“நீட்”ஐ ரத்து செய் : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்

“நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரிபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று நடத்திய தெருமுனைக் கூட்ட உரைகள் – வீடியோ, ஆடியோ

நிறைய மண்ணை அலசி அலசி ஒதுக்கி கிடைக்கும் தேடலில் தான் அபூர்வ அதிசய வைரங்கள் கிடைக்கும். மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்னும் கருத்துக்கு ஏற்ப வைரங்களை கண்டுபிடித்து பட்டை தீட்டிய தருணம் இந்த தெருமுனைக் கூட்டம்.

சங்க செயலாளர் சுகேந்திரன் 

audio

சங்க துணைத்தலைவர் காசிராஜன்

விவசாயிகள் தற்கொலை, நோயாளிகள் தற்கொலை, போலீசார் தற்கொலை, IT ஊழியர் தற்கொலை, இப்பொது மாணவர்கள் தற்கொலை என்று இந்தியா தற்கொலை தலைநகரமாக மாறியுள்ளது என்றும், அனிதாவின் தற்கொலை சாதாரணமாக கடந்து போக இயலாத தற்கொலை என்றும் செல்லும் பாதை சரியான ஜனநாயக பாதை இல்லை என்றும் பேசினார்.
audio

சங்க செயற்குழு உறுப்பினர் சரவணன்

ஆடியோ

சங்க துணைத் தலைவர் வாசுகி சீனிவாசன்

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அனிதா, பிளஸ் டூ தேர்வில் 1,176 மதிப்பெண் எடுத்திருந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பே தாயை இழந்த பெண், சுமை தூக்கும் தொழிலாளியின் மகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் படித்தவர் என மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்து சாதிக்க துடித்த மாணவியின் மரணத்திற்கு யார் பொறுப்பு ?

சங்கத்தின் சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன்

“நீட்” தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவி அனிதா தற்கொலை சம்பவத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் மீண்டும் “நீட்” தேவையில்லை எனக் கோரி போராட்டங்கள் தீவிரமாகியுள்ளன.

“நீட்” தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோரும் சட்ட வரைவை தமிழக அரசு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. சட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பதாக தொடக்கத்தில் மத்திய அரசு கூறியது. ஆனால், பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சட்ட வரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது, “தமிழக அரசு உத்தேசித்துள்ள “நீட்” விலக்கல் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது” என்ற தனது நிலையை மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

இதனால் தமிழக அரசின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த தீர்ப்பால் தமிழகத்தில் பிளஸ் டூ முடித்து விட்டு அதிக மதிப்பெண் பெற்றபோதும், நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளில் சேர முடியாத மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக கருத்தை பதிவு செய்தார் .

சங்க பொருளாளர் ராஜதுரை

IT ஊழியர்கள் பொது பிரச்சனைக்கு பேசுவார்கள் என்பதையும் IT ஊழியர்கள் அனிதா நீட் பிரச்னையை தங்கள் பிரச்சனையாக பார்ப்பதையும் உணரமுடிந்தது. இந்த தெருமுனை கூட்டம் IT ஊழியர்கள் சமூக அநீதிதிளுக்கு எதிராக  தமது எதிர்ப்பை பதிவு செய்வதன் ஒரு தொடக்கம். இனி சமூக விழிப்புணர்வுக்காக மக்கள் மத்தியில் போராட மாரத்தான் ஓட்டம் போல, போராட்டங்கள் மூலம் எதிர்ப்புகளை தெரிவிக்க IT ஊழியர்கள் தயாராகி  இருக்கிறார்கள்.

வீடியோ பதிவு & அப்லோட், உரை சுருக்கம் – காசிராஜன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/scrap-neet-ndlf-meeting-speeches/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மாலை 7 மணிக்கு மேல் வேலை செய்யும் பெண்களுக்கு வாகன வசதி

அவ்வகையில் பத்து மணிக்கு தங்கள் பகுதியை சென்றடையும் இவர்கள், வீடு சென்று சேரும் வழி பாதுகாப்பானதாக இருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியாது.

புரட்சியாளன் பகத்சிங்கை நினைவுகூர்வோம்!

பகத்சிங்கின் நினைவு நாளான மார்ச் 23, 2017 அன்று, அனைத்து ஆண், பெண் நண்பர்களும், சிவப்பு உடை உடுத்தி புரட்சியாளர் பகத்சிங், அவரது புரட்சிகர தோழர்கள் ராஜ்குரு,...

Close