“லாபம் வேண்டுமா? ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்

ரு நிறுவனம் தான் தயாரிக்கும் பொருளின் விற்பனையை அதிகரித்து, வாடிக்கையாளர்களை அதிகரித்து, லாபத்தை அதிகரிக்கலாம். அதன் மூலம் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். ஆனால், விற்பனை மந்தமாக இருக்கும் போது சம்பள உயர்வை குறைப்பது, ஊழியர்களுக்கான வசதிகளை வெட்டுவது, அடிப்படை சலுகைகளை ஒழித்துக் கட்டுவது, பிற செலவினங்களை கட்டுப்படுத்துவது என தொழிலாளர்களை இறுக்கி பிழிந்து, லாபத்தை உயர்த்தி காட்டுவது இன்னொரு உத்தி.

தற்போது $100 பில்லியன் கிளப்பில் நுழைந்துள்ள டிசி.எஸ் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வரும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் பற்றிய ஒரு ஊழியரின் பார்வை.

நஷ்டம் எப்படி லாபமாக மாறியது?

டி.சி.எஸ் நிறுவனத்துடன், சி.எம்.சி போன்ற 15 துணை நிறுவனங்களையும் இணைத்து டி.சி.எஸ் குழுமம் என்று அழைக்கப்படுகிறது. போன வருடம் வரை லாபம் காட்டிய டி.சி.எஸ் குழுமத்தில் இருக்கும் டி.சி.எஸ் அல்லாத இதர நிறுவனங்கள், இந்த இந்த ஆண்டு இழப்பு காட்டி உள்ளனர். ஆனால், டி.சி.எஸ் மட்டும் லாபம் காட்டுகிறது. இது எப்படி என்று பார்ப்போம்.

இப்போது டி.சி.எஸ்-ன் சி.ஈ.ஓ ராஜேஷ் கோபிநாதன். இவர், இதற்கு முன் நிதி பிரிவு தலைமைப் பொறுப்பில் (CFO) இருந்தவர்; அதாவது, அவர் நிதித்துறையில் நிபுணர். அந்த பார்வையிலேயே நிறுவனத்தில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். ஒரு சி.ஈ.ஓ போல நீண்ட கால நோக்கில் இல்லாமல் குறுகிய கால நோக்கில் செலவைக் குறைக்கும் முடிவுகளை அமல்படுத்துகிறார்.

டி.சி.எஸ்-லிருந்து சி.எம்.சிக்கு

அனுபவம் வாய்ந்த மூத்த ஊழியர்களை டி.சி.எஸ்-ல் இருந்து சி.எம்.சி-க்கு மாற்றுகிறார்கள். இதன் மூலம் டி.சி.எஸ்-ன் செலவு குறைகிறது. ரூ 12 லட்சம் ஆண்டு சம்பளம் வாங்கும் பத்து பேரை CMC-க்கு அனுப்பும் போது, சி.எம்.சி-ன் கணக்கில் செலவு அதிகரிக்கிறது. டி.சி.எஸ்-க்கு ஆண்டுக்கு 1.2 கோடி செலவு குறைகிறது. டி.சி.எஸ்-ன் லாபம் கூடுதலாக காட்டப்படுகிறது.

கூடுதல் நேரம் வேலை செய்தாலும் வாகன வசதி கிடையாது

ஐ.டி நிறுவனத்தின் மூலப் பொருளே ஊழியர்கள் ஆகிய நாம் தான். நாம் 9 மணி நேரம், 10 மணி நேரம், 14 மணி நேரம் என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்கின்றோம். இப்படி வேலை செய்கின்ற நமக்குக் கொடுக்க வேண்டிய ஒரு அடிப்படை சேவை போக்குவரத்து வசதி. 8 மணிக்கு, 9 மணிக்கு, 10 மணிக்கு வேலையை முடித்து விட்டு ஊழியர் வீட்டுக்குக் கிளம்பும் போது அவருக்கு வாகனம் (cab) ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும்.

ஆனால், இப்படி வாகன ஏற்பாடு செய்வதற்கு ஒரு புராசஸ் வைத்திருக்கிறார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்தால்தான் வாகனம் கொடுக்க வேண்டும். திடீரென்று வாகனம் (cab) தேவைப்படுகின்றது எனில் கிடைக்காது. அப்படி கேட்பதை திட்டத்துக்கு அப்பாற்பட்ட முறையில்தான் (adhoc) எடுத்துக் கொள்வார்கள். திட்டத்தின்படி அனைத்து தேவைகளும் முடிந்த பிறகு கடைசியாகத் தான் வாகனம் கிடைக்கும்.

அவசரமாக டெலிவரி வேலை இருக்கின்றது, அலுவலகத்தில் தங்கி நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டி வருகிறது. வேலையை முடித்து விட்டு வீட்டுக்குப் போக cab கேட்டால் கிடைக்காது; குறைந்தது ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். இப்படி திட்டமிட்டுத் தான் வாகன வசதி பெற வேண்டும் என்று சொல்லி பெரும்பாலான ஊழியர்களின் தேவைக்கு வாகன வசதியையே தடை செய்து விட்டார்கள்.

