சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பகுதிகளில் ஏற்படும் சமீபத்திய போக்குவரத்து நெரிசலும் அதனால் பல இன்னல்களையும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

போர்டு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தன்னுடைய பிற கிளைகளை மூடிவிட்டு அதில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அனைவரையும், எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் புதியதாக உருவாக்கப்பட்ட அலுவலகத்தில், பணிக்கு அமர்த்தியுள்ளது. மேலும் இதே வளாகத்தில் சிடிஎஸ் நிறுவனம் அதனுடைய புதிய கட்டடத்தையும் திறந்துள்ளது இதனால் அங்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இது போக அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் உள்ள டெக் மகேந்திரா, விப்ரோ, HCL போன்ற நிறுவன பணியாளர்களும் அன்றாடம் வந்து செல்லும் போது தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்கள் உண்டாகிறது.

இந்த போக்குவரத்து நெரிசல்கள் என்பது குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் மேலாக நீடிக்கின்றது. இதனால் இந்த வழியே பயணிக்கும் பயணிகள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் மேலும் வெகு தூரத்திலிருந்து வரும் தொழிலாளர்கள் கடும் சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் இதனால் தினசரி அன்றாட அலுவல்களுக்கு செல்வதும் வீட்டுக்குச் செல்வது மிகவும் சவாலான நேரங்களாக தொழிலாளர்களுக்கு உருவாகியுள்ளது.

சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து பெரும்பாக்கம் மற்றும் மேடவாக்கம் பகுதிகளில் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாத பாதை போக்குவரத்துக்கு உள்ளது.
அதுபோக சோழிங்கநல்லூர் பகுதியில் டோல்கேட் அமைந்திருப்பதால் வரும் வாகனங்கள் வெகுநேரமாக காத்திருக்கும் சூழ்நிலைகள் உருவாகின்றது.

எல்காட் தொழில்நுட்ப பூங்கா அருகாமையிலேயே மத்திய அரசின் செந்தமிழ் தமிழ் ஆய்வு மையத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது அதுவும் ஓரிரு மாதங்களில் திறந்துவைக்கப்படவுள்ளது .

விப்ரோ தகவல் தொழில்நுட்ப நிறுவனமும் தன்னுடைய புதிய கட்டடங்களை முன்புறமாக அமைத்து வருகிறது அதுவும் ஓரிரு மாதங்களில் திறந்து வைக்கப்பட உள்ளது.

சோழிங்கநல்லூர் சந்திப்பில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தன்னுடைய தொழிற்சாலைகளை அமைத்து வருகிறது அதுவும் திறக்கும் வேளையில் சோளிங்கநல்லூர் சிக்னலில் மிகப்பெரிய அளவிற்கு போக்குவரத்து நெரிசல் பிரச்சனைகள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் மெட்ரோ ரயில்கள் பணி வரைவு திட்டமும் சோழிங்கநல்லூர் மற்றும் மேடவாக்கம் பகுதியை மையப்படுத்தி அமைக்கப்பட உள்ளது. அப்படி அமைக்கும் பட்சத்தில் அதற்கு நிரந்தர தீர்வுகள் மாற்று ஏற்பாடுகளை யோசிக்க வேண்டுமல்லவா?

சென்னையில் ஏற்படும் மழை வெள்ள சூழ்நிலையில் இந்தப் பகுதியானது கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதேபோன்ற நிலை நீடித்தால் மழை காலங்களில் பெரும் இன்னல்களை அடைய நேரிடும்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் மென்மேலும் நிறுவனங்கள் அங்கு பெருகி வருவதால் அதற்கேற்ற உள்கட்டமைப்பு வசதிகளும் அங்கு இல்லாதது தான் இந்த பெரும்பாலான பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.

தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அந்தப் பகுதியில் மாற்று ஏற்பாடுகளை செய்யாதது தான் இதற்கு ஒரு முக்கிய காரணமாக நாம் கருத வேண்டியுள்ளது.
நாள்தோறும் தொழிலாளர்கள் இதற்காகவே பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஒரு சூழ்நிலையில் உள்ளனர் இதற்காக ஒரு நிரந்தர தீர்வை நோக்கி தான் நாம் இதில் பயணிக்க வேண்டும்.

