தமிழக விவசாயிகள் மரணங்கள் – அரசே முதல் குற்றவாளி!

மிழகத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் கடந்த 06-01-2017 வரையிலும் 106 விவசாயிகளின் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இன்னும் வெளியே தெரியாது வெளிச்சத்துக்கு வராத பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு எல்லாம் காரணமாக ஆளும் வர்க்கத்தால் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் கருத்து, பருவமழை தவறியது என்பதுதான்.

பிரச்சனை பருவமழை தவறியது மட்டும்தானா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமல்படுத்த முடியாதென்றும் இந்த விஷயத்தில் தலையிட உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இல்லை என்றும் சொன்னது மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. காவிரி பிரச்சினையில் கன்னட இனவெறியைத் தூண்டி தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வயிற்றிலடித்தது பார்ப்பன-பா.ஜ.க கும்பல்.

தொடர்ந்து கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவசாயிகளை நடுத்தெருவில் நிறுத்தியது மோடி அரசு. விளைபொருட்கள் வாங்க, உரம் வாங்க, கூலி கொடுக்க என்று தாங்கள் கடன் வாங்கி வைத்திருந்த பணத்தையும் அவர்களின் சிறுசேமிப்பையும் ஒரே நாள் இரவில் செல்லாக்காசு ஆக்கியதன் மூலம் அவர்களைப் பிச்சைக்காரர்களாக்கி நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது. மோடியின் இந்த “கருப்புப் பண ஒழிப்பு” நடவடிக்கையால், நாடு முழுவதும் ஏராளமான சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், விவசாயக் கூலிகள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் மோடி அரசு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தனியார் மய, தாராள மய, உலக மய கொள்கைகளை மேலும் தீவிரமாகவும், மூர்க்கமாகவும் அமல்படுத்தி விவசாயிகளுக்கெதிராக மானிய வெட்டு, உர விலை உயர்வு, விளைபொருட்களுக்கான போதிய விலையின்மை போன்றவற்றை அரங்கேற்றி வருகிறது. ஒட்டு மொத்த விவசாயத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாகவும், நிதிச் சந்தை சூதாட்டத்தில் பகடையாகவும் மாற்றுவதை செய்து வருகிறது.

தமிழ்நாட்டிலோ, விவசாய நெருக்கடி கடுமையாக பீடித்திருந்த நிலையில் ஜெயலலிதாவை அப்பல்லோவில் அனுமதித்து விட்டு மருத்துவமனையின் முன்பு தவமிருந்தது ஆளும் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க கொள்ளைக் கூட்டம். அம்மாவின் இறப்புக்குப் பின்னர், விவசாயிகள் வாழ்வை இழந்து, பலர் உயிரையும் பறி கொடுத்துக் கொண்டிருந்த அவலச் சூழலுக்கு மத்தியில் அடிமைகள்.தி.மு.க.வினர் சின்னம்மாவுக்கு பதவியேற்பு வைபவம் நடத்தி அழகு பார்ப்பதில் மும்முரமாயினர். அதன் பின்னர் விவசாயிகளின் மரணங்களை கொச்சைப் படுத்தி பேசி விட்டு, நிவாரணம் பெறுவதற்கான ஆய்வு செய்வதாக கிளம்பி, ஒரு வழியாக இழப்பீட்டுக்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர். ஒவ்வொரு இழப்பையும் தாம் பொறுக்கித் தின்பதற்கான வாய்ப்பாக பார்க்கும் இந்த கொள்ளைக் கும்பல் வறட்சி நிவாரணப் பணிக்கு என்று மத்திய, மாநில அரசு நிதிகளை ஒதுக்கி தமக்கு என்ன ஒதுக்கிக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும்.

மக்களுக்கும், நாட்டுக்கும் விரோதமான மத்திய, மாநில அரசுகளின் கொள்கைகள் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தியுள்ளன. இந்த அரசும் ஆட்சியாளர்களும் விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்கள் அனைவருக்கும் எதிரானவர்கள் என்பது முகத்திலறையும் உண்மை. காரணம் தெரிந்தபின் காரியம் மட்டுமே பாக்கி. வீதியில் இறங்குவோம் இவர்களை அடித்து விரட்ட.

– மணி

இது தொடர்பான செய்திகள்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-farmers-killed-by-state-policies/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு அடிமைகளாக விற்கும் வெரிசான்!

நமது பு.ஜ.தொ.மு ஐடி ஊழியர்கள் பிரிவு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை திரட்டி இருக்கிறது. இந்த விற்பனையினால் பாதிக்கப்படும் ஊழியர்கள் உதவிக்காக சங்கத்தை...

காலம் இடம் கடந்த மார்க்சின் பணிகள்

சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களால் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, அவரது இறப்பினால் அவர்கள் துயரடையும் வகையில்...

Close