தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு தமிழக மக்களின் உணர்வுரீதியான ஆதரவு வலுவாக உள்ளது. இதனால் கட்டாயப்படுத்தப்பட்ட காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நேற்று (28-03-2017) விவசாயிகளைச் சந்தித்தனர். மத்திய அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து விவசாயிகளின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
ஆனால், விவசாயிகளின் சார்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதாக உடனடியாக அறிவித்தால்தான் போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்புவோம் என்று தெரிவித்திருக்கிறார்.
விவசாயிகளின் பிற கோரிக்கைகள்
2. அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ 25,000 வழங்க வேண்டும்.
3. விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
4. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
5. அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.
6. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசுக்கு கண்டனம்.
7. தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
ஐ.டி நண்பர்களே,
தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும் தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்காகவும் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டங்களையும், கூட்டங்களையும் ஐ.டி ஊழியர்கள் சார்பில் நடத்துவோம்.
மேலும், நம் மீது திணிக்கப்படும் பிரச்சனைகளை தீர்க்கவும், நமது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் எப்படி போராட வேண்டும் என்பதையும் நமது விவசாய மூத்தோர்களிடமிருந்து கற்றுக் கொள்வோம்.