டிசிஎஸ் நிறுவனத்தின் பாகுபாட்டிற்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு

னக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக டி.சி.எஸ் நிறுவனம் சமீபமாக செய்திகளில் அடிபடுகின்றது. டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு வந்த பிறகு அமெரிக்கர்களை வேலைக்கு எடுக்க இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் இந்த வழக்கு டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பே தொடரப்பட்டது.

டாடா குழும நிறுவனங்களிலேயே கடன் இல்லாமல் தொடர்ந்து இலாபம் கொடுத்து வரும் நிறுவனம் டி.சி.எஸ் தான். டி.சி.எஸ்-க்கு எதிரான இந்த சட்ட ரீதியான வழக்கு அந்நிறுவனத்தின் ஊழியர் பாகுபாட்டிற்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ளது. டி.சி.எஸ் நிறுவனத்தின் முன்னால் அமெரிக்க ஊழியர்கள் சிலர் ஒன்று சேர்ந்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டிய டி.சி.எஸ்-ஐ எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் “டி.சி.எஸ் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்நிறுவனம் ஊழியர்களை வேலைக்கு எடுப்பதில் பாரபட்சமாக நடந்து கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அமெரிக்காவில் 12.5 சதவீதம் மட்டுமே தெற்காசிய ஊழியர்கள் உள்ள நிலையில், டி.சி.எஸ் தன்னுடைய அமெரிக்க அலுவலகங்களில் 79 சதவீதம் அளவிற்கு தெற்காசியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது ஏன் என்று விளக்கம் கேட்டும் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால், தற்காலிகமாக அமெரிக்காவில் பணி செய்ய இந்தியாவிலிருந்து வந்திருக்கும் ஊழியர்களையும் சட்டபூர்வமாக H1B விசா வைத்துள்ள திறன்மிக்க ஊழியர்கள் பலரையும் இதில் சேர்த்து குற்றம் சாட்டப்படுகிறது என்று கூறி டி.சி.எஸ் நிறுவனம் இதனை மறுத்துள்ளது. மேலும் 40 சதவீதம் அளவிற்கு தெற்காசியர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் வருகிறது என்றும் ஒரு இந்திய நிறுவனத்தில் வேலை பார்க்கவோ அல்லது வேலைக்காக இடம் மாறுவதற்கோ எல்லோரும் தயாராக இருப்பதில்லை என்றும் டி.சி.எஸ் கூறி உள்ளது” எனத் தெரிவிக்கிறது.

டி.சி.எஸ் நிறுவனம் இந்தியாவில் வேலை செய்யும் ஊழியர்களிடமிருந்து தொழிலாளர் நல உரிமைகள் மீறல் தொடர்பான வழக்குகளை சந்திப்பது அரிது. டி.சி.எஸ் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களை வேலையை விட்டு நீக்க முயற்சித்த போது கூட வெகு சிலரே அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றனர். இந்தியாவில் இருக்கும் ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் சம்பந்தமான கொள்கைகள் வெளிப்படையாக இல்லை. ஊழியர்களை பாரபட்சத்துடன் வேலையை விட்டு நீக்கும் போது அல்லது அவர்களை நிமிடங்களில் வேலையை விட்டு நீக்குவதாக மிரட்டும் போது, எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் அவர்களை அச்சுறுத்தாது என்பதால், அமெரிக்க ஊழியர்களைக் காட்டிலும் அவர்கள் இந்திய ஐ.டி ஊழியர்களின் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பயம் அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.

அமெரிக்காவில் இது போன்ற விஷயங்களில் இந்தியாவைப் போன்று தப்பிக்க முடியாது. சமீபத்தில் நடந்த டெக் மஹிந்திரா நிறுவனத்தின் HR அதிகாரி ஊழியரை கட்டாய ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டியதைப் போன்ற சம்பவங்களில் இங்கே அதிக அபராதம் விதிக்கப்படும் மற்றும் நிறுவனத்தின் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

டிரம்ப் பதவிக்கு வருவதற்கு முன்பு H1B விசா வைத்திருப்பவர்களைப் பயன்படுத்துவதில் இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு பெரிய சிக்கல் இல்லை.

இந்திய ஊழியர்களை அவர்கள் தெரிவு செய்வதற்கு காரணம் ஐ.டி. துறையோடு தொடர்புடைய எல்லோருக்கும் தெரிந்தது தான். அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு அதிக சம்பளம் அவர்களுக்கு கொடுக்க தேவையில்லை; இந்தியர்களை அதிக நேரம் வைத்து வேலை வாங்கலாம்.

டிரம்ப் பதவிக்கு வந்தபிறகு, ​​நிறுவனங்கள் அதிக அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அமெரிக்கர்கள் இந்திய நிறுவனங்களில் வேலை செய்ய விரும்புவதில்லை; H1B விசா மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களில் பெரும்பாலோனோர் திறன் மிக்க ஊழியர்கள் என்று டி.சி.எஸ் கூறியுள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் என்ன செய்கின்றன என்பது இந்தத் துறையில் உள்ளவர்களுக்கு தெரியும். கட்டுமானப் பணிக்காக மத்திய கிழக்கிற்கு அனுப்பப்படும் நமது திறமையான தொழிலாளர்களைப் போலவே அவர்கள் ஊழியர்களை ஏற்றுமதி செய்கின்றனர். அமெரிக்க தொழில்நுட்ப ஊழியர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய ஐ.டி. ஊழியர்களை பல வழிகளில் சுரண்ட முடியும்.

இந்த வழக்கு மொத்த ஊழியர்களின் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டால் அது பிற இந்திய ஐ.டி. நிறுவனங்களின் மீதும் வழக்குகள் பாய வழிவகுக்கும். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்தியாவில் உள்ள ஐடி பணியாளர்கள் சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர். அவர்கள் நமக்கு செய்யும் அவமானங்களைப் பொறுத்துக் கொண்டிருந்த நாட்கள் முடிந்துவிட்டன. இதை ஏற்றுக்கொண்டு வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதில் அர்த்தமேயில்லை.

அமெரிக்க ஊழியர்களோ இந்திய ஊழியர்களோ, நிறுவனங்கள் அதைப்பற்றி நினைப்பதில்லை. அவர்களுக்கு இலாபம் தான் கடவுள். அவர்கள் இலாபத்திற்காக எதையும் செய்வார்கள். ஐ.டி ஊழியர்கள் அவர்களைப் பார்த்து பயப்படுவதை விட்டு எதிர்த்துப் போராடும் போது தான் நிறுவனங்கள் தங்கள் வழிமுறைகளை மாற்றிக்கொள்ளும். அனைத்திற்கும் மேல், நம்முடைய கடின உழைப்பால் அவர்களுக்கு உணவளிப்பவர்களே நாம் தான்!

மொழிபெயர்ப்பு – மணி

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/us-lawsuit-against-tcs-discrimination-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ள ஏப்ரல் 3-ம் தேதி அன்று மாலை மாலை 4 மணி முதல் 5 மணி வரை...

கிரெடிட் கார்டு – சட்டப்பூர்வ கந்து வட்டிக் கொடுமை !

பல நேரங்களில் வங்கிகளும் சம்பளம் வாங்கும் வர்க்கத்திடமும், சிறு வணிகர்களிடமும் கந்துவட்டி போன்று  வசூலிக்கின்றன. இந்த அதிக வட்டி வசூலிப்பது சட்டத்திற்கு உட்பட்டே நடைபெறுகிறது.

Close