எனவே வெளியில் கிடைக்கும் cab அல்லது சொந்த வாகனத்தை பயன்படுத்தி போய் விடுகிறோம். இதன் மூலம் cab பயன்பட்டாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. டி.சி.எஸ்-க்கு லாபம் அதிகரிக்கிறது.

பில்லிங் ரேட் உயர்வு

அடுத்தது Billing Rate. ஒவ்வொரு ஊழியருக்கும் ஒரு மணி நேர வேலைக்கு இவ்வளவு என்ற கணக்கில் வாடிக்கையாளருக்கு பில்லிங் போடப்படும். கடந்த 2 ஆண்டுகளில் பில்லிங் எங்கு எல்லாம் Revise செய்ய வில்லையோ, அங்கு எல்லாம் இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் Revise செய்து உள்ளனர். இதனால் $20 பில்லிங் போட்ட ஒரு ஊழியரின் வேலைக்கு இப்போது $25 பில்லிங் போடுகிறது டி.சி.எஸ். ஊழியர்கள் செய்யும் வேலைக்கு வாடிக்கையாளர் கொடுக்கும் அதிக விலை நிறுவனத்தின் லாபத்தில் போய்ச் சேருகிறது.

Fixed Pricing Model

மேலே சொன்ன ஒரு மணி நேரத்துக்கு இன்ன கட்டணம் என்று பில்லிங் போடுவது இதுவரை பரவலாக இருக்கும் முறை. இது Service based வழிமுறை, time and material அடிப்படையிலானது.

இந்த Fixed pricing proposal-ல் வாடிக்கையாளரிடம் உங்களுக்கு இந்த வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து கொடுக்கிறேன். அதற்கு தகுந்தார் போல், குறிப்பிட்ட பணம் கொடுக்க வேண்டும் என்ற அளவில் பேரம் பேசுவது. அதன் பிறகு புராஜக்ட்-ல் எவ்வளவு குறைவான ஊழியர்களை வைத்து வேலை செய்கிறோம் என்பது நிர்வாகத்தின் திறமை. இந்த வகையில் அனைத்து account யும் Fixed pricing யில் கொண்டு போக வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து கொண்டு இருக்கின்றார்கள்.
பயிற்சி ஊழியர்களை வைத்து வேலையை முடிக்க கட்டாயம்.

பயிற் சி ஊழியர்கள் மூலம் செலவு குறைப்பு

டி.சி.எஸ் அனுபவம் உள்ள நபர்களை வேலைக்கு எடுப்பதை குறைத்திருக்கிறது. கடந்த 6 to 8 மாதங்களாக அனுபவம் வாய்ந்தவர்களை எடுக்கவில்லை.

குறைந்த சம்பளத்தில் பயிற்சி ஊழியர்களை (Trainee) எடுத்து உள்ளனர். ஒரு Account-ல் 20% முதல் 30% trainee இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பயிற்சி ஊழியர் என்பவர் கடந்த 1 ஆண்டுக்குள் சேர்ந்தவர். ஒரு project-ல் 30% பயிற்சி ஊழியர்களை சேர்க்கவில்லை என்றால் ஏன் என்று Business case கொடுத்து Delivery manager-டம் ஏன் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவை என்று ஏற்க வைக்க வேண்டும்.

பயிற்சி ஊழியர் ஒரு ஆண்டுக்குப் பிறகு அந்தத் ‘தகுதி’யை இழந்து விடுவார். எனவே, திரும்பவும் Trainee எடுக்க வேண்டி வருகின்றது.

குறைந்த சம்பளம் பெறும் Trainee-க்கும் முக்கியமான பொறுப்புள்ள வேலை கொடுக்கப்படும். எனவே, வாடிக்கையாளரிடம் அந்த அளவுக்கு பில்லிங் போடப்படும். ஆனால் போதிய அனுபவமும், பயிற்சியும் பெறுவது வரை அவர்களால் வேலையை முழுமையாக செய்ய முடியாது. புதிய ஊழியருக்கு பயிற்சி கொடுப்பது, அவர்கள் பெயரில் செய்ததாக கணக்கு காட்டப்படும் வேலையை செய்து முடிப்பது என்று பிற ஊழியர்கள் மீது வேலைப் பளு அதிகமாகிறது.
இந்த வகையிலும் டி.சி.எஸ் லாபத்தை பிழிந்து எடுக்கிறது.

இதனால் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு வாய்ப்புகள் குறைகின்றன. Senior தகுதி உள்ள ஊழியர்கள் புராஜக்ட்-ல் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். RMG-க்கு அனுப்பப் படுகிறார்.

RMG – திருவிளையாடல்கள்

முன்பு எல்லாம் 20 வருட அனுபவம் உள்ள Developerஆக இருந்த ஒருவரது project முடிந்த பிறகு RMG-ல் (Resource Management Group) அவருக்கு Development related project தான் கொடுப்பார்கள். ஆனால் இப்போது, அந்த நிலை இல்லை.

