அரசியல் பேசாத தொழிற்சங்கத்தால் ஆவது என்ன?

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, SRF மணலி கிளையின் தேர்தல் பிரச்சார நோட்டிசிலிருந்து. தொழிலாளர்கள் அரசியலில் காட்ட வேண்டிய ஆர்வம் குறித்தும், தொழிற்சங்கம் ஒன்று அரசியலை புறக்கணிப்பது உண்மையில் தொழிலாளர் நலனை புறந்தள்ளுவதுதான் என்பதையும் எளிமையாக விளக்குகிறது, இது.

ன்பார்ந்த தொழிலாளர்களே !

தொழிற்சங்கம் என்றால் என்ன? என்று ஒரு தொழிலாளியிடம் கேட்டால், எனக்கு ஒரு பிரச்சனை என்றால் சூப்பர்வைசர் அல்லது மேனேஜரை உடனே வந்து கேட்க வேண்டும். வருடந்தோறும் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு பெற்றுத் தர வேண்டும் என கூறுவார். இதை தவிர்த்து ஒரு தொழிற்சங்கத்தின் வேலை என்று எதுவும் இல்லை என்று தான் நாம் நினைக்கின்றோம்.

இது சரிதானா? “ஊதிய உயர்வு உள்ளிட்ட பணப்பலன்களை பெற்றுத் தருவது, நிம்மதியான பணிச்சூழலை உருவாக்கி தருவது என்பது தொழிற்சங்கத்தினுடைய கடமைதான்.” ஆனால் இது மட்டும் தான் தொழிற்சங்கத்தினுடைய வேலையா? இதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை என நினைப்பது சரியா?

தொழிற்சங்கம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கக்கூடிய பயிற்சி பள்ளி என்று தொழிலாளிகள் தலைமையில் மாபெரும் புரட்சியை நடத்திக் காட்டிய ஆசான் லெனின் சொல்லியிருக்கிறார்.

அரசியல் எங்களுக்கு எதற்கு என்று கேட்கிறீர்களா? நாம் எதற்காக நிர்வாகத்திடம் ஊதிய உயர்வு கேட்கிறோம். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, சமீபத்தில் பேருந்து கட்டண உயுர்வு போன்ற விலைவாசி ஏற்றங்களால் நாம் தற்போது வாங்கிக் கொண்டிருக்கின்ற சம்பளம் போதவில்லை. அதனால் தானே ஊதிய உயர்வு கேட்கிறோம்.

சில நாட்கள் முன்பு உயிர்காக்கும் வேலை செய்கின்ற செவிலியர்கள் போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம்முடைய அக்கா, தங்கைகளோ சொந்த பந்தங்களோ இல்லையா? (கோப்புப் படம்)

நம் முதலாளியிடம் நாம் போராடிப் பெறுகின்ற ஊதிய உயர்வை வெளியில் இருக்கின்ற டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு நாம் வாங்கும் பொருட்கள் மூலமாக பிரித்து தருகிறோம். சரி, விலைவாசி உயர்வுக்கு யார் காரணம்? தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்திய அரசு தான் காரணம். இந்த வகையில் பார்க்கும் போது நம்முடைய ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் இந்த அரசும், அரசியலும் காரணமாக இருக்கும்போது அதை எதிர்த்துப் போராடாமல் அரசியல் வேண்டாம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்று நீங்கள் சொல்லுங்கள்.

ஆனால் உங்களிடம் ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் இதை பற்றி பேசுவதில்லை. மாறாக எப்படி அரசாங்கம் மக்கள் விலைவாசி உயர்வு பற்றியோ அல்லது மற்ற பிரச்சனைகள் பற்றியோ யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காக, வீதிக்கு வீதி சாராயக் கடைகளையும், வீட்டுக்கு வீடு வாட்ஸ் அப், பேஸ்புக், ஆன்லைன் விளையாட்டு ஆகியவைகள் மூலம் மக்களை சீரழிக்கிறதோ அதைப் போல நமது ஆலையிலும் தொழிலாளர்களை போதை கலாச்சாரத்திற்கு மாற்றி வருகின்றனர்.

இந்த சமூகமோ சக மனிதனோ எப்படியோ போகட்டும், நான் மட்டும் நல்லா இருந்தால் போதும், எனக்கு என் பணம் கிடைத்தால் போதும் என்று நினைக்க முடியுமா? இந்த சமூகத்தில் நடக்கும் எதுவும் என்னை பாதிக்காது என்று யாரேனும் ஒருவர் சொல்லுங்கள் பார்ப்போம்!

போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?

