட்டங்களின் மூலம் பெறப்பட்ட உழைக்கும் மக்களுக்கான சமூக நீதி மீது ஆளும் மேட்டுக்குடி வர்க்கம் தொடுத்துள்ள எதிர் தாக்குதலின் ஒரு அம்சத்தை இந்த பதிவு பேசுகிறது.

பாகிஸ்தானில் மலாலா யூசுஃப் சாய் கல்வி கற்பதை தடுப்பதற்கு இசுலாமிய அடிப்படைவாதிகள் அவளை துப்பாக்கியால் சுட்டு படுகாயப்படுத்திய போது ஒட்டு மொத்த உலகமும் அதை கண்டித்தது, அவளுக்கு மிகச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து, அவளது உயிரை காப்பாற்றி, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்ற வைத்தது. அமைதிக்கான நோபல் பரிசு கூட அவளுக்கு வழங்கப்பட்டது.

அனிதாவும் அதே மாதிரியான தாக்குதலைத்தான் எதிர் கொண்டாள். மருத்துவர் ஆக வேண்டும் என்ற அவளது கனவு உழைக்கும் மக்களுக்கான சமூக நீதியின் மீது இந்த அரசும், இந்துத்துவ அடிப்படைவாதிகளும் நடத்திய தாக்குதல் மூலம் சிதைக்கப்பட்டது. தனது கல்வி கற்கும் உரிமை மறுக்கப்படுவதை எதிர்த்த போராட்டத்தில் அவள் தனது உயிரை இழந்தாள்.

ஆனால், அறிவுஜீவிகளோ, மாற்று துறைகளில் படிப்பது, இன்னொரு முறை முயற்சிப்பது என்று பேசிக் கொண்டிருகின்றனர்.

“நானும் அனிதா” என்று சூளுரைத்துக் கொண்டு சமூக நீதிக்கும், உழைக்கும் மக்களின் கல்வி கற்கும் உரிமைக்குமான போராட்டத்தை தொடர்வோம்.

ஒரு காலத்தில் இந்தியா என்ற ஒரு நாட்டில்….

SEPTEMBER 6, 2017 BY SEETHA SEKAR

நீண்ட காலத்திற்கு முன்பே, ஒரு நாடு இருந்தது, அங்கு எல்லோரும் சுதந்திரமாக கனவு காணலாம், அவர்கள் சமத்துவத்தை நம்பினர். அங்கு சமத்துவம் என்பது ஒரு கனவு அல்ல, மாறாக பல மகத்தான மனிதர்களின் போராட்டங்களால் அது சாத்தியமானது என்பதே உண்மை.

பின்னர் ஒரு பிரிவினர் சமுதாயத்தில் அதிகாரத்துக்கு வந்ததும் படிப்படியாக சமத்துவமின்மையை அறிமுகப்படுத்தினர். காலப்போக்கில், அவர்களின் மெதுவான, நிலையான முன்னேற்றமானது அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப தேசத்தை மாற்றியது. அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு எதிராக பேசிய மக்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்த ஆரம்பித்தனர். நாட்டில் பெரும்பான்மையினர் தைரியமில்லாதவர்களாக அல்லது அவர்களுக்கு மூன்று வேளை உணவு, தங்குமிடம் கிடைக்கும்வரை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை கவலைப்படாமல் தங்களை சுற்றி நடக்கும் கொடூரங்களை கண்டு கொள்ளாமல் இருந்தனர். நல்லதுதான் நடக்கும் என்று நம்புகிறோம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள்.

அத்தகைய சமூகத்தில் ஒரு சிறுமி வாழ்ந்து வந்தாள், தான் ஏழை குடும்பத்தில் பிறந்திருந்தாலும் மிகவும் உயர்ந்த இலக்குகளை வளர்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய நீண்ட நாள் கனவு மருத்துவராவது, அந்த லட்சியத்தை அடைவதற்கு இரவு நேரங்களில் உறங்காமல் படித்து கடுமையான உழைப்பு செலுத்தினாள். கடுமையான உழைத்தால் தான் கண்ட கனவை நிறைவேற்றிட முடியும் என்று நம்பினாள். இந்த அரசு அமைப்பு திடீரென்று விதிகளை மாற்றி அநீதியாக நம்மை படுகுழியில் தள்ளும் என்பதை அந்த அப்பாவி சிறுமி அறிந்திருக்கவில்லை. ஏழையின் உழைப்பில்தான் பணக்காரர்களின் செல்வம் அதிகரித்துக் கொண்டு போகிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. துரதிர்ஷ்டமாக ஏற்கனவே சொன்னது போல ஏற்றத்தாழ்வோடு இயங்கும் இந்த சமூகம் அவளை வாழவிடவில்லை, ஏழைக்கும் பணக்காரனுக்கும் மீண்டமொரு மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கும்படியான திட்டத்தை கொண்டுவந்துள்ளனர்.

மருத்துவம் படிக்க வேண்டுமென்றால் பொதுநுழைவுத் தேர்வு (நீட்) எழுத வேண்டும் என்று கொண்டுவரப்பட்டதை பற்றித்தான் பேசுகிறேன். இந்தத் தேர்வு என்பது ஏழை கிராமப்புற மாணவர்களுக்கு மிகப் பெரிய தடையாக மாறி உள்ளது. அவர்களை மருத்துவராக முடியாமல் செய்து விட்டது. ஏனென்றால் பயிற்சி மையங்களுக்கு பணத்தை கொட்டி தேர்வை எதிர்கொள்ளும் பயிற்சியை பெற முடியாத காரணத்தினால் அவர்களால் அந்தத் தேர்வில் வெற்றிகொள்ள முடியாது. பணக்கார பிள்ளைகள் மட்டுமே பயிற்சி கட்டணம் செலுத்தி படித்து தேர்வை சந்திக்க முடியும். அவர்களால் மட்டுமே மருத்துவராக முடியும். எனவே பணக்காரர்களுக்காகவே இவ்வாறான பொது நுழைவுத் தேர்வை கொண்டுவந்துள்ளனர் என்பதுதான் உண்மை. ஏழை கிராமப்புற மக்களுக்கு கதவு அடைக்கப்பட்டு விட்டது.

