வெரிசான் பயங்கரவாதம் : கார்ப்பரேட் ஆண்டைகளும், கொத்தடிமை உழைப்பும்

வெரிசானின் பயங்கரவாதத் தாக்குதல்
900 IT தொழிலாளர்கள் பலி!
வேடிக்கை பார்க்குது அரசும் தொழிலாளர் துறையும்
நாம் என்ன செய்யப் போகிறாம்!

நம்மை நவீன கொத்தடிமைகளாக Hire and Fire நடத்திவரும் இந்த நிறுவனங்களை எப்படி எதிர்கொள்வது?

க ஊழியர்கள் பார்த்திருக்க, அரசு கைகட்டி வேடிக்கை பார்க்க, கார்ப்பெட் குண்டு போடுவது போல சட்ட விரோதமாக ஊழியர்களைக் கொத்து கொத்தாய் தெருவுக்கு அனுப்பியிருக்கிறது வெரிசான்.

ஊழியர்கள்தான் நிறுவனத்தின் வருமானத்துக்கும் லாபத்துக்கும் ஆதாரம். ஆனால், நிறுவனத்தின் இலக்கும் பயணமும் எங்கும் எப்போதும் இலாபத்தை நோக்கியே உள்ளது. அது மூலதனத்தைப் பெருக்க எதையும் தயங்காமல் செய்கிறது. மூலதனத்தின் பிறப்பே இப்படித்தான் என்கிறது வரலாறு.

ஆனால், ஊழியர்களாகிய நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

நாம் யார்? நம்மைப் பற்றிய நமது மதிப்பீடு, கருத்து என்ன? நம்முடைய எதிர்காலம் பற்றி நமக்கு ஒரு கனவு இருந்தாலும், தொழிலாளி வர்க்கம் இதுவரை பயணித்து வந்த கடந்த கால வரலாற்றிலிருந்து, நிகழ்காலத்தை இணைத்து நமது வர்க்கத்தின் எதிர்காலம் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்கிறோமா?

ஐ.டி நிறுவனங்கள் புதிதாக எடுக்கும் எண்ணிக்கைக்கும், ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காக களத்தில் இறங்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வேறுபாடு உள்ளது. இளம் பட்டதாரிகள் இந்த வேறுபாட்டில் பந்தாடப்பட்டு பல்வேறு துறைகளில் விசிறியடிக்கப்பட்டு, கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டு வாய்க்கும் வயிற்றுக்கும் போராடுவதே பெரும்பாடாகிறது. அதிலும் காண்ட்ராக்ட் ஊழியர்களின் சதவீதமே அதிகரித்து வருகிறது என்பதே நம் கண்முன் உள்ள நிதர்சனம்.

அனுபவம் வாய்ந்த ஊழியர்களும் இந்தச் சுழலில் பலியிடப்படுகின்றனர். “யாருக்கும் செய்யும் வேலை நமக்கு நிரந்தரமல்ல. நமது வேலை நீடிப்பது நமது திறமை சார்ந்ததல்ல, நிறுவனங்களின் இலாப வெறியே நமது வாழ்க்கையை தீர்மானிக்கின்றது” என்பதை டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் என்று ஆரம்பித்து இன்று வெரிசான் வரை நமது செவிப்பறையில் ஓங்கி அடித்து பாடம் நடத்துகின்றன.

“புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்காக சில திட்டங்களை வகுத்துள்ளோம். பல சவால்களை வென்று தொடர்ந்து செயல்படுவதற்கு இது தேவைப்படுகிறது. மாற்றங்கள் ஊழியர்களின் பணி தன்மையை மாற்றியிருக்கிறது. இதில் சிலர் வேலை இழக்கத்தான் செய்வார்கள். ஐ.டி தொழிலின் எதிர்காலம் கருதி நிறுவனத்துக்குத் தேவையான தகுதியான நபர்கள் மட்டுமே தக்கவைக்கப்படுவார்கள். இந்த நடவடிக்கை இயல்பானது தான், இப்படி நடக்கும் என்பது வெரிசானுடன் AOL, Yahoo இணையும் போதே, வல்லுநர்கள் அனைவரும் அனுமானித்ததே” என்கிறது வெரிசான்.

வெரிசான் வகுத்துள்ள திட்டங்களில் ஊழியர்களின் நலன் என்பதை சேர்க்க முடியாத அளவுக்கு அவர்களது இலாபவெறி கண்ணை மறிக்கிறது. இது ஏதோ வெரிசானில் மட்டுமல்ல. டி.சி.எஸ், ஐ.பி.எம், விப்ரோ, சி.டி.எஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுக்கும் இதைத்தான் செய்கின்றன.

இவர்கள் ஏதோ சிறுபிள்ளைத் தனமாக இதைச் செய்வதில்லை. அவர்களுக்கென்று உள்ள துறைசார்ந்த சட்ட வல்லுநர்கள், மனநல மருத்துவர்களின் ஆலோசனைக்கும் மேல் அவர்களுடைய குண்டர் படையின் துணையுடன்தான் இதைச் செய்கின்றனர்.
இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது, இதை மௌனமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன, நமக்காகவே இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் தொழிலாளர் துறையும் இந்த அரசும்.

நம்மை நவீன கொத்தடிமைகளாக Hire and Fire நடத்திவரும் இந்த நிறுவனங்களை எப்படி எதிர்கொள்வது?

நமது வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இத்தகைய நிறுவனங்களை தடுத்து நிறுத்தி சட்டத்தை பின்பற்ற வைக்காத தொழிலாளர் துறையையும், அரசையும் நாம் எப்படி கேள்விக்குள்ளாக்குவது.

நாம் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்று தன் பக்கத்தில் உள்ளவனைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பலவீனமே கார்ப்பரேட்டுகளின் பலம். இதை நம்மைவிட கார்ப்பரேட்டுகள் நன்கு அறிந்திருக்கின்றனர்.

இந்த அக்கறையின்மையை உடைத்தெறிந்து, “கார்ப்பரேட் பயங்கரவாதத்தை எதிர்த்து நாம் என்ன செய்ய போகிறோம், என்ன செய்யவேண்டும்” என நமக்காக நாம் விவாதிப்போம். செயல் படுத்துவோம்.

கார்ப்பரேட்டுகளின் அராஜகத்துக்கு முடிவு கட்டுவோம்.

தொடரும் கார்ப்பரேட்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்
நேற்று டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம்
இன்று வெரிசான் – 900 IT தொழிலாளர்கள் பலி!!
நாளை யார்? நாம் என்ன செய்ய போகிறாம்???

Permanent link to this article: http://new-democrats.com/ta/terror-by-verizon-corporate-overlords-and-modern-bonded-labour/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா?

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக. ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்! சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்! நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி...

அறிவியல் அணுகுமுறையும், கோட்பாட்டு அணுகுமுறையும்

பாபிலோனிய அணுகுமுறையின் கீழ் ஒருவருக்கு பல்வேறு கோட்பாடுகளும், அவற்றுக்கிடையேயான உறவுகளும் தெரிந்திருக்கும். ஆனால், அவை அனைத்தையும் ஒரு சில தேற்றங்களிலிருந்து வந்தடைய முடியும் என்பதை ஒருபோதும் முழுமையாக...

Close