ஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்

ஸ்டெர்லைட் ஆலை இயங்கும் தூத்துக்குடி நகரின் அருகாமை கிராமத்தைச் சேர்ந்த நமது சங்க உறுப்பினர் ஒருவர், நமது கிராம நிர்வாகத்தின் நிலைமை பற்றியும், மக்கள் மூட நம்பிக்கைகள் மூலம் திசைதிருப்பப்படுவது பற்றியும் கூறிய கருத்துக்கள்.

ஞ்சம் என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது. சென்னையில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கும் போது லஞ்சம் வாங்கினாலும், லஞ்சம் வாங்குகிற நபர் “இந்த கைட்லைன்ஸ் இருக்குதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கேள்வியாவது கேட்பார்கள். ஆனால், தூத்துக்குடியில் அந்த கேள்வி கூட கிடையாது. அரசு அதிகாரிகள், லஞ்சத்துக்கு விலை போவேன் அல்லது சாதிக்கு விலை போவேன் என்று சொல்பவர்கள். “வருபவன் என்ன சாதி, என்னுடைய சாதி, சரி influence இருக்கிறது. நான் கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறேன்.” என்பார்கள்.   எந்த guidelines-ம் பார்க்க மாட்டார்கள், யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற தைரியம்தான்.

இதற்கு ஒரு எளிய உதாரணம், என்னுடைய சொந்த அனுபவம் ஒன்று. அரசு ஒரு நீர்த்தொட்டி வைத்தது. ரூ 6 லட்சம் செலவில் கட்டப்பட்ட அந்தத் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்படும், ஆளுக்கு ரூ 5 கொடுத்து தண்ணீர் பிடித்துக் கொள்ளலாம். அந்த தண்ணீர் சுத்திகரிப்புக்கு போய் விட்டு வருகிறது. ஆனால், அந்த சுத்திகரிப்பு filter சுத்திகரிப்பு பண்ணவில்லை. அது fault ஆகி இருக்கிறது. அது fault ஆகி உயர் TDS அளவில் வருகிறது. நான் எடுத்துக் கொண்டு போன TDS மீட்டரில் செக் பண்ணும் போது அந்த தண்ணீரை குடித்தால் கிட்னி ஃபெயிலியர் ஆகும் என்று தெரிகிறது. வி.ஏ.ஓவிடம் “இப்படி செக் பண்ணியிருக்கிறேன். இந்த மீட்டரை எடுத்து பாருங்கள். இப்படி ரீடிங் இருக்கிறது” என்று சொன்னால், அவர் “இது என்ன மீட்டர், இது என்ன அளவு? டி.டி.எஸ்னா என்ன” என்று கேட்கிறார்.

ஒரு வி.ஏ.ஓ-வுக்கு தண்ணீர் தொட்டியில் நீரின் இரசாயன அளவு இவ்வளவு இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லை. இதை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது, இது தண்ணீர்தானே என்று சொல்லி விட்டார்கள். அதன் பிறகு நான் சி.எம் செல்லுக்கு புகார் சொல்லி அப்புறம் என்ன ஆச்சு என்று எனக்கே தெரியாது.

அதே போன்ற அரசு அதிகாரிகள்தான் இன்னும் இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் விஷயத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்கினார்கள், அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்கினார்கள், அரசும் லஞ்சம் வாங்கியது.

முன்பெல்லாம் மக்களிடம் பிரச்சனை பற்றிய முழுமையான விழிப்புணர்வு இருந்ததில்லை. தன் புருசன் கேன்சரில்தான் செத்தார் என்று தெரியாது. “ஏதோ இருந்தாரு செத்து போயிட்டாரு, என் புள்ள செத்து போயிட்டான்” என்று இருந்தார்கள். ஏதாவது பிரச்சனைன்னா கிராமத்துக்கு போய் பூஜை செய்து ஒரு ஆட்டை பலி கொடுப்பது, அல்லது வருடத்துக்கு இரண்டு தடவை சுமங்கலி பூஜை நடத்துவது என்பதுதான் அங்கு சுற்றியிருக்கும் கிராமங்களில் நடந்து வந்தது.

இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் விஷயங்களை தெரிந்து கொண்டு ஒட்டு மொத்தமாக கேள்வி கேட்கும் போது மூர்க்கமாக அவர்களை ஒடுக்குகிறது அரசு.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-government-officials-and-people/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்

"ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க"

கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

கருப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், கருப்புப் பணம் என்பதற்கு வெவ்வேறு பிரிவினர் வெவ்வேறு வகையில் பொருள் கொள்கிறார்கள்.

Close