போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் – ஒரு விளக்கம்

பேருந்துத் தொழிலாளர் போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது. அரசும், நீதிமன்றமும், பத்திரிகைகளும் வேலை நிறுத்தத்தை அவதூறு செய்வது மூலமாகவே தொழிலாளர்களின் நீண்டகால, நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து, போராட்டத்தை தோற்கடித்து விடலாம் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தமது சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறார்கள்.

தமிழக அரசோ கத்துக்குட்டி தொழிலாளர்களை வைத்து பேருந்துகளை ஓட்டி விபத்துகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இப்போதைய ஆட்சியாளர்களே ஊழல் செய்வதிலும், காலில் விழுவதிலும்தான் திறமையானவர்கள், ஆட்சி செய்வதில் கத்துக்குட்டிகள். இந்த கத்துக்குட்டிகளை விரட்டி விட்டு உழைக்கும் வர்க்கம் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்.

வாட்ஸ்-ஆப்-ல் வந்தது

1.40 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நடத்துனர், ஓட்டுநர், மெக்கானிக் போன்றவர்கள் நிலைமை தான் படுமோசம்.

1.40 லட்சம் ஊழியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நடத்துனர், ஓட்டுநர், மெக்கானிக் போன்றவர்கள் நிலைமை தான் படுமோசம். இளநிலை பொறியாளர் முதல் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் வரை நிர்வாக ரீதியாக வருவதால் பெரிய பாதிப்பு இல்லை. குறைந்தபட்ச ஊதியம் கூட ரூ 45,000.

இன்றைய போராட்டத்தின் மிக முக்கிய அம்சம் 4 தான்.

 1.  போக்குவரத்து ஊழியர்கள் பணி நியமனம் பெறும்போது Basic Pay : 5,500 + Grade Pay : 1700 என்ற விகிதாச்சாரத்தில் ஊதியம் பெறுவார்கள்.. இதுவே மற்ற அரசு ஊழியர்கள், Basic 5,500+ Grade 2400 என்ற அடிப்படையில் பெறுவார்கள்..
  முதல் மாதமே (5500+2400=7900, 7900*2.57= 19532) ரூ 19,532 வரும்.
  இந்தத் தொகையை தான் போக்குவரத்து ஊழியர்கள் கேட்டார்கள். இதை கொடுக்க மறுத்தார்கள்..சரி விடுங்கள், 2.57 காரணி கொடுங்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. போக்குவரத்து ஊழியர்கள் 6,900 * 2.57 (ஊழியர்கள் கேட்ட காரணி) = 17,733 வரும். அதிமுக அரசோ, 2.44 என்கிறது. மொத்தம் 16,830 ரூபாய் வரும். எவ்வளவு குறைவு என்று நீங்களே பாருங்கள்.
 2. தொழிலார்களின் வைப்பு நிதி, LIC, கூட்டுறவு நிறுவன கடன், அஞ்சலக காப்பீடு என்று பல வழிகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ 7000 கோடியை யாருக்கு தெரிவிக்காமல் இந்த அரசு எடுத்து செலவு செய்துவிட்டது. ஊடகங்கள் இதை கடந்த மார்ச் மாதமே எழுதினார்கள். மார்ச் மாதம் நடந்த பேச்சுவார்த்தையில் முதல்வரிடம் பேசி அதிக நிதியை பட்ஜட் அறிவிப்பில் பெறுங்கள். அதுவரை ஊதிய பேச்சுவார்த்தைக்கு விலக்கு கொடுக்கிறோம் என்று அமைதி காத்தார்கள். அரசின் நிதிநிலைமை அறிந்தே இதை சொன்னார்கள்.
  மே ஜூன் மாதங்களில் இதை நீதிமன்றம் அறிவுறுத்தியும், உத்தரவிட்டும் செலுத்தாமல் இருக்கிறார்கள். பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வழக்கத்தைவிட கூடுதலாக சில கோடி மட்டுமே செய்தார்கள், அதுவும் புதிய பேருந்திற்கு. அமைச்சர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு வராமல் இருந்துவிட்டார். கொதிப்படைந்த ஊழியர்கள் 15 நாட்கள் கழித்து முன்னறிவிப்பு செய்து முதல் போராட்டத்தை மே இறுதியில் நடத்தினார்கள்.
 3. இந்த பணம் கிடைக்க பெறாமல் இறந்தவர்கள் எண்ணிக்கை பல்லாயிரம். பெண்ணுக்கு திருமணம், மகன் தொழிலுக்கு பணம் கொடுக்க முடியாமல் பலர் தவிக்கிறார்கள். மாத பென்ஷன் 2 தவணையாக வருகிறது என்றால் எண்ணி பாருங்கள் அவர்களின் நிலையை.
  நேற்றைய பேச்சுவார்த்தையில் ரூ 7,000 கோடி செலுத்த 7 ஆண்டு அவகாசம் கேட்டுள்ளார் அமைச்சர்.
  எவ்வளவு வேடிக்கை என்று பாருங்கள்? 2 நாட்கள் சம்பளம் தாமதமாக வந்தாலே நாம் நம் அலுவலகங்களில் கேள்வி கேட்கிறோமே? அவர்கள் போராட வந்தது தவறில்லையே.
 4. போர்க்கால அடிப்படையில் பேருந்துகளை சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை மிகவும் வலுத்து வந்த நேரம். தனியார் மயமாக்கல் செய்தால் கட்டண உயர்வு என்று அரசிற்கு கெட்டப்பெயர் என்பதால் அதை நிராகரிக்கிறார்கள்..
  போதுமான நிதி ஆதாரம் இல்லை, Spare Parts இல்லை,பேருந்துகளும் சரியில்லை. சரிசெய்வது குறித்து பின்னொரு நாள் முடிவெடுப்போம் என்ற கருத்தை ஏற்க மறுத்தனர் தொழிற்சங்கத்தினர்.

