«

»

Print this Post

விவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சார்பாக நமது நாட்டு விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் வாழ்வாதார நெருக்கடி குறித்து ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுளோம். சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களையும், பிற ஐ.டி ஊழியர்களையும் பின்வரும் நடவடிக்கைகளில் பிரச்சாரத்தில் ஈடும்படி அழைக்கிறோம்.

 • துண்டறிக்கை வினியோகம்
 • சுவரொட்டி பிரச்சாரம்
 • பிரச்சாரத்துக்கான நிதி திரட்டல்
 • சமூக ஊடகங்களில் பிரச்சாரம்

ஐ.டி துறை நண்பர்களே!

விவசாயத்தின் அழிவை தடுப்போம்! விவசாயிகளை வாழ வைப்போம்!
பு.ஜ.தொ.மு-ஐ.டி ஊழியர்கள் பிரிவில் அணிதிரள்வோம்!
விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கான போராட்டத்தில் பங்கேற்போம்!
மத்திய, மாநில மக்கள் விரோத அரசுகளின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை முறியடிப்போம்!

ன்பார்ந்த ஐ.டி துறை நண்பர்களே!

நம்மில் பலர் கிராமத்துடன் மற்றும் விவசாயத்துடன் தொடர்பு உடையவர்களே. நாம் ஆட்குறைப்புப் பிரச்சனையை எதிர் கொண்டிருக்கும் நேரத்தில் விவசாயிகள் அழிவை நோக்கித் தள்ளப்பட்டு வருகிறார்கள்.

இந்த அழிவு தற்செயலாக நடந்தது இல்லை. கடந்த 30 ஆண்டுகளாக, இந்த அரசு (அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றம்) விவசாயத்தை புறக்கணித்து பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக விவசாயிகளை கொள்ளை அடிக்கும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. இன்று ஐ.டி ஊழியர்களின் நெருக்கடிக்கும், விவசாயிகளின் நெருக்கடிக்கும் அடிக்கொள்ளியாக இருப்பது கார்ப்பரேட் லாப வேட்டையே.

 • பசுமைப் புரட்சி என்ற பெயரில் உரம், பூச்சி மருந்து, ஒட்டு விதை போன்றவற்றை புகுத்தி கார்ப்பரேட்டுகளுக்கு புதிய சந்தைகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். மறு பக்கம் நிலத்தையும், சுற்றுச் சூழலையும் நஞ்சாக்கினார்கள்.
 • பாசன கால்வாய்களையும், ஏரிகளையும் பராமரிக்கும் பணியை அரசு புறக்கணிக்க, கார்ப்பரேட்களும், அரசியல்வாதிகளும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தார்கள்.
 • மணலை கொள்ளை அடித்து, ஆற்று நீரையும், நிலத்தடி நீரையும் ஒட்டச் சுரண்டுகிறார்கள்.
 • காவிரி மற்றும் முல்லை பெரியாறில் கர்நாடக, கேரள அரசியல் ஆதாயத்துக்காக தமிழகத்தின் உரிமையை பலி கொடுத்தார்கள்.
 • தஞ்சையில் விவசாயத்தை நலிய வைத்து மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை புகுத்துகிறார்கள்.
 • விளைபொருளுக்கு ஆதரவு விலை, அரசு கொள்முதல் ஆகியவற்றை புறக்கணிக்கிறார்கள்.
 • விவசாயிகளை கடனில் மூழ்கடித்து அவர்களது இரத்தத்தை வட்டியாக உறிஞ்சுகிறார்கள்.
 • இவற்றின் விளைவாக லட்சக்கணக்கான விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகிறார்கள்.
 • தமது வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொள்ள போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்துகிறார்கள், போலீசை குவித்து அச்சுறுத்துகிறார்கள்.

கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா? எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்க்கிறார்களா? ஒரு மாற்றை முன் வைக்கிறார்களா?

விவசாயிகள் மட்டும் அல்ல, ஆலைத் தொழிலாளர்களும், ஐ.டி ஊழியர்களும், அனைவரும் இணைந்து போராடி உண்மையான ஜனநாயகத்தை கொண்டு வருவதே நம் முன் நிற்கும் தீர்வு.

விவசாயத்தின் அழிவை தடுப்போம்! விவசாயிகளை வாழ வைப்போம்!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

மின்னஞ்சல் : combatlayff@gmail.com
தொலைபேசி : 9003198576

Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-with-farmer-it-employees-campaign-to-save-farmers-ta/

2 comments

 1. Vasuki srinivasan

  Phamplets needed for distribution

  1. newdemocrats

   Please contact Union secretary Sugendran in WhatsApp.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
“கிரிக்கெட் வெற்றியை கொண்டாடுவது இந்திய மக்களை இழிவுபடுத்துகிறது” – சரிதானா?

கிரிக்கெட் போன்ற போதை பொருள்கள் மேலே கூறப்பட்ட உண்மையான பிரச்சனைகளைப் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புகின்றன.

அரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்

2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை...

Close