சில நாட்கள் முன்பு உயிர்காக்கும் வேலை செய்கின்ற செவிலியர்கள் போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம்முடைய அக்கா, தங்கைகளோ சொந்த பந்தங்களோ இல்லையா? உயிரைப் பனையம் வைத்து மழையிலும், வெயிலிலும் அயராது உழைக்கின்ற போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக போராடினார்களே, அதில் ஒருவர் கூட நம் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இல்லையா?

சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு இப்படி ஒவ்வொரு நாளும் எண்ணிலடங்கா பிரச்சனைகள் நம் தலையில் இடியை இறக்குகின்றன. இந்த சமூகத்தில் தான் SRF -ல் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களாகிய நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மேற்கூறிய இந்த பிரச்சனைகளுக்காக எமது அமைப்பான பு.ஜ.தொ.மு. ஆலலகளிலும் சமூகத்திலும் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது.

உங்களிடம் வந்து ஓட்டு கேட்கின்ற மற்ற சங்கங்கள் யாரும் தொழிலாளர்களின் பிரச்சனைக்காக ஆலைக்குள்ளும் போராட்டம் நடத்துவதில்லை. சமூகப் பிரச்சனைகளுக்காக இம்மியளவு கூட கவலைப்படுவதுமில்லை. இவர்களா நம்மை காப்பாற்றக் போகிறார்கள் வேலையை விட்டு வேண்டுமானால் அனுப்புவார்கள் (2016ல் 4 தொழிலாளர்களை அனுப்பியது போல்).

சமூக அறிவியலை புரிந்துகொள்வது தான் மார்க்சிய விஞ்ஞானம்.

ஆக நம்முடைய ஆலைக்குள் நடக்கின்ற பிரச்சனைகள் வேறு சமூகத்தில் நடக்கின்ற பிரச்சனைகளும் வேறானவை அல்ல. இரண்டுக்குமே மூல காரணம் ஒன்றுதான். இந்த சமூக அறிவியலை புரிந்துகொள்வது தான் மார்க்சிய விஞ்ஞானம். அதனடிப்படையில் தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொழிலாளர்களை ஒரே வர்க்கமாக அணிதிரட்டும் வேலையை செய்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாகத்தான் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை அணி திரட்டுகிறவிதமாக 28.01..2018 அன்று இந்திய அளவில் உள்ள தொழிற்சங்கங்களை இணைத்து மிகப்பெரிய அளவில் கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது சொல்லுங்கள் ஒட்டுமொத்த சமூகத்திற்கான விடுதலைக்குப் போராடும் ஒரு சங்கத்தால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா? அல்லது எவன் செத்தால் நமக்கென்ன நம் வயிறு நிறைந்தால் போதும் என்று இருப்பவர்களால் தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியுமா?

முடிவு உங்கள் கையில்…

இறுதியாக ஹிட்லர் கால ஜெர்மானிய கவிஞனின் கவிதை வரிகள்.

ஹிட்லர் யூதர்களை கொன்றொழித்தான். நான் அமைதியாக இருந்தேன்.
கத்தோலிக்கர்களை தேடிப்பிடித்து வெட்டினான். அவர்களைத் தானே கொல்கிறான் என அப்போதும் நான் அமைதியாக இருந்தேன்.
புரோட்டஸ்டண்டுகளை கொன்றான். அப்போதும் நான் இழுத்துப் போர்த்திக் கொண்டேன்.
கம்யூனிஸ்டுகளை கொன்றான். நான் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால் எனக்கு கவலை இல்லை என்று இருந்தேன்.
தொழிற்சங்கத் தலைவர்களை கொன்றான். நான் கண்களை இறுக மூடிக் கொண்டேன்.
இறுதியில் அவன் என்னிடமே வந்துவிட்டான். திரும்பி பார்த்தால் என்னைக் காப்பாற்ற யாருமே இல்லை.

நன்றி : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, SRF மணலி கிளை

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/trade-union-and-revolutionary-politics/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
காவிரி பிரச்சனை – பு.ஜ.தொ.மு பத்திரிகை செய்தி

பத்திரிகை செய்தி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, கன்னட வெறியர்கள் கர்நாடகா வாழ் தமிழர்கள் மீது தாக்குதல்...

பண நெருக்கடி கையை கடிக்கிறதா? காரணங்கள் ரகசியமில்லை

பொதுவாக பணப் புழக்கம் குறைவாக இருப்பதாகவும், உங்களுக்கு வரும் வருமானம் சுருங்கியிருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் அதற்கு ஒரு காரணம் தேவையான அளவு பணத்தை வெளியிடாத மோடி அரசின்...

Close