பொதுநுழைவுத் தேர்வு என்பது மாணவர்கள் பொதுவாக கற்றுக் கொண்டதை சோதிப்பதாக இல்லை. அத்தகைய தேர்வை எழுதுவதற்கு முன்பே தனது நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தது என்பதை அவள் புரிந்து கொண்டிருக்கவில்லை. தனக்கு நீதி கிடைக்கும் என்று முட்டாள்தனமாக நம்பினாள். அதனால்தான் நியாயம் கிடைக்கும் என்று நீதிமன்றத்திற்கு சென்றாள். பள்ளி இறுதி பொதுத்தேர்வில் 1172/1200 என்ற சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், தான் ஏழையாக பிறந்த நிமிடத்திலிருந்தே தனக்கு எதிராக இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளும் அறிவு அவளுக்கு இல்லை.

அவள் பொது நுழைவுத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் மருத்துவராகும் கனவு சிதைக்கப்பட்டதை உணர்ந்ததும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டாள். தன்னுடைய கனவை எப்படியாவது நிஜமாக்க அவளால் முடிந்த அனைத்து முயற்சிகளும் எடுத்தாள் ஆனால் நீதி அவளுக்கு கைகொடுக்கவில்லை.

மருத்துவம் கிடைக்கலனா என்ன பல்மருத்துவர் படிக்கலாம் அல்லது விவசாயம் அல்லது வேறு துறை சார்ந்து மேற்படிப்பு படிக்கலாம் என்று சில அறிவுஜீவிகள் சமூக வலைத்தளங்களில் கூவுகிறார்கள். நாம் விருப்பபட்ட மேற்படிப்பு எது என்று தேர்வு செய்யும் உரிமை இனிமேலும் இல்லை என்பதை அப்பாவியான அவள் உணர்ந்திருக்கவில்லை.

இன்னும் சில அறிவு ஜீவிகள், இன்னொருமுறை பயிற்சி எடுத்த பிறகு பொதுநுழைவுத் தேர்வை எதிர்கொண்டிருந்தால் வெற்றி அடைந்திருப்பாள் என்கிறார்கள். ஆனால் எத்தகைய பல இன்னல்களை தாண்டி அவளது பள்ளிப்படிப்பை முடித்திருந்தாள் என்பது இந்த அறிவு ஜீவிகளுக்கு புரியப் போவதில்லை. வருடம் முழுக்க தனிமையில் ஒரு மாதம் கூட வீணடிக்காமல் கடின உழைப்பு செலுத்தி படித்தது இந்த அறிவு ஜீவிகளின் கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? ஒரு மாதம் கூட அவளால் வீணாக்க முடியாது என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை.

நிறைய யோசித்து பார்த்த பிறகுதான் இதைத்தவிர வேறு சரியான வழி அவளுக்கு தோன்றாமல், அபாயகரமான இந்த உலகத்தை விட்டு வெளியேறி தன்னுடைய கனவையும் வாழ்க்கையும் முடிவுக்கு கொண்டுவந்துவிட்டாள். இதோடு இந்தக் கதையும் முடிவடைகிறது.

இந்தக் கதை நமக்கு சொல்லவருவது, நீங்கள் அதிகாரத்திலோ அல்லது பணவலிமை மிக்க வர்க்கமாகவோ இல்லையெனில் உங்களுடைய உயர்ந்த கனவை நிஜமாக்க முடியாது. உங்களிடம் செல்வம் இல்லையென்றால் உங்களுக்கு மதிப்பு கிடையாது.

ஓ! ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன் – இங்கு ஒரு லாபகரமான தொழில் உள்ளது. அதற்கு எந்தவித படிப்பறிவும் தேவையில்லை. நம்ப முடிகிறதா உங்களால்? ஆமாம் உண்மைதான். பள்ளியில் காலடி வைக்காமல் இருந்தாலும் பரவாயில்லை நீங்கள் கல்வித்துறை அமைச்சர் ஆகலாம். நீங்கள் அரசியவாதி ஆக கனவு காணுங்கள். ஏனென்றால் அவர்கள்தான் இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்க வந்தவர்கள். ஆனால் மக்களுக்கு தீங்கோ நல்லதோ அதெல்லாம் கவலை கிடையாது. புதிய இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறோம்!

Once upon a time in India….

Permanent link to this article: http://new-democrats.com/ta/say-i-am-anitha-and-continue-the-fight-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ரூ 40 கோடி லஞ்சம்? கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி!

பிரதமர் கருப்புப் பணத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்த விரும்பியிருந்தால் எஸ்ஸார், அம்பானிகள், அதானிகள், பங்கேற்பு குறிப்புகளை வாங்கியவர்கள், வரியில்லா சொர்க்கங்கள் வழியாக வரும் முதலீடுகள் அல்லது...

தொடங்கியது சி.டி.எஸ்-ன் கொலைவெறி தாக்குதல்

சி.டி.எஸ்-ன் இந்த செயல்கள் - பொய்யாக "underperformer” என்று முத்திரை குத்துவது, மிரட்டி ஏமாற்றி பதவி விலகல் கடிதம் வாங்குவது இவை இரண்டுமே சட்ட விரோத நடவடிக்கைகள்....

Close