விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டங்கள்

டெல்லி அதிகாரத்தின் கழுத்தில் அமர்ந்து போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழகமெங்கும் இளைஞர் போராட்டங்கள் வெடிக்கின்றன.

  1. நேற்று (28-03-2017) மாலை 6 மணியளவில் சென்னை சிப்காட் சிறுசேரியில் ஐ.டி ஊழியர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
  2. நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக மெரீனாவில் மாணவர்கள் கூட முயன்றதைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருக்கிறது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் துணை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் குவிக்கப்பட்டதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டிருக்கிறது.
  3. மெரீனாவில் போராட்டம் என்று ‘வதந்தி (அதாவது செய்தி) பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.
  4. மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் கல்லூரி மாணவ-மாணவியர் கலந்து கொள்ளும் போராட்டம் நடப்பதாக வாட்ஸ்-அப் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
  5. திருச்சி கோர்ட் உழவர் சந்தை அருகில் 29-03-107 முதல் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பதாக வாட்ஸ்-அப் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  6. சென்னை சோழிங்கநல்லூரில் போராட்டம் பற்றி வாட்ஸ்-அப்-ல் பகிரப்பட்ட செய்திஏப்ரல் 3-ம் தேதி மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூடமைப்பு சார்பில் வருகின்ற ஏப்ரல் 3-ம் தேதி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பொது வேலைநிறுத்தம் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி, அனைத்து விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ 25,000, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், தமிழகத்தின் நீர் உரிமைகளை நிலைநாட்டுதல்,  நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஒப்பந்தம் போட்ட மத்திய அரசுக்கு கண்டனம், தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படவிருக்கிறது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

ஏப்ரல் 3-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஐ.டி ஊழியர்கள் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் அலுவலகத்துக்கு விடுப்பு போட்டு விட்டு, ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்த வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-youth-in-solidarity-with-farmers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“போராடுவது அடிப்படை உரிமை, போலீஸ் செயல் சட்ட விரோதம்” – டைடல் பார்க் ஐ.டி ஊழியர்கள்

"ஐ.டி ஊழியர்கள் சிறு குழந்தைகளும் இல்லை, நிறுவன எச்.ஆர் ஊழியர்களை கண்காணிக்கும் ஆயாம்மாவும் இல்லை. பணி, பணியிடம் தொடர்பில்லாத, அலுவலகத்துக்கு வெளியில் செய்யும் அரசியல் நடவடிக்கைகளில் நிறுவனம்...

ஐ.டி-ல என்ன சார் நடக்குது? – ஆடியோ

"யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...

Close