அமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா – ஒரு புள்ளிவிபர ஒப்பீடு

புள்ளிவிபரங்கள் தெரிவிப்பவை

  1. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவை விட சுமார் 6.3 மடங்கு அதிகம்.
  2. அமெரிக்கா, பிரிட்டன் இரண்டு நாடுகளிலும் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும், வருமானமும் 2%-க்கும் குறைவாகவே உள்ளன. இந்தியாவிலும் சீனாவிலும் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தொகை ஒப்பீட்டளவில் அதிகமாகவும், அதனுடன் ஒப்பிடும் போது விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் வருமான பங்கு மிகக் குறைவாகவும் உள்ளது. அதாவது, விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தொழில்துறை, சேவைத் துறைக்கு சாதகமான வகையில் நெருக்கி பிழியப்படுகிறார்கள்.
  3. இந்த புள்ளிவிபரங்களின்படி சீனாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் பிற நாடுகளை விட மிகக் குறைவாக உள்ளது. ஆனால், வறுமைக் கோடு பற்றிய வரையறையும், வெவ்வேறு நாடுகளின் வேறுபட்ட வாழ்க்கைத் தரமும் இந்த விபரத்தை ஒப்பிடுவதை சாத்தியமற்றதாக்குகின்றன.
  4. உதாரணமாக, அமெரிக்காவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் இந்தியாவின் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் வாழ்க்கைத் தரத்தோடு ஒப்பிடும்படி இருக்கும்.
அமெரிக்கா பிரிட்டன் சீனா
இந்தியா
மொத்த உள்நாட்டு உற்பத்தி (சந்தை விலையில்) $ லட்சம் கோடி 18.558 2.849 14.54 2.29
ஒரு நபருக்கான வருமானம் 57,220 43,770 10,501 1,820
துறை வாரியாக உற்பத்தி (2015)
விவசாயம் 1.6% 0.6% 9.0% 16.1%
தொழில்
20.8% 21.0% 40.5% 29.5%
சேவை
77.6% 78.4% 50.5% 54.4%
வறுமைக் கோட்டுக்குக் கீழ் மக்கள் தொகை 13.7% 15.0% 5.1% 21.3%
உழைப்பாளர்கள் (மில்லியன்) 156 31.75 807.202 502.1
துறை வாரியாக உழைப்பாளர்கள்
விவசாயம்
0.7% 1.5% 29.5% 49.0%
தொழில்
12.0% 18.8% 29.9% 20.0%
சேவை
87.3% 79.7% 40.6% 31.0%

Notes

  1. புள்ளிவிபர ஆண்டுகள் ஓரிரு ஆண்டுகள் வேறுபடுபவை (அனைத்தும் கடந்த 6 ஆண்டுகளுக்கு உட்பட்டவை)
  2. பிரிட்டனின் தொழில்துறை உற்பத்தி மதிப்பு- இரண்டாக பிரிக்கப்பட்டு தரப்படுகிறது
  3. அமெரிக்க சேவைத் துறை ஊழியர்களின் % பல துறைகளாக பிரிக்கப்பட்டு தரப்படுகிறது

தகவல் ஆதாரம் : wikipedia

Permanent link to this article: http://new-democrats.com/ta/us-uk-india-china-a-statistical-comparison-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்காடானது, பாதுகாப்புத் துறை

இந்தியாவைப் பொறுத்தவரையில், சொத்துடைமை வர்க்கங்களின் நலனுக்காக பராமரிக்கப்படும் ராணுவ செலவில், முதலாளிகள் லாபம் ஈட்டும் போது, அதிகார வர்க்க தரகர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கிறார்கள்.

காலனிய கொள்ளைக்கான நிர்வாக அமைப்பு இப்போது என்ன ஆனது?

இந்த காலனிய கொள்ளைக்காக கிழக்கிந்திய கம்பெனியும் பின்னர் நேரடி ஆங்கிலேய பேரரசின் ஆட்சியும் உருவாக்கிய நிர்வாகக் கட்டமைப்பு இப்போது என்ன ஆனது? 200 ஆண்டுகளாக இவர்கள் அடித்த...

Close