மார்ச் 28, 2017 அன்று மாலை சிறுசேரி சிப்காட் எதிரில் தங்கள் வாழ்வாதாரங்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்களின் போராட்டம் நடைபெற்றது.
- மாலை 5:30 க்கு ஒரு மணி நேர காவல்துறையின் வாய்வழி அனுமதியுடன், முதலில் 10 பேர்களுடன் துவங்கிய போராட்டம் பின்பு கிட்டத்தட்ட 50 பேர்களுக்கு மேலாக இணைந்து கொண்டனர்.
- SAVE NEDUVASAL, SAVE FARMERS, விவசாயத்தை காப்போம் என்பன போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளுடன் அமைதியான முறையில் SIPCOT நுழைவு வாயில் அருகே நடைபெற்றது.
- போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் ‘Whatsapp மற்றும் Facebook Group மூலம் நண்பர்களுக்குள் போராட்டம் பற்றிய தகவல்கள் பகிரப்பட்டு/பரப்பப்பட்டு ஒன்றினைந்தோம்’ என்றார்கள்.
- முழக்கங்கள் இல்லாமல் வெறும் பதாகைகள் ஏந்தி அமைதியாக நிற்கும் போராட்டமாக அமைந்தது.
- மாலை 6:30 மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
செய்தி, படங்கள் : சுரேஷ்