காக்னிசன்ட், டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம் ஆட்குறைப்பு – விளக்கம் கேட்கிறது தமிழக அரசு

பத்திரிகை செய்தி

இடம் : சென்னை
நாள் : ஆகஸ்ட் 24, 2017

மென்பொருள் நிறுவனங்களில் ஆட்குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் துறை, நிறுவனங்கள், ஊழியர் சங்கம் இடையே முத்தரப்பு பேச்சு வார்த்தை

மே 18-ம் தேதி சோழிங்கநல்லூரில் ஐ.டி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடத்திய ஆர்ப்பாட்டம்.

மேற்சொன்ன பிரச்சனையை விவாதிப்பதற்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 28, 2017 அன்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத் துறை கட்டிடத்தின் 6-வது மாடியில் தொழிலாளர் இணைச் செயலாளர் முன்னிலையில் நடைபெறும் என்று தமிழ்நாடு தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.

டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக வெளியான செய்திகள் குறித்து விளக்கமளிப்பதற்கு காக்னிசன்ட், டி.சி.எஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், ஐ.பி.எம் நிறுவனங்களும் மென்பொருள் நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காமும் அழைக்கப்பட்டுள்ளன.

இந்த பேச்சுவார்த்தையில் ஐ.டி ஊழியர்கள் சார்பாக ஐ.டி ஊழியர்கள் மன்றமும், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவும் கலந்து கொள்ளவுள்ளன.

காக்னிசன்ட், விப்ரோ நிறுவனங்களில் பெருமளவில் ஆட்குறைப்பு நடப்பதாக வணிக நாளிதழ்களில் செய்தி வெளியான முதலே பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அதற்கு எதிரான தீவிர போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

  • மே 16-ம் தேதி தொழிலாளர் ஆணையருக்கும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை செயலருக்கும் எமது சங்கத்தின் சார்பில் மனு கொடுத்தோம். தொழிலாளர் செயலரை நேரில் சந்தித்து எமது சங்க உறுப்பினர்கள் நிலைமையை விளக்கினார்கள்.
  • ஐ.டி துறையில் சட்ட விரோதமாக பெருந்திரள் ஆட்குறைப்பு நடைபெறுவது குறித்து பத்திரிகைகளுக்கு தெரிவிக்கும் வகையில் மே 17 அன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினோம்.
  • மே 18-ம் தேதி சோழிங்கநல்லூரில் ஐ.டி ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
  • கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட், எச்.சி.எல், எம்ஃபசிஸ் ஊழியர்கள் சென்னையிலும் கோவையிலும் தமது வேலை நீக்கத்துக்கு எதிராக தொழிலாளர் துறையிடம் மனு தாக்கல் செய்து வாதிடுவதற்கு வழிகாட்டி உதவி வருகிறோம்.
  • விப்ரோ ஊழியர்களின் புகார்களை தொடர்ந்து நிர்வாகத்துக்கு எதிராக தொழில்தகராறுகள் சட்டம் 1947-ன் பிரிவு 2K-ன் கீழ் தொழிலாளர் துறையில் மனு தாக்கல் செய்துள்ளோம். அதன் பகுதியாக தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட 68 ஊழியர்களின் பட்டியலை (தமிழகத்திலிருந்து 25 பேர்) சமர்ப்பித்திருக்கிறோம்.
  • ஐ.டி ஆட்குறைப்பு தொடர்பான கட்டுரைகளையும், பதிவுகளையும் எமது இணையதளம் மூலமாகவும் (new-democrats.com), பேஸ்புக் பக்கத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு வருகிறோம்.
  • பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, டெல்லி போன்ற இடங்களில் பணி புரியும் ஊழியர்களின் குழுக்களுடன் ஒருங்கிணைந்து ஐ.டி ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு எதிராக போராடி வருகிறோம்.

மே 17 அன்று பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு

பணி பாதுகாப்பு தொடர்பாக ஐ.டி ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாங்கள் தொழிலாளர் இணை ஆணையர் முன்பு ஐ.டி நிறுவனங்களுடன் நடைபெறவிருக்கும் பேச்சு வார்த்தையில் முன்வைத்து தீர்வு கோரவுள்ளோம்.

ஊழியர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை combatlayoff@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

சியாம் சுந்தர்
(தலைவர்)

 

 

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு பற்றி

பு.ஜ.தொ.மு கடந்த 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தொழிலாளர்களை அமைப்பாக திரட்டி வரும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கம் ஆகும். பு.ஜ.தொ.மு-வின் ஐ.டி ஊழியர்கள் பிரிவு ஜனவரி 10, 2015 அன்று தொடங்கப்பட்டது.

நாங்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொல்கத்தா மற்றும் பிற நகரங்களிலும் ஐ.டி ஊழியர்களை அணி திரட்டி வருகிறோம்.

எமது நடவடிக்கைகளின் பகுதியாக நாங்கள் ஊழியர்களுக்கு பின்வரும் உதவிகளை செய்து வருகிறோம்.

  1. நியாயமற்ற வேலை நீக்கத்துக்கு எதிராக போராடுவது, அதை எதிர்த்து தொழில் தகராறுகள் சட்டம் 1947 பிரிவு 2A-ன் கீழ் தொழிலாளர் துறையில் மனு தாக்கல் செய்ய வழிகாட்டுவது.
  2. பணி தொடர்பான பிரச்சனைகளில் கூட்டு பேச்சுவார்த்தை உரிமைகளை பெறுவது
  3. நிர்வாகத்துடனான கூட்டு பேச்சுவார்த்தை பிரச்சனைகளில் தொழில்தகராறுகள் சட்டம் -1947-ன் பிரிவு 2K-ன் கீழ் மனு தாக்கல் செய்வது

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-government-calls-cognizant-tcs-wipro-infosys-and-ibm-to-explain-layoffs-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஜல்லிக்கட்டு போராட்டம் : ஜனநாயக உரிமைகளுக்கான குரலை ஆதரிப்போம்

தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான ஜனநாயக உரிமைக்காக மட்டுமின்றி மோடி அரசின் சர்வாதிகார மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகள் மீது தமிழ் மக்களின்...

எச்.ஆர் சொல்படி ராஜினாமா செய்தால் மட்டும் உடனே வேலை கிடைத்து விடுமா?

கில்லி படத்தில் விஜய் சொன்னது போல தம்மாத்தூண்டு பிளேடு மேல வைக்கிற நம்பிக்கையை உங்கள் மேல் வையுங்கள். நிறுவனம் relieving letter தரவில்லை என்றால் சந்தோஷமாக நீங்கள்...

Close