போலீஸ் யாருக்கு நண்பன் – ஐ.டி ஊழியர்களின் நேரடி அனுபவம்

மீபத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தப் பகுதியில் போராடி வரும் விவசாயிகள்,  பொதுமக்களுக்கு ஆதரவாகவும் தாம்பரம் மெப்ஸ் பகுதியில் ஐ.டி ஊழியர்கள் நடத்திய போராட்டம் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். ஜி.எஸ்.டி சாலையோரமாக ஐ.டி ஊழியர்கள் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பதாகைகளை பிடித்தும் முழக்கங்கள் இட்டும் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த போலீஸ் துறையினர்,

போலீஸ் இரட்டை முகம்

“கற்பனைதான் உண்மை, போலித்தனம்தான் நேர்மை, தணிக்கைதான் பேச்சுரிமை” – போலீஸ் இரட்டை முகம்

“அனுமதி பெற்று போராட்டம் நடத்த வேண்டியதுதானே, எங்களுக்கு அனுமதி கோரி கடிதம் கொடுத்திருந்தால் முறையாக அனுமதி கொடுத்திருப்போமே”

என்று பேசி ஊழியர்களை கலைந்து போகச் செய்தனர்.

ஆம், ‘போலீஸ் அனுமதி பெற்று கூட்டம் நடத்துவதுதான் முறையானது, போலீஸ் உண்மையில் மக்களின் நண்பன்’ என்பதை ஏற்றுக் கலைந்து சென்ற ஐ.டி ஊழியர்கள் தாம்பரம் போலீஸ் நிலையத்தில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கச் சென்றனர்.

அங்கு போலீசின் நாக்கு வேறு திசையில் சுழன்றது. “மெப்ஸ் அருகில் எங்குமே அனுமதி தர முடியாது. அப்படி அனுமதி கொடுக்கக் கூடாது என்று கலெக்டர் உத்தரவு உள்ளது. அப்படி ஏதாவது கூட்டம் நடந்தால் எங்களுக்கு மெமோ கொடுத்து விடுவார்கள்” என்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றனர்.

“வேண்டுமென்றால் தாம்பரம் சண்முகம் சாலை பகுதியில் கூட்டம் நடத்துவதாக எழுதித் தாருங்கள், அனுமதி தருகிறோம்” என்றிருக்கிறார்கள்.

யார் பக்கம் நிற்கிறது போலீஸ் என்பது அம்பலமானது.

யார் பக்கம் நிற்கிறது போலீஸ் என்பது அம்பலமானது.

அதன்படி சண்முகம் சாலையில் ஐ.டி ஊழியர்கள் சார்பில் கூட்டம் நடத்தி பொது மக்கள் மத்தியில் பேசலாம் என்று முடிவு செய்து கடிதம் எழுதி கொடுத்தால்,

“அனுமதிக்கான விண்ணப்பத்தை நீங்கள் இங்கே நேரடியாக கொடுக்க முடியாது” என்று இன்னொரு திசையில் சைடு வாங்கினார்கள்.  ‘கேட்டிருந்தால் அனுமதி கொடுத்திருப்போமே’ என்று அன்று பேசியது வேற வாய் என்று நிரூபித்தார்கள்.

“காவல் ஆணையர் அலுவலகத்தில் போய் கடிதம் கொடுங்கள். அவர்கள் எங்களுக்கு ஃபார்வர்ட் செய்வார்கள்” என்று அலைக்கழித்தார்கள்.

“அனுமதி கொடுக்க தங்களுக்கு அதிகாரமும் கிடையாது, மெப்ஸ் முன்பு கூடுவதற்கு அனுமதி யாருமே கொடுக்கப் போவதில்லை” என்று தெரிந்திருந்தும் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் சமூக பொறுப்புணர்வுடன் கூடியிருந்த ஐ.டி ஊழியர்களிடம் பொய் சொல்லி அலைக்கழித்திருக்கின்றனர், தாம்பரம் போலீஸ் இன்ஸ்பெக்டரும் அவருக்குக் கீழ் வேலை செய்யும் போலீஸ்காரர்களும்.

ஐ.டி துறை நண்பர்களே, போலீஸ் என்பது எப்படி செயல்படுகிறது, அவர்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இது சரியான அனுபவமாக இருந்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tambaram-police-true-colors-revealed-on-neduvasal-struggle/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“7500 ரூபால வாடக கொடுப்பனா, சாப்டுவனா, பிள்ளகள படிக்க வப்பனா”

"நீதான் ஆஸ்பிட்டல் இன்சார்ஜ். ஹோல் இன்சார்ஜ். டாக்டர் இல்லனா, பாரு, பார்மசி இல்லனா, பாரு, லேப இல்லனா, பாரு, எல்லாத்தயும் பண்ணு, ஆனா, நான் சம்பளம் மட்டும்...

டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி!

இந்தியாவில் ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டு அதன் பலன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபமாக கடத்தப்படுகிறது. இதன் விளைவாக கணிசமான மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை...

Close