RMG-ல் skill set தகுந்த மாதிரி project கொடுக்க மறுக்கிறார்கள். Skill Set இருக்கோ இல்லையோ,அவர்கள் கொடுக்கும் project யை ஏற்று கொள்ள வேண்டும். அனுபவம் உள்ள ஒருவரை Development project-ல் போடாமல், Testing project-ல் போடுவார்கள் காரணம் கேட்டால் Development-ல் project இல்லை, எனவே Testing கொடுக்கிறோம் என்று கூறுவார்கள்.
கொடுக்கும் project எடுக்க வேண்டும் இல்லையெனில், நீங்கள் இந்த project-ஐ எடுக்க வில்லை எனில் மேல் நிலைக்கு புகார் அனுப்புவோம், என்று மிரட்டுவார்கள்.

அவர் Testing project-ல் அதிக சவாலை எதிர் கொள்ள வேண்டி இருக்கும், performance சரியான அளவில் இருக்காது. அவரை PIP-க்கு அனுப்புவது, ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுவது என்று அலைக்கழிக்கிறார்கள்..

நிர்வாகத்திற்கு Billing தான் முக்கியமாக இருக்கின்றதே, தவிர இந்த associate அந்த வேலைக்கு தகுந்தவரா? என்று பார்ப்பதில்லை. ஊழியர்கள் புதிய திறன்களை கற்றுக் கொண்டு தன்னை வளர்த்துக் கொள்ளும் வசதிகளிலும் கை வைத்திருக்கிறார்கள்.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு ஆப்பு

பொதுவாக லே ஆஃப் செய்வதற்கு அவர்கள் சொல்லும் காரணம் திறமையின்மை, skill set-ஐ மேம்படுத்திக் கொள்வது (update) இல்லை ஆகியவை. இப்போது திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியிலும் கை வைத்திருக்கிறார்கள்.

CMM Standard படி learning portal, certification portal பராமரிக்கப்படுகிறது. இங்கு பட்டியலிடப்பட்டிருக்கும் certification (சான்றிதழ்) பெறுவதற்கான செலவை நிறுவனம் reimbursement செய்ய வேண்டும், இது காலம் காலமாக நடத்து கொண்டு இருக்கின்ற ஒன்று. ஒரு வருடத்திற்கு முன் வரை TCS portal-ல் list ஆகும் எந்த பயிற்சியையும் மேற்கொண்டு அந்த Certificate காட்டி Reimbursement வாங்கி கொள்ளலாம். ஆனால் இப்போது பாதிக்கும் மேற்பட்ட பயிற்சிகளுக்கு reimbursement வாங்க முடியாது.

இதற்கு முன் 1 மாதம் அல்லது 2 மாதம் முன்பு தகவல் தெரிவித்து விட்டு certification தேர்வு எழுதலாம், இப்போது 3 மாதம் முன்பே தகவல் கொடுக்க வேண்டும். project lead, project manager, Delivery Lead ஆகியோரின் approval வாங்க வேண்டும். approval கேட்டும் போது அவர்கள், இது வாடிக்கையாளர் பரிந்துரைத்ததா, இல்லையா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதாவது இந்த சான்றிதழ் பயிற்சி project-க்கு தேவைப்படுகிறதா? இல்லையா? என்பதுதான் கேள்வி. project-க்கு தேவையாக இருந்தால் மட்டும்தான் ஒப்புதல் கொடுப்பார்கள். அது மட்டும் இன்றி இது ஏன் தேவை என்ற business case-ம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் Delivery manager approve கிடைக்கும்.

இவ்வாறு இந்த வழிமுறையை சிக்கல் ஆகி விட்டார்கள். எனவே பலர் certification செய்வதை நிறுத்தி விட்டனர். புதிய திறனை வளர்த்து இதுவரை செய்யாத பணிக்கு தன்னை தயார் படுத்திக் கொள்வது சாத்தியமில்லாமல் போகிறது. இதன் மூலமாகவும் அவர்கள் டி.சி.எஸ் செலவை மிச்சப்படுத்துகிறது.

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள், அதற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். இப்போது அந்த கட்டம் முடிந்து,  குறைந்த எண்ணிக்கை ஊழியர்கள், குறைந்த செலவு என்று கணக்கு போட்டு லாபம் ஈட்ட வேண்டியிருக்கிறது.  ஊழியர்களை, அதிக வேலை, குறைந்த சம்பளம் என்று பிழிந்து லாபம் ஈட்டுகிறது டி.சி.எஸ்.

– மருது

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-squeeze-employees-to-extract-maximum-profit/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை

பொறியியல் மாணவர்  லெனின் தற்கொலை அல்ல, கொலையே! கொலைக்கு SBI வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு! கல்வி தர, படித்த பின் வேலை தர வக்கிலாத மத்திய,...

அப்ரைசல் முறைக்குள் ஒழிந்திருக்கும் உழைப்புச் சுரண்டல்!

Appraisal, Appraisal, Useless and Voiceless Appraisal! இந்த அப்ரைசல் வச்சு தாங்க எல்லா ஐடி கம்பெனிகள் ஆடும் போங்கும் பித்தலாட்டமும்; இதை எதிர்த்து பேச முடியாமல்...

Close