1,000 ஊழியர்களை இன்போசிஸ்க்கு அடிமைகளாக விற்கும் வெரிசான்!

வெரிசான் ஊழியர்கள் 1000 பேர் இன்போசிஸுக்கு மாற்றம் – வேலையிலிருந்து தூக்குவதற்கு புதிய வழி!

ன்போசிஸுக்கு வெரிசானிடமிருந்து $70 கோடி மதிப்பிலான புதிய ஒப்பந்தம் கிடைத்திருக்கிறது. இது ஐ.டி துறையின் அயல்பணி ஒப்பந்தங்களில் சமீபகாலத்தின் பெரிய டீல் என்கிறார்கள். வெரிசானுடைய ஐடி துறையை அப்படியே பிரித்து விற்பது நடந்து கொண்டிருக்கிறது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி)

நமது பு.ஜ.தொ.மு ஐடி ஊழியர்கள் பிரிவு பாதிக்கப்பட்ட ஊழியர்கள் சிலருடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை திரட்டி இருக்கிறது. இந்த விற்பனையினால் பாதிக்கப்படும் ஊழியர்கள் உதவிக்காக சங்கத்தை தொடர்பு கொள்ள கோருகிறோம்.

இன்போசிஸ்க்கு தள்ளிவிட குறிக்கப் பட்டிருக்கும் ஊழியர் ஒருவருக்கு அனுப்பப் பட்ட மின்னஞ்சல் கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது.


வெரிசான் ஊழியர்களை தொடர்பு கொண்டதில் கிடைத்த தகவல்களில் சில கீழே:

 1. இந்த இடமாற்றம் நவம்பர் 2018-ல் துவங்குகிறது. விற்கப்பட்ட துறையில் வேலைசெய்யும் ஊழியர்கள் வெரிசானில் இருந்து பணிவிலகல் கேட்க வேண்டும். அவர்களுக்கு இன்போசிஸ் ஆபர் லெட்டர் கொடுக்கும். அவர்கள் அதில் சேர்ந்து கொள்ளலாம்.
 2. பழைய சம்பள வடிவம், பாத்திரம், போன்றவை புதிய வேலையிலும் இருக்கும்.
 3. இன்ஃபோசிஸ்-க்கு போக விருப்பமில்லாவிட்டால் வெரிசானிலேயே தொடர முடியாது.
 4. இந்தியாவில், பணிவிடுப்பு கொடுக்க மறுத்தால், 2 மாத அவகாசத்தில் வெளியேற்றப்படுவார்கள். அமெரிக்காவில் அதன் சட்டப்படி குறைந்த பட்ச இழப்பீட்டுடன் அகற்றப்படுவார்கள்.
 5. விடுமுறை பாக்கி, கிராஜுவிடி, போன்றவைகளுக்கு வெரிசான் தகுந்த தொகையை கொடுத்து விடும்.
 6. வெரிசானில் ஈட்டிய பணிமூப்பு இன்ஃபோசிசில் தொடராது. உதாரணமாக, பணிக்காலம் 5 வருடத்திற்கும் குறைவாக இருப்பவர்களுக்கு கிராஜுவிடி கிடைக்காது, வெரிசான் ஆண்டுகளை இழந்து இன்ஃபோசிஸ்-ல் புதிதாக தொடங்க வேண்டியிருக்கும்.

ஊழியர் மற்றும் சங்கத்தின் தரப்பிலிருந்து சில கேள்விகள் இருக்கின்றன:

 1. இந்த பெரிய விசயத்தைப் பற்றி ஊழியர் தரப்பு பார்வையில் ஏன் எந்த செய்தியும் ஊடகங்களில் வரவில்லை? ஏன் இந்த இருட்டடிப்பு?
 2. பாதிக்கப்படும் ஊழியர்களை ஆசுவசப்படுத்தும் வகையில் இந்த திட்டத்தைப் பற்றி எந்த உறுதியையும் அளிக்காமல் ஏன் இன்போசிஸ் மௌணம் காக்கிறது?
 3. மாற்றப் பட்ட ஊழியர்களுக்கு வேலை உறுதிப்படுத்தல் (confirmation) குறித்த காலத்தில் நடக்கும் என்று இன்போசிஸ் உறுதியளிக்கிறதா?
 4. மாற்றப் பட்ட ஊழியர்களுக்கு வேலை உறுதிப்படுத்தல் (confirmation) குறித்த காலத்தில் நடக்கும் என்று இன்போசிஸ் உறுதியளிக்கிறதா?
 5. அமெரிக்காவில் அதன் சட்டப்படி வேலை நீக்க இழப்பீடு வழங்கப்படும் எனும்போது, ஏன் இந்திய ஊழியர்களுக்கு இந்திய சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறவில்லை?

இது தொடர்பாக வெரிசான் ஊழியர்களின் கருத்துக்களை பார்க்க  https://www.thelayoff.com/t/UTxo80A

வெரிசான், இன்ன்ஃபோசிஸ் போன்ற கார்ப்பரேட் ஆண்டைகள், தங்கள் ஊழியர்களை அடிமைகளாக வைத்து டீல் பேசுகின்றன.

பண்டைய காலத்தில் அடிமைகள் ஒரு ஆண்டையிடமிருந்து மற்றொருவனுக்கு கைமாற்றப் பட்டார்கள். டீல் பேசப்படும் போது அடிமைகல் கலந்தாலோசிக்கப்படுவதில்லை, அவர்களது சம்மதமும் கேட்கப்படுவதில்லை. இன்று வெரிசான், இன்ன்ஃபோசிஸ் போன்ற கார்ப்பரேட் ஆண்டைகள், தங்கள் ஊழியர்களை அடிமைகளாக வைத்து டீல் பேசுகின்றன. இது அடுக்குமா?

ஊழியர்களின் சார்பாக, வெரிசானையும் இன்போசிஸையும் ஊழியர் பிரதிநிதிகளுடன் அமர்ந்து இடமாற்றத் திட்டத்தைப் பற்றி கூட்டாக திட்டம் போட வேண்டும் என்றும் இந்தத் திட்டம் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டதாக மாற்றியமைக்கப் பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால், இன்போசிஸ் போன்ற ஐடி கம்பெனிகளும் வெரிசான் போன்ற தொழில்துறை கம்பெனிகளும் இயங்குவது ஊழியர்களின் உழைப்பினால்தான். அவர்கள் வெறும் உயிரற்ற கருவிகள் போல நடத்தாமல் நிறுவனத்துக்கு வருமானத்தையும் லாபத்தையும் ஈட்டித் தரக்கூடிய தொழில்முறை ஊழியர்களாக மதித்து நடத்தப்பட வேண்டும்.

– சியாம் சுந்தர், தலைவர்
ஐ.டி ஊழியர்கள் பிரிவு

மொழிபெயர்ப்பு : நேசன்

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-infosys-deal-slave-trade-or-employee-transition-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

"எய்தவன் இருக்க அம்பை நோவானேன்" என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று...

“பேட்ட” – தொழிலாளர் விரோத ரஜினியின் வெட்கம் கெட்ட வசூல் “வேட்ட”

சினிமா சார்ந்த பிரபலங்களை அரசியல் தலைவர்களாக மேடை ஏற்றிவிட்டு உழைப்பாளர்களை நசுக்கும் சட்டங்களை எதிர்க்காமல் அரசியலில் நடிக்கும் நடிகர்களை மேடை ஏற்றிவிட்டு, படத்தை படமாக பாருங்கள் என்று...

Close