முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்த செய்தி.
தமிழக அதிகாரிகள் இதன் பால் எச்சரிக்கப்படுகிறார்கள்
” சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை “
என்றைக்குமே உழவரை சார்ந்திருக்கிறோம்- திருவள்ளுவர்
வறட்சி மற்றும் கடன் சுமையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர், பிற விவசாயிகள் டெல்லியின் ஜந்தர் மந்தரில் அவர்களது மண்டை ஓடுகளுடன் போராடி வருகின்றனர்.
இளைஞர்களின் போராட்டத்தை சென்னையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மார்ச் 31-ம் தேதி காலை 9 மணிக்கு நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து வரும் விவசாயிகள் அமைதியாக கூடி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக ஒய்.எம்.சி.ஏ மைதானம் முன்பதிவு செய்யப்பட்டது. ஆனால் தமிழக காவல் துறை ஒய்.எம்.சி.ஏ நிர்வாகத்தை அச்சுறுத்தி முன்பதிவை விலக்க வைத்ததால், இடவசதி இல்லாமல் ஆர்பாட்டம் ரத்து செய்யப்பட்டது. அச்சுறுத்தல் பற்றும் நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒய்.எம்.சி.ஏ நிர்வாகம் இதைச் செய்துள்ளது.
ஆனால் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1)(B) குடிமக்கள் அனைவருக்கும் “அமைதியாக ஓரிடத்தில் ஆயுதம் இல்லாமல் கூடுவதற்கான” உரிமையை அளிக்கிறது. எனவே, அமைதியான முறையில் கூடுவதும், எதிர்ப்பை தெரிவிப்பதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமை, இதற்கு எந்த அதிகாரியிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

தமிழக இளைஞர்கள் இ.அ.ச 19(1)(b) வழங்கும் தங்கள் அடிப்படை உரிமையை பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ என்ன அதிகாரம் உள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை
இந்த உரிமை பிரிவு 19(3) குறிப்பிட்ப்பட்டுள்ள சமூக ஒழுங்குக்கு பிரச்சனை வராத வகையில் சில கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இங்கு விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தக்க் கூடியவர்கள் சமூக ஒழுங்கிற்கோ பொது அமைதிக்கோ எந்தக் கெடுதலும் செய்யவில்லை. அவர்கள் கையில் எந்த ஆயுதமும் இல்லை அவர்கள் சாலையை மறிக்கவில்லை அல்லது பொது அமைதியை கெடுக்கும் எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை.
எனவே தமிழக இளைஞர்கள் இ.அ.ச 19(1)(b) வழங்கும் தங்கள் அடிப்படை உரிமையை பயன்படுத்துவதை தடுக்க தமிழக அரசுக்கோ அல்லது காவல்துறைக்கோ என்ன அதிகாரம் உள்ளது என்பது எனக்கு விளங்கவில்லை.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு இங்கு நடப்பது சர்வாதிகாரமல்ல, குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு (3)-ல் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளன.
என்னைப் பொறுத்த வரையில் தமிழ்நாடு போலீசும், அதிகாரிகளும் தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமையை அப்பட்டமான முறையில் மீறியுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும், இல்லாவிடில் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்கு அவர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜெர்மனியில் நடந்த நியுரெம்பர்க் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்ட நாஜிக்கள் “ஆணைகள் ஆணைகளே” என்னும் வாதத்தை முன்வைத்தனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அவர்கள் தங்களது மேல் அதிகாரி ஹிட்லரின் கட்டளைகளை நிறைவேற்ற மட்டுமே செய்ததாக வாதாடினர். ஆனால் இந்த வாதம் சர்வதேச விசாரணை அமைப்பினால் நிராகரிக்கப்பட்டு பெரும்பான்மை நாஜிக் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
எனவே தமிழக இளைஞர்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கும் அராஜக நடவடிக்கைகளை நிறுத்தவிட்டால் தமிழக போலீசும் அதிகாரிகளும் அதற்கு பொறுப்பாக்கப்பட்டு உரிய சட்டத்தின் கீழ் கடும் தண்டனைக்குள்ளவர்கள் என எச்சரிக்கிறேன். அப்போது நியுரெம்பர்க் விசாரணையில் நடத்தது போலவே, மேல் அதிகாரிகளின் கட்டளையைத்தான் நிறைவேற்றினோம் என்ற வாதம் ஏற்கப்படாமல் நிராகரிக்கப்படும்.
மொழிபெயர்த்தவர் : மணி