இந்தியாவுக்கு வெளியே மாட்டிறைச்சி மீது எந்தக் கரிப்பும் இல்லை!

ந்திய மத்திய, மாநில அரசுகளும், பசு பாதுகாப்பு கும்பல்களும் நம் நாட்டு குடிமக்களின் உணவு உரிமைகள் மீது கலாச்சார தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் போது, உலகின் பிற நாட்டு மக்கள் தங்களது கன்று இறைச்சி கட்லெட்டுகளையும், வேக வைத்த மாட்டிறைச்சியையும் வழக்கம் போல தொடர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று 2014-15 ஆண்டுக்கான இறைச்சி நுகர்வு பற்றி OECD வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

asado-argentinaஇந்த பூமிப்பந்தின் குடிமக்கள் சராசரியாக ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கு 34 கிலோ இறைச்சி சாப்பிடுகிறார்கள்.

  • நாடுகளின் பட்டியலில் ஒரு நபருக்கு 90.3 கிலோ என்ற வீதத்தில் ஆஸ்திரேலியா முதலிடம் வகிக்கிறது. தலைக்கு 3.2 கிலோ மட்டும் என்ற அளவில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது.
  • ஒவ்வொருவரும் 90.1 கிலோ இறைச்சி உட்கொள்ளும் அமெரிக்கா பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
  • அசாடோ என்ற தீயில் வாட்டிய இறைச்சியின் பிறப்பிடமான அர்ஜென்டினா நாட்டு மக்கள் ஒரு நபர் 86.6 கிலோ இறைச்சி என்ற வீதத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.
  • ஒரு சராசரி இஸ்ரேலியர் ஆண்டுக்கு 86.1 கிலோ இறைச்சியும், அதற்கு ஒரு நபருக்கு 78 கிலோ என்ற அளவில் உள்ள பிரேசிலும் சேர்ந்து முதல் 5 இடங்களை நிறைவு செய்கின்றன.

 

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் சராசரி நுகர்வு 64.9 கிலோ ஒரு நபருக்கு என்ற அளவில் உள்ளது.
  • ஜப்பானியர்கள் இறைச்சி சாப்பிடுவதில் பின்தங்கியே உள்ளனர் . ஆண்டுக்கு ஒரு நபருக்கு 35.7 கிலோ அளவில்தான் சாப்பிடுகின்றனர்.
  • சீனா பட்டியலில் ஒப்பீட்டளவில் முந்தியுள்ளது – ஒரு சீனர் ஒரு ஆண்டில் சராசரியாக 49.8 கிலோ இறைச்சி சாப்பிடுகிறார்.
  • கபாபின் பிறப்பிடமான துருக்கியில் இறைச்சி நுகர்வு 28.2 கிலோ அளவில் மட்டுமே உள்ளது. இரானியர்களும் 29.3 கிலோவோடு நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

உருகுவே 46.4 கிலோ ஒரு நபருக்கு, அர்ஜென்டினா 40.4 கிலோ, பராகுவே 25.6 கிலோ, பிரேசில் 24.2 கிலோ என்ற மாட்டிறைச்சி சாப்பிடுவதில் தென் அமெரிக்க நாடுகள் முதல் இடங்களை பிடித்துள்ளன. அமெரிக்கர்கள் ஒரு ஆண்டுக்கு ஒரு நபர் 24.7 கிலோவும், இஸ்ரேலியர்கள் 20.2 கிலோவும் மாட்டிறைச்சி உட்கொள்கின்றனர்.

இந்தியாவில் மட்டும் மாட்டிறைச்சி மீது ஏன் இந்த அரசியல்?

செய்தி ஆதாரம் : http://www.israelhayom.com/site/newsletter_article.php?id=36049

Permanent link to this article: http://new-democrats.com/ta/there-is-no-beef-about-beef-in-the-rest-of-world-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார்? – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா?

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள 3 லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக்கணினிகளையும், ஆப்பிள் ஐ-போன்களையும் உற்பத்தி செய்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும்...

ஆண்களின் அடிமைகளா பெண்கள் – ஒரு ஐ.டி ஊழியரின் குமுறல்!

இயற்கையாக தாய்மை பேறு உடைய பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு இயல்பானது. இதனால் இறைவனின் புனிதம் கெடும், மனித குலத்தைப் பாதிக்கும் என்று பேசும் இவர்கள் என்னதான் கல்வியறிவு...

Close