முதலாளிகள் ஆரம்பிக்கும் போட்டி யூனியன்!

தொழிற்சங்க டைரி குறிப்புகள் -1

2020 IT தொழில்நுட்ப முதலாளிகள் கூட்டத்தில் பேசப்பட்ட முடிவு.

“நாம் எவ்வளவோ முயற்சி செஞ்சு பாத்துட்டோம். யூனியன் வராது” என்று மனப்பால் குடித்து வந்தோம். இந்த Trade Unionist எல்லாம் நல்லா வேலைசெஞ்சு மக்களை திரட்டி எப்படியோ யூனியன் வர வைச்சிட்டாங்க.” என்று ஆரம்பித்தார் No1 கம்பெனி முதலாளி.

“நான் கூட இவனுகள மெத்தனமா நினைச்சேன். எப்படிப் பார்த்தாலும் 40 லட்சம் ஐ.டி துறையில் நல்ல திறமைகள் கண்டு பிடிச்சிட்டாங்க. 5 வருஷத்துல பத்து யூனியன்களுக்கு மேல வந்துருச்சு. இந்தியா முழுக்க 50 சொச்சம் தொழில் சங்கம் வந்துடுச்சு. தமிழ்நாடு, கர்நாடகால மட்டும் 10 தொழிற்சங்கங்கள் இருக்கு” என்றார் No2 கம்பெனி முதலாளி.

“கூடுதல் சம்பளம் கேட்டு போராடுவது மட்டுமில்ல, 8 மணி நேரம் தான் வேலை செய்வேன்னு சொல்வதுதான் பிரச்சனையா இருக்கு. முன்ன மாதிரி ஹைக், ஆன் சைட் குடுப்பேன்னு ஆசை காட்டினாலும் தெளிவா முடியாதுனு உறுதியா சொல்றாங்க ” என்று கண்ணீர் விட்டார் No3 கம்பெனி முதலாளி.

“நாம Client project புடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டோம் குட்டிக்கரணம் எல்லாம் அடிச்சு ப்ராஜெக்ட் வாங்குறோம் . சொல்லும் போதே நாக்கு தள்ளுது . சல்லிசான பில்லிங்-ல் ஆட்கள் தருகிறேன் என்று சொல்லி உத்தரவாதம் கொடுத்துதான் assignment வாங்கினோம். இப்போ, சரியான சம்பளம், முறையான வேலை நேரம்னு வந்தா நாம தலையில் துண்டை போட்டுக்கொண்டு போக வேண்டியதுதான்” என்று அரற்ற ஆரம்பித்தார் இன்னொரு பெரும் தலை.
மேலும் சில புலம்பல்கள்

“எவனும் எட்டு மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க மாட்டான்”

“இந்தியாவும் சீனாவும் தான் நமக்கு இருக்கு. சீனால இந்தியா அளவு வேலை வாங்க முடியாது, இன்னும் இங்கிலீஷ் பிரச்சனை வேற. போற போக்கில் இந்தியால கூட North East தாண்டி நினைச்சு பார்க்க முடியாத நிலைமை வந்துரும் போல இருக்கு!”

“இந்தியாவை விட ஏதேனும் மாற்று இடத்துல ப்ராஜெக்ட் பண்ணனும்னு மற்ற இடத்துல வாய்ப்பு இருக்கான்னு பார்த்தா அதுவும் தொல்லை. சீனால மொழி பிரச்சனை, USA ல டிரம்ப் குடைச்சல், மெக்ஸிகோல தீவிரவாதத்தால் வேலை வாங்கறதே பிரச்சனை, கனடால குளிர் பிரச்னை, ஐரோப்பால சந்துக்கு ஒரு மொழி பேசுறாங்க, ஶ்ரீலங்கா பங்களாதேஷ் மலேஷியா போன்ற நாடுகளில் இனவாத பிரச்சனை. அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளை யோசித்து கூட பார்க்க முடியாது” என்று No3 கம்பெனி முதலாளி அறிவாக பேசினார்.

“இந்தியா முழுக்க யூனியன் வந்துருச்சு. எவனையாவது காலையில மிரட்டினா மதியம் தொழில்தகராறு 2K நோட்டீஸ் வருது. எப்படித்தான் சமாளிக்கறதுனு தெரியல.” என்று புலம்பலை அதிகமாக சொன்னார் .

“நம்ப தொடர்பில இருக்கற லஞ்சம் வாங்கும் ரசியல்வாதிகள், Labour ஆஃபீஸர் கூட “EXTRA காசுக்கு” சதி வேலை செஞ்சா என்ன தான் பண்றது.”

“இப்படி செய்து பார்க்கலாமா. திவால் நோட்டீஸ் IP பெட்டிசன் கொடுக்கலாமா? அப்படி மிரட்டலாமா?” என்று யோசனையை சொன்னார் No3 கம்பெனி முதலாளி.

