அன்பார்ந்த போக்குவரத்துத் துறை தொழிலாளிகளே!
யாருக்கு எதிராக போராடுகிறீர்கள்?
உங்களது உழைப்பை, ஊதியத்தை, சேமிப்பை முறைகேடாக கையாடல் செய்த கூட்டத்திற்கு எதிராக போராடுகிறீர்கள். இந்த குற்றவாளிகளுக்கு எதிராக சமரச பேச்சுவார்த்தை, வழக்கு, நீதிமன்ற வழிகாட்டல்கள் என பல வழிகளில், உள்ளுக்குள்ளாகவே பல வகைகளில், போராடிவிட்டு வேறுவழியின்றி வேலை நிறுத்தம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்தீர்கள். உங்களை வஞ்சித்தவர்கள் காவல்துறையையும், நீதித்துறையையும் துணைக்கு அழைத்துக்கொண்டு இரவும் பகலும் உங்களுக்கு எதிராக இயங்கத் துவங்கி விட்டனர். நீங்களோ, வேலை நிறுத்தம் மூலமாக உங்களை வஞ்சித்தவர்கள் தானாக இறங்கி வருவார்கள் என்று நிற்கிறீர்கள். வரமாட்டார்கள். வரவழைக்க வேண்டும்.
உங்களுடைய நண்பர்கள், உங்களுக்கானவர்கள் மக்கள்தான்.இப்போது அவர்கள் நீதிமன்ற மிரட்டல் மூலமாக கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றாமலேயே வேலை நிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார்கள்.
உங்களுடைய நண்பர்கள், உங்களுக்கானவர்கள் மக்கள்தான். உங்களது கோரிக்கைகளை மக்களிடம் கொண்டுசேருங்கள். ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் புகைப்படங்களைப் போட்டு போஸ்டர் அடித்து ஒட்டுங்கள், பிரசுரமாக போட்டு மக்கள் கைகளில் சேருங்கள். தினசரி பேருந்துகளை இயக்க அயராது இயங்கியதுபோல் இதிலும் இயங்குங்கள். ஓய்வெடுக்கலாம் ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல.
இதற்கெல்லாம் செலவாகுமே என்ன செய்வது?
சங்கநிதி, கைகளிலிருக்கும் பணம் போதவில்லையா மக்களிடம் உண்டியல் ஏந்துங்கள். உங்களுக்கு ஏற்கனவே மக்களிடம் ஆதரவு உள்ளது. ஆனால் அது போதாது, மேலும் பலப்படுத்துங்கள்.
– பிரவீன்