தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா

வியாபார நோக்கத்துடன் காட்சிகளை வடிவமைத்து கீழான உணர்ச்சிகளைத் தூண்டி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ கலைகளின் இதே காலகட்டத்தில்தான் சமூகத்தில் மக்கள் படும் அவலங்களை வெளிப்படுத்தும் விதமாக பாடல்களும், மீம்ஸ்களும், பதிவுகளும், கட்டுரைகளும் மக்கள் மத்தியிலிருந்து படைப்பாற்றலுடன் வெடித்துக் கிளம்புகின்றன.

இதுபோன்ற மக்கள் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் கலைப் படைப்புகள் அவ்வளவு சீக்கிரம் பிரபலமாவதில்லை. ஏனென்றால் மற்றவரை ஏமாற்றி லாப நோக்கத்தில் இயங்குவதை பிரதானமாக கருதிக்கொண்டு அதையே சரியென்று வாதாடும், அதற்காக தமது அறிவை அடகுவைக்கும் அறிவுஜீவிகள் வாழும் சமூகத்தில் உண்மையான மக்கள் கலைக்கு வெளிச்சம் கிடைப்பது அரிதுதான்.

பல லட்சங்களை கொட்டி தயாரிக்கும் திரைப்பட பாடலின் நோக்கம் வியாபாரம்தான். ஆனால், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது பிரச்சனைகளை இயல்பான குரலில் எந்தவித அங்கீகாரமும் தேடாமல், பணத்தை நம்பி களத்தில் இறங்காமல், தமது சொந்தத் திறமையையும் உழைப்பையும் செலுத்தி பாடல்களாக படைக்கின்றனர். அப்படி நம் எல்லோருக்காகவும் நமது உழைக்கும் வர்க்க சகோதரர்கள் பாடியுள்ள பாடல் இது.

இதை புரிந்து கொண்டு அவர்களது உழைப்புக்கு மரியாதை கொடுக்கும்விதத்தில் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

வாட்ஸ்-ஆப்-இல் வரப்பெற்ற “இந்தப் பாடலை எழுதியவர் தோழர் ஏகாதசி அவர்கள். இசையமைத்தது நான்தான்” என்கிறார் பாடலை பாடும் பெண்.

நல்ல பாடலுடன் இன்றைய பொழுது ஆரம்பமாகிறது.

பாடல் வரிகள் :

தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா
அட கண்டவன்கிட்ட மிதிவாங்குறோமே, தமிழா புத்தியிருக்கா,

எத்தனை மறியல் எத்தனை மரணம், நல்லது நடந்திருக்கா ?
மத்திய மாநில சர்க்காருக்கு மான ரோசம் இருக்கா?

உலகத்துல மூத்த குடி நம்மதானடா
இப்போ ஒல வைக்க தண்ணி இல்ல உண்மை கேளடா

நடுவர்மன்ற தீர்ப்பத்தானே நாடு மதிக்கல
நம்ம ஏழ ஜனங்க வயித்துக்குத்தான் சோறு கிடைக்கல

கோடி கோடியா அடிச்ச மந்திரி குதுகலத்துல
நம்ம விவசாய நாட்டப்பாரு கோவணத்துல

இந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ
பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ

வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம்
இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு வந்தோம்

அழுத கண்ணீரை சேர்த்திருந்தா அனைய கட்டிருப்போம்
அட மூணுபோகம் தானியத்தை விளைய வச்சிருப்போம்

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/tamil-folk-song-on-rights-over-water-and-natural-resources/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போலீஸ் யாருக்கு நண்பன் – ஐ.டி ஊழியர்களின் நேரடி அனுபவம்

"அனுமதி கொடுக்க தங்களுக்கு அதிகாரமும் கிடையாது, மெப்ஸ் முன்பு கூடுவதற்கு அனுமதி யாருமே கொடுக்கப் போவதில்லை" என்று தெரிந்திருந்தும் ஐ.டி ஊழியர்களிடம் பொய் சொல்லி திசை திருப்பியிருக்கின்றனர்.

வெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்

"ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க"

Close