“இதெல்லாம் வேலைக்கு ஆகாது தல. காற்றுமாசுபாடு பிரச்சனையால் ஒரு ஸ்டெர்லைட் கம்பெனி ஒழுங்கா இல்லைனு ஆயிரக்கணக்கான மக்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு , மக்கள் ஒண்ணா நின்ன பிறகு எவனால என்ன பண்ண முடிஞ்சது. மேலும் நுணுக்கமான நஷ்டம் என்று சொல்லி ஒரு கம்பெனி தமிழ்நாட்ல மூடிட்டு இன்னொரு ஊர்ல கம்பெனி பிறந்தால் இணையத்தில் எழுதி கிழிக்குறாங்க. எந்த மாநில மத்திய அரசாங்கமும் நமக்கு துணை நிற்கவில்லை. அரசியவாதியும் மாசமானா பெட்டி வாங்கிகிட்டு, எலக்சன் by election நேரத்தில் தலையை சொறிஞ்சிட்டு பணம் வாங்குகிறான். பல நேரத்தில் பிரச்னையை முடிக்க முடியாம மத்திய அரசு மாநில அரசை கை காட்டுது. மாநில அரசு மத்திய அரசை கை காட்டி தப்பிச்சிக்கிறாங்க. நம்ம முதலாளி காசுதான் விரயம்”

கார்ப்பரேட் பிரச்சனைன்னு மக்கள் போராட ஆரம்பித்து விட்டால் எல்லா கட்சிகளும் ” நாட் ரீச்சபிள்” என்று மக்கள் கட்சி ரேஞ்சுக்கு பேசிட்டு முழுமையான ” நாட் ரீச்சபிள்” MODE-க்கு போய்விடுகிறார்கள். ஆனா எல்லா பிரஸ்-க்கு மட்டும் “REACHABLE ” என்று போட்டுடைத்தார் பெரிய தொழில் முதலை.

“ஆமாங்க கட்சி பேதமில்லாமல் கார்ப்பரேட் ஆகிய நம்மள ஏமாத்துறாங்க.. நாம இல்லாம இவங்க கட்சி நடத்த முடியுமா! ஏதாவது பிரச்சனைனா “நான் முடிச்சு தரங்க” “எனக்கு எவ்ளோ தருவீங்க”னு ஒவ்வொரு கட்சியும் பேரம் பேசுது. Strike ஏதாவது நடந்துவிட்டால் நான் உனக்கு சுமுகமாக பேசி முடிச்சு தரேன் என்று சொல்லி ஒவ்வொரு கட்சியும் காண்ட்ராக்ட் முறையில் RATE கார்டு வச்சிட்டு பேரம் பேசுகிறது. ரொம்ப பழைய technique தான் இது. இன்னும் 5 வருடத்தில் பிரச்னை இன்னும் கூட பெருசாகும்…” என்று புலம்பினார்.

“தொழில்சங்கத்தை உடைக்க இதைவிட பெரிய கோடு போட வேண்டும்.” என்று தத்துவம் பேசினார் No3.

“என்ன சொல்றீங்க??”

“இருக்கற தொழிற்சங்கம் ஒன்னும் இல்லாம போகணும்னா தொழிற்சாலை முதலாளிகள் சேர்ந்து நம்ம கட்டுப்பாட்டுல மிக பெரிய பிரமாண்ட தொழில்சங்க அமைப்பு ஏற்படுத்த வேண்டும். முக்கியமா முதலாளிகள் தொழில்சங்கம்னு அது மக்களுக்கு தெரிய கூடாது அப்புறம் எவன் சேருவான் ஏமாறுவான்”

“உண்மையை சொல்லணும்னா கார்ப்பரேட் நம்மக்கிட்டா ஒத்துமை இல்லை .. .”

“எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. தொழிலாளர் சார்பான தொழிற்சங்கங்கள் எதுவும் வளரக்கூடாது. தொழிற்சங்கம் கோர்ட் படியேறி ஒரு தீர்ப்பு தொழிலாளருக்கு சாதகமாக வாங்கிட்டா 40 லட்சம் பேரும் அதை வைத்து கொண்டு வெற்றி நடை போடுவார்கள். எச்.சி.எல் வெர்சஸ் ரமேஷா தீர்ப்பு மாதிரி”

“எட்டு மணி நேர வேலை என்று தொழிலாளிகள் பேசலாமா? அப்படி பேசுவதற்கு தொழில்சங்கங்கள் விடலாமா.? எல்லாரும் ஒண்ணுனு சமத்துவம் பேச ஆரம்பிச்சா பணக்காரனுக்கும் அன்னாடங்காச்சிக்கும் என்ன வித்தியாசம்..”