முதல் 3 வேண்டுமென்றால் அவர்களின் சொந்த பிரச்சினை என்பீர்கள். 4வது கோரிக்கை உங்களுக்கானது.

முதல் 3 வேண்டுமென்றால் அவர்களின் சொந்த பிரச்சினை என்பீர்கள். 4வது கோரிக்கை உங்களுக்கானது. மோசமான பேருந்து என்று ஓட்டுநரையும், நடத்துனரையும் கேள்வி கேட்கும் முன் அதை வழங்கிய அரசை எதிர்க்க பழகுங்கள். ஆணிவேரை மறந்து விழுதை குறை சொல்லி பயனில்லை.

இந்த போராட்டம் கடந்து வந்த பாதையும் நீண்ட நெடியது..

டிசம்பர் 2016-ல் பேச்சுவார்த்தைக்கு அழைக்க சொல்லி பணிமனைகளில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. வர்தா புயல் சென்னையை தாக்கியதும், போராட்டத்தை விடுத்து களத்தில் பேருந்தை இயக்கினார்கள்.

மார்ச் மாதம் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அமைச்சரிடம் “முதல்வரிடம் பேசுங்கள். நிதியை பெறுங்கள்.. தேவையை விளக்கி எழுதி இருக்கிறோம்” என்று ஒரு கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. பட்ஜட் முடியும் வரை காத்திருந்தார்கள்..
பயனில்லாமல் போக, மீண்டும் அரசே அழைத்தது மே முதல் வாரத்தில். ஆனால் அமைச்சர் அந்த பக்கமே வரவில்லை. தொழிற்சங்கத்தினர் பணிமனைகள் முன்பு போராட்ட அறிவிப்பு கொடுத்தனர். பணிமனை செயலருக்கு நோட்டீஸ் அளித்தனர். துண்டு பிரசுரம் வழங்கினார்கள். விழிப்புணர்வு கூட்டம் நடத்தினார்கள். இறுதியாக போக்குவரத்து துறை செயலருக்கு நோட்டீஸ் கொடுத்தார்கள். மே இறுதி வாரத்தில் போராட்டத்தில் குதித்தார்கள். வழக்கம்போல் நீதிமன்றம் அடக்கி ஒடுக்கி நீதியை நிலைநாட்டியது.

ஆகஸ்ட் மாத பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமல் செப்டம்பர் மாதம் பேச்சுவார்த்தை என்றார்கள். நீதிமன்ற உத்திரவு வருகிறது. ஓய்வு ஊதிய பலன்கள், வைப்பு நிதி திரும்ப செலுத்துதல் என அனைத்தையும் சரிசெய்ய 4 மாதம் அவகாசம் கொடுத்தார்கள். டிசம்பர் 15 பேச்சுவார்த்தை என்பதால் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வந்தது.

டிசம்பர் 15 பேச்சுவார்த்தைக்கு வந்த அமைச்சர் ஆர்.கே. நகர் தேர்தலை காரணம் சொல்லி எழுந்து சென்றார். உடனே சென்னை போன்ற நகரங்களில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. ஆனால் முன்னறிவிப்பு செய்யவில்லை என்பதை உணர்ந்து 4 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் இயக்கினார்கள்.

அன்றும் சொன்னார்கள் “அடுத்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்தால் உடனடி வேலைநிறுத்தம்” என்று.
இதை காட்டாமல் விட்டது ஊடகத்தின் தவறு. நமக்கு தான் ரஜினி அரசியல் முக்கியமாயிற்றே. மறந்தே விட்டோம்.

நேற்றைய கூட்டத்தில் இன்னும் சில விஷயங்கள் நடந்தது. நிலுவையில் உள்ள அரியர்ஸ் பணம் ரத்து என்றார் அமைச்சர்.குறைந்தது ஒவ்வொரு தொழிலாளியும் ரூ 30,000 இழப்பார்கள். இது என்ன நியாயம்? நம் பணத்தை ரத்து செய்தால் நாம் அமைதியாகவா இருப்போம்? அதன் விளைவு தான் உடனடி போராட்டம்.

# ஆதரிப்போம்.. அவர்களும் மனிதர்கள் தானே.

வாட்ஸ்-ஆப்-ல் வந்தது

Permanent link to this article: http://new-democrats.com/ta/transport-workers-strike-an-explanation/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகள் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய முடியும்?

விவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார்? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன? அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன?

BPO, Call Center, KPO – சங்கமாக அணி திரள்வதே தேவை

சுரண்டலையும், கடுமையான பணிச்சூழலையும், சந்தித்து குறைவான சம்பளத்துடன் வேலை செய்யும் நமக்கு பணிப்பாதுகாப்பு என்பது சுத்தமாக இல்லை. நிர்வாகம் நினைத்தால் நம்மை எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்கியெறியலாம்....

Close