பண நெருக்கடி, எதிர்கால பயம் – யாருக்கு?

ந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக பாதுகாப்பின்றி உணர்வதாக டைம்ஸ் ஜாப்ஸ் கருத்துக் கணிப்பு ஒன்று கண்டறிந்திருக்கிறது. 1,200க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் ஊழியர்கள் இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்றிருக்கின்றனர்.

போதுமான சேமிப்பு இல்லாமையும் (40%), வேலை போய் விடும் என்ற பயமும் (35%), மாதாந்திர செலவுகளை சமாளிக்க திணறுவதும் (30%), கடன் சுமையும் (20%) அவர்களது மிகப்பெரிய கவலைகளாக உள்ளன. . ஓய்வு பெற்ற பிறகு தேவைப்படும் அளவுக்கு பணம் சேர்த்து வைக்கவில்லை என்று 60% பேர் நினைக்கின்றனர்.

financial-stress

விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பது, பணி பாதுகாப்பை உறுதி செய்வது, கல்விக்காக செலவழிப்பதை குறைப்பது, மருத்துவச் செலவுக்கான உத்தரவாதம், வீடு வாங்கி விற்பதில் சாதகமான நிலைமை ஆகியவை தங்களது பொருளாதார வாழ்வை மேம்படுத்த உதவும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

செய்தி ஆதாரம் : Half of India Inc staff financially stressed

இந்தியாவின் மொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 47 கோடி. அவர்களில் 8 கோடி பேர் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட (கார்ப்பரேட், அரசு) துறையில் பணி புரிகின்றனர். அவர்களிலும் சுமார் 4.6 கோடி பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர். அதாவது, மொத்தம் 47 கோடி உழைப்பாளர்களில் சுமார் 3.4 கோடி (சுமார் 8%) மட்டுமே முறையான வேலையில் உள்ளனர். 92% பேர் முறைசார துறைகளில் கட்டுமான தொழிலாளர்களாக, தற்காலிக ஆலைத் தொழிலாளர்களாக, குறைந்த கூலி கொடுக்கும் சேவைத் துறை ஊழியர்களாக வாழ்க்கை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் ஊழியர்களின் பிரிவுகள்

  • மொத்த உழைப்பாளர்களில் சுமார் 2.6% நிதி, ரியல் எஸ்டேட், வணிக சேவைகள் துறையில் பணிபுரிகின்றனர்.
  • முறையான உற்பத்தித் துறை உழைப்பாளர்களில் 20% பேர் அல்லது சுமார் 30 லட்சம் பேர் மேலாளர்கள், மேற்பார்வையாளர்களாக உள்ளனர்.
  • ஐ.டி துறையில் 37 லட்சம் ஊழியர்கள் (மொத்த தொழிலாளர்களில் சுமார் 0.7%) உள்ளனர்.
  • இவர்களுடன் மத்திய, மாநில அரசு ஊழியர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

2.6% உழைப்பாளர்கள் மட்டும் வேலை செய்யும் நிதி, ரியல் எஸ்டேட், வணிக சேவைத் துறைக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 18.1 வருமானம் போகிறது. உற்பத்தித் துறை மேலாளர்கள், ஐ.டி ஊழியர்கள், அரசு ஊழியர்களின் வருமானம் முறைசார தொழிலாளர்களின் கூலியை விட பல மடங்கு அதிகம் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததே.

கடந்த 20 ஆண்டுகளில் உழைக்கும் மக்களின் நிலையில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

  • 1993-92ல் மொத்த வேலை வாய்ப்பில் 0.9% ஆக இருந்த நிதி, ரியல் எஸ்டேட், வணிக சேவைத் துறையின் பங்கு 2004-05ல் 1.5% ஆகவும், 2011-12ல் 2.6% ஆகவும் அதிகரித்திருக்கிறது.
  • 1999-00ல் 3 லட்சத்துக்குக் குறைவாக இருந்த ஐ.டி/ஐ.டி சேவைத் துறை வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 2016ல் சுமார் 37 லட்சத்தை எட்டி, மொத்த உழைப்பாளர்களின் எண்ணிக்கையில் 0.7% ஆக உயர்ந்திருக்கிறது.
  • உற்பத்தித் துறையில் மேலாளர் தட்டிலும் இது போன்ற வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கவில்லை.

எனவே, 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்ட தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை அடிப்படையிலான சீர்திருத்தங்களான இந்திய மக்கள் தொகையில் மிகச் சிறு பிரிவினருக்கே ஓரளவு வசதியான வாழ்க்கையை அளித்துள்ளது.