“அப்படி என்னதான் சார் வழி.”

“நம்ம ஊரு கம்பெனி சார்பில் போட்டி தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாம். ஒன்றை வேணும்னு சொன்னா வேணாம்னு முதலாளி தொழில்சங்கம் சொல்லணும். போனஸ் 8% கேட்டா நம்ம முதலாளி தொழில்சங்கம் மூலம் இவனுக்கு 5% கொடுக்கணும். நாம பெருசா இருக்கணும்னா அதைவிட பெரிய கோடு போடணும். அதற்கு கொஞ்சம் செலவு ஆகும்..”
ஆடு கசப்பு கடைக்காரனை தான் நம்பும்.”

“தொழிற்சங்கங்கள் தொழிலாளிகள் நடத்தும்போது இவ்வளவு காசு வைத்திருக்கும் முதலாளிகளாலும் நடத்த முடியாதா? இந்த யூனியன் எல்லாம் இன்னைக்கு வந்தது. முதல்ல கம்பெனி வந்தது அதுக்கப்புறமா யூனியன் வந்துடுச்சு, நம்மளால நடத்த தெரியாதா” என்று தெளிவான பதிலை முன் வைத்தார் .

௧) போட்டி இருப்பது போல தோற்றம் ஏற்படும். போட்டி, தொழிற்சங்க இயக்கத்தை நல்லா வளர்த்துள்ளதுன்னு தோன்றும்.
௨) தொழிலாளர் யூனியன்ல நூறு பேரும் நம்முடைய போட்டி தொழிற்சங்கத்தில் ஆயிரம் பேரும் இருப்பாங்க.
௩) நம்ம தொழில்சங்கம் மூலம் நாம சொல்ற தீர்வு கிடைக்கணும். மத்த தொழில்சங்கம் சரியான தீர்வை கேட்டாலும், ஏதோ ஒரு தீர்வு கிடைக்கும் போது எவன் பிரச்சனை செய்யும் தொழில்சங்கத்தில் சேர்வான்?
௪) யாரு எதிர்ப்பாளிகள் என்று கண்டுபிடிச்சு நம்ம தொழில்சங்கம் இனிமே நமக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுக்கும்.
௫) அரசியல்வாதிகள் யாரு நமக்கு எதிரா இருப்பாங்கன்னு நாம கருப்பு ஆடுகள் வைத்து தெரிஞ்சிக்கலாம்.
௬) இதெல்லாம் வேண்டாம், கைக்கூலி, அடியாள் வச்சு ஏதாவது பண்ணலாம்னு சொல்றவங்களுக்கு பதில் – 40 லட்சம் ஊழியர்களும் ஒண்ணான பிறகு அடிக்க யார் வருவார்.? எந்த ரௌடிக்கு தைரியம் வரும்?

“முதலாளி தொழில்சங்கம் என்று அமைத்து வெற்றிகரமாக இருப்பதாக காட்டும் போது ஒழுங்கான தொழில்சங்கத்தை ஒன்றும் இல்லாமல் மாற்றலாம், அழிக்கலாம்.”

“ஜெயிக்கப் போறதா எல்லாரும் நம்பற குதிரை மேலதான் பந்தயம் கட்டுவாங்க. கொள்கை பேசிட்டு எவ்ளோ நாள் தொழில்சங்கம் ஆட்களும் காசும் இல்லாமல் நடக்கும்.”

முதலாளிகள் எல்லாரும் போட்டி தொழில்சங்கம் அமைக்கலாம்னு முடிவு எடுத்தார்கள் .

முதலாளிகள் கூட்டம் முடிந்தது.

பிரச்னை, வலி எனவே முதலாளித்துவம் இருக்கும் வரை ஒழுங்கான தொழில்சங்கம் இருக்கத்தான் செய்யும் என்று தெரியாமல் தவறான முடிவு எடுத்தார்கள்.

முதலாளிகளின் வீழ்ச்சிப் பாதை தொடரும்.

– காசிராஜன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/trade-union-anthology-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தனியார் “தரம்” – அப்பல்லோ மருத்துவமனையின் அட்ராசிட்டி

நோயாளியின் தேவையை விட, அவரது பணம் கட்டும் திறமைதான் சிகிச்சையை தீர்மானிக்கிறது. பணம் கட்ட முடியாதவர்கள் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்தாலும், அந்த சிகிச்சை மருத்துவமனையில் இருந்தாலும்...

சி.டி.எஸ்-க்கு பிரச்சனையா? உண்மையாகவா?

தான் லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வெற்றிகரமாக மறைத்து உயர்மட்ட மேலாளர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ எந்த சேதமும் இன்றி சி.டி.எஸ் தப்பித்து விடலாம். சி.டி.எஸ் ஊழியர்களும், பொதுமக்களும் மட்டும்தான்...

Close