ஹாக்கிங், ஐன்ஸ்டைனின் அறிவார்ந்த பணிவும் இந்துத்துவாவின் மூடத்தன செருக்கும்

 “ஐன்ஸ்டீனின் E=mc2-ஐ விட சிறந்த அறிவியல் கோட்பாடு வேதங்களில் இருப்பதாக ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியிருக்கிறார்” – மோடியின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன்.

“அறிவு தேடலுக்கான மிகப்பெரிய எதிரி அறியாமை இல்லை, மாறாக, தனக்கு எல்லாம் தெரியும் என்ற மூடத்தனம்தான்” – ஒரு வரலாற்று ஆசிரியர்.

“நான் வளராத ஒரு குழந்தையாகவே “எப்படி?”, “ஏன்?” என்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறேன். அவ்வப்போது விடையை வந்தடைகிறேன்” – ஸ்டீபன் ஹாக்கிங்

எனக்கு எல்லாம் தெரியும், நமது முன்னோர்கள் எல்லாவற்றையும் கண்டுபிடித்து விட்டார்கள் என்பது ஹர்ஷவர்தன், மோடி போன்றவர்களின்  இந்துத்துவ பாரம்பரிய மூடத்தனம்.

கற்றது கையளவு, கற்க வேண்டியது  மலையளவு என்ற அறிவின் அடக்கத்தோடு வாழ்நாள் முழுவதும் தேடலில் ஈடுபடுவது ஐன்ஸ்டைன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் பாரம்பரியத்தின் பணிவு.

1905-ல் E=mc2 என்ற சிறப்பு சார்பு கோட்பாட்டை கண்டுபிடித்த பிறகு அத்தோடு நின்று விடாமல், அதை நியூட்டனின் ஈர்ப்பு விசை கோட்பாட்டுடன் பொருத்தும் முயற்சியில் இறங்கி 1915-ல் பொது சார்பு கோட்பாட்டை வெளியிட்டார் ஐன்ஸ்டீன்.  பின்னர் குவாண்டம் இயற்பியல் பற்றிய விவாதங்களில் ஈடுபட்டு அது தொடர்பான அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார்.

E=mcபற்றிய வீடியோ

  • E என்றால் ஆற்றல் இயக்க ஆற்றல், மின் ஆற்றல், காந்த ஆற்றல் இவை தொடர்பாக ஆய்வு செயத மைக்கேல் ஃபாரடே
  • m என்றால் நிறை. வேதி வினைகளில் நிறை மாறா கோட்பாட்டை கண்டுபிடித்த அன்டோன் லவாசியே.
  • c என்பது ஒளியின் வேகம் – மின் விசையும், காந்த விசையும் இணைந்த மின்காந்த கோட்பாட்டை முழுமைப்படுத்தி ஒளி உள்ளிட்ட மின்காந்த அலைவீச்சின் அறிவியல் கோட்பாட்டை உருவாக்கிய ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்.
  • c2 – ஆற்றலை கணக்கிட வேகத்தின் வர்க்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிரூபித்த 18-ம் நூற்றாண்டின் எமிலி து சாட்லே.

இந்த வீடியோ பற்றிய தமிழ் விளக்கம்

ஐன்ஸ்டீனின் பொது சார்பு கோட்பாட்டின்படி காலவெளி பெருவெடிப்பில் தொடங்கி கருந்துளைகளில் முடிகிறது என்று ரோஜர் பென்ரோஸ் என்ற கணிதவியலாளருடன் இணைந்து, 1973-ல் நிரூபித்துக் காட்டினார் ஸ்டீபன் ஹாக்கிங். அதைத் தொடர்ந்து, பெருவெடிப்பு  எல்லையற்ற அடர்த்தியுடன் கூடிய “ஒருமை”ப் புள்ளியாக இருக்கும், அந்தப் புள்ளியில் அறிவியல் விதிகள் அனைத்தும் செல்லாமல் போய் விடும் என்ற முடிவை ஆய்வு செய்ய குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளை பயன்படுத்தினார்.

1983-ல் பெருவெடிப்பின் முதல் சில தருணங்களில் தாக்கம் செலுத்தும் குவாண்டம் விளைவுகளின் அடிப்படையில்   “தொடக்கமும் முடிவும் இல்லாத அண்டம்” என்ற கோட்பாட்டை முன் வைத்தார், ஹாக்கிங். அதன்படி பெருவெடிப்பிற்கு பின் ஒரு சிறு புள்ளியிலிருந்து இன்று நாம் பார்க்கும் அண்டத்தின் ஒரு கருவடிவாக அதி வேகமான விரிவாக்கம் நடந்தது.

இந்த கோட்பாடு தோற்றுவித்த புதிய கேள்விகளுக்கு விடை தேடி தான் இறப்பதற்கு இரண்டு வாரத்துக்கு முன்பு ஒரு அறிவியல் கட்டுரையை முடித்திருக்கிறார், ஹாக்கிங். அவரது “A Smooth Exit From the Eternal Inflation (முடிவில்லாத விரிவாக்கத்திலிருந்து சுமுகமான வெளியேற்றம்)” என்ற இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு முன்னணி அறிவியல் பத்திரிகையின் பரிசீலனையில் உள்ளதாக சொல்கிறது இங்கிலாந்தின் டெலிகிராப் நாளிதழ்.

ஹர்ஷவர்தன்  போன்ற  மதவாத முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதா அல்லது ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்களின் அடியொற்றி நடப்பதா என்பதுதான் நம் முன் நிற்கும் கேள்வி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/scientific-quest-and-religious-obscurantism/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஊழலை பேசினால் சஸ்பெண்டா? – மாநகர பேருந்து நிர்வாகத்துக்கு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கண்டனம்

ம மீம் தயாரிப்பு : பிரவீன்

தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை

இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை  குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது....

Close