Labour Force Work Under Difficult Conditions To Complete Commonwealth Games

இந்த மேல்தட்டு 8% உழைப்பாளர் பிரிவினருக்கே பொருளாதார நிலைமை கவலை அளிப்பதாக இருந்தால், எஞ்சிய 92% தொழிலாளர்களின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அவர்களது குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பது, ஊட்டச் சத்து நிறைந்த உணவு வழங்குவது, மருத்துவ தேவைகளை கவனித்துக் கொள்வது, சுத்தமான சுகாதாரமான வாழ்விடத்தை ஏற்படுத்தித் தருவது இவை எப்படி சாத்தியமாகும்? அனைத்து உழைக்கும் மக்களின் நலன்களை உறுதி செய்ய முடியாத நம் நாடு எப்படி முன்னேறிய, வளமான இந்தியாவாக உருவாக முடியும்?

அனைவருக்கும் சமமாக கிடைக்கும் தரமான கல்வி, மருத்துவம், பாதுகாப்பான வேலை, வாழ்க்கை தேவைகளை நிறைவு செய்ய போதுமான சம்பளம், வரையறுக்கப்பட்ட வேலை நேரம் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் தொழிலாளர் சட்டங்களை கறாராக அமல்படுத்துவது, வீட்டு விலையை ஒழுங்குபடுத்துவது, அனைத்து முதியவர்களுக்கும் ஓய்வூதியம், சலுகை விலை பயணம் உள்ளிட்ட சமூக ஆதரவை வழங்குவது இவற்றை உள்ளடக்கிய செயல்திட்டம், கார்ப்பரேட் துறை ஊழியர்களின் நலன்களை மட்டுமின்றி, நாட்டின் 40 கோடிக்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் நலனளிப்பதாக அமையும்.

poor-children

பெரும்பான்மை மக்கள் வளமாக வாழும் ஒரு சமூகம்தான் அனைவருக்கும் நல் வாழ்க்கையை அளிக்க முடியும். 90% மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாகும் சமூகத்தில் ஒரு சிறுபகுதியினருக்கு மட்டும் நல் வாழ்வு எப்படி சாத்தியமாகும்?

உழைப்பாளர் உரிமைகளை உறுதி செய்தல், தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை பொதுவில் வழங்குவது, வீட்டு விலையை கட்டுப்படுத்துவது ஆகிய இந்த ஜனநாயக கோரிக்கைகள், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், இந்திய கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு நேர் எதிராக உள்ளன. ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பது, கல்வி, மருத்துவத்தில் தனியார் மயம் மூலம் லாபம் ஈட்டும் வாய்ப்புகளை அதிகரிப்பது, ரியல் எஸ்டேட் துறையில் ஊக வணிகத்தில் ஈடுபடுவது அதன் மூலம் பெரும்பான்மை மக்களின் வசிப்பிட செலவுகளை கணிசமாக அதிகரிப்பது, ஓய்வூதிய நிதியம், காப்பீட்டு நிதிகள் மற்றும் பிற சேமிப்பு நிதிகளை நிதித் துறை ஊக வணிகத்தில் ஈடுபடுத்தி லாபம் சம்பாதிப்பது ஆகியவை அவர்களது குறிக்கோளாக உள்ளன. இவற்றின் ஊடாக ஒரு சிறு பிரிவினருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தால்தான் உண்டு.

இவ்வாறாக, கார்ப்பரேட்டுகள் மற்றும் பணக்காரர்களின் நலன்களை முன்னிறுத்தி நம் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகள் அமைப்பு ரீதியாகவும், முறையாகவும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றன. இந்திய உழைக்கும் மக்களின் முன்னேறிய பிரிவுகளில் ஒன்றான ஐ.டி துறை ஊழிர்கள் அனைவரும் தொழிற்சங்கமாற ஒன்று திரண்டு அனைத்து உழைக்கு மக்களின் முன்னேற்றம், சமத்துவம், நீதி ஆகியவற்றுக்காக போராட முன் வர வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/stressed-and-insecure-in-it-job-you-are-not-alone-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
அரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்

2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை...

மலைத் தோட்டங்களில் மக்கி வீழும் கொத்தடிமை வாழ்வு!

பச்சைப் போர்வையென பல்லாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பரந்துகிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், நெடிதுயர்ந்த கழுகு மரங்கள், காய்த்துக் குழுலுங்கும் மிளகு, ஏலக்காய், காப்பித் தோட்டங்கள், பால்வடியும் இரப்பர் மரங்களென...

Close