பாலியல் தொல்லைக்கு எதிராக பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு

தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 50-ல் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் 2015-16ம் ஆண்டில் பாலியல் தொல்லை தொடர்பான புகார்கள் 26% அதிகரித்திருக்கின்றன. விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ, இன்ஃபோசிஸ் ஆகியவை இதில் முதலிடம் வகிக்கின்றன. புகார்களில் 80% பெண்கள் அதிகமாக பணிபுரியும் ஐ.டி நிறுவனங்களிலும், வங்கிகளிலும் பதிவாகியுள்ளன.

sexual-harassment-graph

படம் : நன்றி economictimes.indiatimes.com

பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு, கௌரவத்துடன் பணி புரிவதற்கான உரிமை இரண்டும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் ஆகும். மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 14,15 பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் செய்யப்படும் சமத்துவம், 21 பிரிவின் கீழ் உறுதி செய்யப்படும் உயிர் வாழ்வதற்கான உரிமை மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமை, எந்த ஒரு தொழிலையும் செய்வதற்கான உரிமை ஆகியவற்றில் பாலியல் தொல்லைகள் தவிர்த்த பாதுகாப்பான பணிச் சூழலும் அடங்கியுள்ளது.

sexual-harassment-in-nifty-50பணியிடத்தில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை 1993-ம் ஆண்டிலேயே இந்திய அரசு அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. ஆனால், அதன் பிறகும் 20 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் 2013-ம் ஆண்டில் பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட்டது.

“பணியிடத்தில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் (தடுப்பது, தடை செய்வது, நிவர்த்திப்பது)” என்ற அந்தச் சட்டத்தின்படி நிறுவனங்கள்

 • பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடச் சூழலை உருவாக்கித் தர வேண்டும்;
 • பாலியல் தொல்லை தொடர்பான எச்சரிக்கைகளை காட்சிக்கு வைக்க வேண்டும்;
 • ஊழியர்கள் மத்தியில் இந்தச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்;
 • இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் புகார் தெரிவிக்க விரும்பும் பெண்ணுக்கு அது தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும்.

sexual-harassment-womenபாலியல் தொல்லை என்பதில்

i) தொடுதல் அல்லது நெருங்குதல்

ii) பாலியல் சலுகைகள் கோருதல், வற்புறுத்துதல்

iii) பாலியல் ரீதியிலாக கமென்ட் அடித்தல்

iv) பாலியல் படங்களை காட்டுதல்

v) உடல் ரீதியான அல்லது பேச்சிலான அல்லது வேறு வகையிலான பாலியல் தன்மையிலான செயல்பாடுகள்

அடங்கும்.

பாலியல் தொல்லைகள் மூலம் பெண் ஊழியரை அச்சுறுத்துவது என்பதில் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ
i) அவரது பணியில் சலுகைகள் வழங்குவதாக உறுதி அளிப்பது.
ii) அவரது பணியில் பாதகமான விளைவுகள் குறித்து மிரட்டுவது.
iii) இப்போது அல்லது எதிர்காலத்தில் அவரது வேலை பாதுகாப்பு குறித்த மிரட்டல்.
iv) அவரது பணியில் குறுக்கிடுவது. அல்லது அச்சுறுத்தும்படியான அல்லது தாங்கிக் கொள்ள முடியாதபடி அவரது பணிச் சூழலை உருவாக்குவது
v) அவரது உடல்நலத்தையும், பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் அவமதிப்பது

ஆகியவை அடங்கும்.

பாதிக்கப்பட்ட எந்த ஒரு பெண்ணும் இதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் அல்லது உள்ளூர் குழுவிடம் எழுத்து ரீதியாக புகார் அளிக்கலாம். இது தொடர்பான புகார்களை விசாரிக்கும் குழுவின் தலைவராக நிறுவனத்தில் பணி புரியும் ஒரு மூத்த பெண்  (அல்லது அதற்கு இணையான நபர்) இருக்க வேண்டும்.

விசாரணை காலத்தின் போது, பாதிக்கப்பட்ட பெண்ணின் கோரிக்கையின் பேரில் அவரை அல்லது குற்றம் சாட்டப்பட்டவரை வேறு இடத்துக்கு பணி மாற்றம் செய்யவோ, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மாதங்கள் வரை விடுப்பு அளிக்கவோ, தேவைப்படும் வேறு நிவாரணத்தை வழங்கவோ செய்யலாம். வழங்கப்படும் விடுப்பு அவருக்கு வழக்கமாக உரிமையுள்ள விடுப்புகளுக்கு கூடுதலாக இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், வலி, துயரம், உளரீதியான துன்பம் ஆகியவற்றையும், பாலியல் தொல்லை நிகழ்வால் அவரது பணி வாழ்வில் ஏற்பட்ட இழப்பு உடல்ரீதியான அல்லது உளரீதியான சிகிச்சைக்கு ஆன மருத்துவ செலவுகள் ஆகியவற்றை கணக்கில் கொள்ள வேண்டும்.