பல்வேறு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்று தற்போது எல்காட் தொழில்நுட்ப பூங்கா பின்புற நுழைவுவாயில் மூலமாக போக்குவரத்தை ஏற்பாடு செய்து தருகிறோம் என்று நிறுவனங்கள் அறிவித்துள்ளன ,ஆனால் அந்த அறிவிப்புகள் என்பது நிலையான ஒரு அறிவிப்பாக இருப்பதாக தெரியவில்லை அதுவும் குறிப்பிட்ட மணி நேரத்திற்கு மாலையில் மட்டுமே அனுமதிக்கப்படுவர், வெளியில் செல்லும் வாகனங்களுக்கு மட்டும் மாலையில் அனுமதிக்கப்படுவர், உள் வருவதற்கு அனுமதி இல்லை என்ற ஒரு முரண்பாடான ஒரு அறிக்கையை கொடுத்துள்ளனர்.


தொழிலாளர்கள் சார்பாகவும் அனைத்து பொது மக்கள் சார்பாகவும் எங்களது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நாங்கள் வைக்கும் கோரிக்கை என்பது நிரந்தர தீர்வு ஏற்படுத்துங்கள் என்பதுதான்

ஒன்று சோளிங்கநல்லூர் பெரும்பாக்கம் மேடவாக்கம் சாலை பணிகளை துரிதமாக நடத்தி நல்லதொரு சாலைகளை அமைத்து தருதல்.

இரண்டு சோழிங்கநல்லூர் எல்காட் டோல்கேட் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தொழிலாளர்கள் விரைவாகச் செல்ல வழிவகை செய்தல்

நிரந்தரமாகதொழிலாளர்கள் பயன்படுத்தும் வகையில் காரப்பாக்கத்தில் இருந்து எல்காட் தொழில்நுட்ப பூங்கா வரும் பின்புற வசதியுள்ள பாதையை அனைத்து வேலை நேரங்களில் பயன்படுத்த எல்காட் தொழில்நுட்ப பூங்கா நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும்.

நிரந்தர தீர்வாக மாற்று பாதைகளை அமைக்க தகவல் தொழில்நுட்ப நிர்வாகங்கள் கலந்தாலோசித்து அதை எல்காட் தொழில்நுட்ப பூங்கா நிர்வாகம் அமைத்து தரவேண்டும்.

இது அந்த பகுதியில் பயணிக்கும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிலாளர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல, அது அந்த பகுதியில் பயணிக்கும் அனைத்து பொதுமக்களும் அந்தப் பகுதியில் நிரந்தரமாகக் குடியிருக்கும் மக்களுக்கும் ஏற்படும் இன்னல்கள் ஆகவே இந்த கோரிக்கைகளை அனைத்து தகவல் தொழில்நுட்ப துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக எல்காட் தொழில்நுட்ப பூங்கா நிர்வாகத்திற்கும், தமிழக போக்குவரத்துத் துறைக்கும்,தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் மற்றும் தமிழக அரசுக்கும் கோரிக்கையாக வைக்கின்றோம்

– தமிழ் அன்பர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/traffic-in-elcot-sholinganallur/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பொருளாதார நெருக்கடியும் ‘கரோஷி’ மரணங்களும்.

நிதிமூலதனம் தனது நெருக்கடியை சமாளிக்க தொழிலாளி வர்க்கத்தைப் பலி கொடுப்பதை, அரசுகள் கசப்பு மருந்து, தேச நலன், வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற திரைகள் மூலம் மறைக்கின்றன....

நவம்பர் 7 : சுரண்டலை ஒழிக்க உழைக்கும் வர்க்க அரசு அதிகாரம்

கம்யூனிசம் - மனித நாகரீகத்தின் எதிர்காலம் சோசலிசம் - இன்றைய உலகின் நெருக்கடிகளுக்கான ஓரே தீர்வு

Close