2016 மார்ச் மாதம் முடிவடைந்த நிதியாண்டில்  சில நிறுவனங்களில் புகார் எண்ணிக்கை

 • விப்ரோ – 111 புகார்கள் (11% அதிகரிப்பு)
 • ஐ.சி.ஐ.சி.ஐ – 87 புகார்கள் (7.4% குறைவு)
 • இன்ஃபோசிஸ் – 62 புகார்கள் (17% அதிகரிப்பு)
 • டி.சி.எஸ் – 34 புகார்கள் (இரண்டு மடங்காக அதிகரிப்பு)
 • ஆக்ஸிஸ் வங்கி – 32 புகார்கள் (5.9% குறைவு)
 • ஸ்டேட் பேங்க் – 27 புகார்கள் (93% அதிகரிப்பு)
 • டெக் மகிந்த்ரா – 26 புகார்கள் (முந்தைய ஆண்டு 0)
 • இண்டஸ் இண்ட் வங்கி – 20 புகார்கள் (முந்தைய ஆண்டு 6)

புகார் எதுவும் இல்லை என்று தெரிவித்த நிறுவனங்களின் எண்ணிக்கை 19-ல் இருந்து 15 ஆக குறைந்துள்ளது.

2015-16ல் திடீரென்று பாலியல் தொல்லைகள் அதிகரித்து விட்டதாகவும், அதற்கு முன்னர் ‘பாரதம் பெண்களை மதித்து போற்றும் புண்ணிய பூமியாக இருந்தது’ என்றும் இதற்கு பொருள் இல்லை. ஆணாதிக்கம் நிறைந்த, புராண மூட நம்பிக்கைகள் இன்னும் ஆதிக்கம் செலுத்தும் நமது சமூகத்தில் பாலியல் ரீதியான தொல்லைகளை வெளிப்படையாக எதிர்கொள்வது கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு இழிவானதாக கருதப்படுகிறது. முன்னேறிய நாடுகளில் வேலை போய் விடும் என்ற பயத்தில் புகார்களை தவிர்ப்பது என்ற காரணத்தோடு இந்தியாவில் பிற்போக்கு கலாச்சார பின்னணியும் கூடுதல் சுமையாக பெண்களை அழுத்துகிறது.

sita

பெண்ணை ஆணின் அடிமைப் பொருளாகக் கருதும் ‘பாரத’ கலாச்சாரம்.

இப்போது பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பது புகார் தெரிவிப்பதற்கான அமைப்புகளும், வழிமுறைகளும், விழிப்புணர்வு நடவடிக்கைகளும் பயமில்லாமல் புகார் தெரிவிப்பதை ஓரளவு சாத்தியமாக்கியிருப்பதால் என்று சொல்லலாம்.

10-15% முன்னணி நிறுவனங்கள் இன்னும் இந்த சட்ட வழிமுறைகளை அமல்படுத்தவில்லை. சிறு நிறுவனங்களிலும், பெரும் எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆயத்த ஆடை உற்பத்தி போன்ற துறைகளிலும், வீட்டுப் பணியாளர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் போன்ற முறைசாரா துறைகளிலும் பாலியல் தொல்லைக்கு எதிரான சட்ட பாதுகாப்பும், விழிப்புணர்வும் இல்லை.

ஆண், பெண் ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளுக்கு எதிராக உறுதியாக போராட வேண்டும். ஐ.டி நிறுவனங்களில் மட்டுமின்றி பிற கல்வி, மருத்துவ, தொழில் நிறுவனங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதில் பங்களிப்பு செய்ய வேண்டும். ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கமாக அணி திரள்வது பெண்களுக்கான பாதுகாப்பான பணிச் சூழலை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றும் என்பது உறுதி.

செய்தி ஆதாரம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/sexual-harassment-of-women-at-workplace-act-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
“நாங்கள் இருக்கிறோம் உங்களோடு” – விவசாயிகளுக்கு ஐ.டி ஊழியர்கள் நீட்டிய ஆதரவுக் கரம்!

விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள் ஆனால் அது முறிக்கப்பட்டு விட்டது. அதை முறித்துவிட்டு என்ன டிஜிட்டல் இந்தியா? டிஜிட்டல் இந்தியாவில் ஒரு கிலோ அரிசியை டவுன்லோடு...

ஐ.டி ஆட்குறைப்பு: கனவு கலைகிறது, நிஜம் சுடுகிறது!

வேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற் போலப் புரிய வைக்கிறது, ஐ.டி துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.

Close