வெரிசான்-இன்ஃபோசிஸ் டீல் : ஐ.டி ஊழியர்களை அடிமைகள் என்று சொல்வதில் என்ன தவறு?

வெரிசான் இன்போசிஸ் விற்பனை ஒப்பந்தத்தைப் பற்றி ஊழியர்களின் கண்ணோட்டத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தோம். அது கிட்டத்தட்ட 1 லட்சம் பேரை சென்றடைந்திருக்கிறது. TNLabour.in மற்றும் communicationstoday.co.in ஆகிய தளங்களில் அது மறு பதிவு செய்யப் பட்டது. மேலும், Times of India மற்றும் Tamil.goodreturns.in ஆகிய தளங்களின் பதிவில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது.

பதிவில் மேற்கண்ட ஒப்பந்தத்தை அடிமை வியாபாரம் என்று கூறியிருக்கிறோம். அதற்கு கீழ்க்கண்ட எதிர்மறை விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன:

 • இது ஐடி ஊழியர்களின் மனநிலையை பாதிக்கும். எப்படி நீங்கள் எங்களை அடிமைகள் என்று கூறலாம்?
 • வெரிசான் ஊழியர்கள் இன்போசிஸுக்கு போகிறார்கள். இன்போசிஸும் நல்ல நிறுவனம் தானே.
 • ஐடி ஊழியர்களை பற்றி எதிர்மறை எண்ணத்தை உருவாக்கவும், அரசியல் செய்யவுமே New-democrats.com இவ்வாறு செய்கிறது.

இந்த பின்னூட்டங்களில் பெரும்பாலானவை tamil.goodreturns.in ல் இருந்த தமிழ் பதிவில் இடப்பட்டவை.

ஆனால், மறுபக்கத்தில், அமெரிக்க ஊழியர்கள் இதை அடிமை வியாபாரம் என்பதை ஒத்துக் கொள்கிறார்கள். https://www.thelayoff.com/t/UTxo80A ன் பின்னூட்டங்களை பார்க்கவும். இந்த கருத்து வளர்ந்த நாடுகளின் தொழிலாளர் வர்க்கத்தினிடையே பரவலாக காணப்படுகிறது. இதை சித்தரிக்கும் அந்நாடுகளின் கருத்துப் படங்கள் பலவற்றை பதிவில் சேர்த்திருக்கிறோம்.

இந்திய வாசகர்களின் எதிர்மறை விமர்சங்கனங்களுக்கு பதில் கூறும் விதமாக அடிமை என்ற சித்தரிப்புக்கான காரணங்களுடன் இந்த பதிவை இடுகிறேன். வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

கடந்த காலத்தின் அடிமைகளின் நிலை, ஆண்டைகள் அவர்களை எவ்வாறு நடத்தினார்கள் என்பதுடன் ஐடி ஊழியர்களின் நிலையைப் பற்றி ஒப்பிட்டுப் பார்ப்போம் :

  1. அடிமைகள் தங்கள் சக அடிமைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலை கொள்ளும் நிலையில் இல்லை. ஆண்டான் ஒரு அடிமையை கொடூரமாக தாக்கும் போது மற்ற அடிமைகள் தலை குனிந்து எதுவும் நடக்காதைப் போல தங்கள் வேலையை செய்து கொண்டிருப்பார்கள். இப்படித்தான் போன வருடம் இந்திய வெரிசானில் 1000 ஊழியர்கள் பௌன்சர்களை வைத்து வேலையை விட்டு துரத்தப் பட்டபோது மற்றவர்கள் எதுவும் செய்யவில்லை. பார்க்கவும் Verizon Layoffs – Join NDLF to protect you Rights
  2. Wஒரு நிறுவனம் கர்ப்பமாக இருந்த ஒரு பெண்ணை பணிநீக்கம் செய்தபோது சம்மந்தப்பட்ட சூப்பர்வைசரோ, சக ஊழியர்களோ எந்த மறுப்பையும் காட்டவில்லை. பார்க்கவும் HR Targetting Pregnant Employees is Illegal and Inhuman.
  3. When a company implements a policy that forces employees to take leave during Christmas time to increase the margin, we cross this as business as usual. Refer our article IT Companies Stealing Employee Money with Forced Leaves
  4.  சக அடிமைகள் அல்லது தானே சாகும் வகையில் சித்ரவதை செய்யப் பட்டாலும் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அடிமைகள் இருந்தார்கள். ஒரு ஆய்வின் படி, 8000 க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோத பணிநீக்கம்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. CSC யில் பணிநீக்கக் கடிதம் கொடுக்கப் பட்ட கந்தா சைத்தன்யா (Ganta Chaitanya) தனது அலுவலக மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது சமீபத்திய எடுத்துக்காட்டு. பார்க்கவும் Tragic Suicide, Media Blackout and Government Apathy – the Plight of IT Employees.
  5. Sஆண்டான்களின் பேராசையை பூர்த்தி செய்ய அடிமைகள் நாள் முழுக்க வேலை செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். ஐடி ஊழியர்களும் நாள் முழுக்கவும் வார விடுமுறையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
   பார்க்கவும் “Leave Office Early (On Time) ” – Employees Action Based on NDLF Post
  6. கங்காணிகள் அடிமைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டவர்களே. வேலையில் சுறுசுறுப்பாக வைக்க அடிமைகளை கங்காணிகளே வதை செய்தார்கள். ஆனால் கங்காணிகள் எப்போதும் ஆண்டைகளாக மாற முடியாது. வேலைநீக்கத்தை அமல்படுத்தும் மனிதவள அதிகாரிகளும், சூப்பர்வைசர்களும் தற்போதை கங்காணிகளாக இருக்கிறார்கள்.
   பார்க்கவும் Nazi Gas Chambers and HR Exit Process
  7. அடிமைகள் குழுவாக ஒன்று திரண்டு தங்கள் உரிமைகளுக்காக போராடுவதில்லை. சமீபத்தில் யமஹா நிறுவனம் 2 ஊழியர்களை பணிநீக்கம் செய்த போது ஒரகடம் பகுதியே வேலைநிறுத்தம் செய்தது. ஆனால், தன் தலைமீது இடியே விழுந்தாலும், ஐடி ஊழியர்கள் சங்கத்தில் சேர்வதற்கும் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கும் தயங்குகிறார்கள்.
   பார்க்கவும் Yamaha strike and IT unions
  8. அடிமைகள் அவர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே ஒரு ஆண்டையிடமிருந்து வேறொரு ஆண்டைக்கு விற்கப்படுவது சகஜம். வெரிசான் இன்போசிஸ் விற்பனை ஒப்பந்தத்தில் நடந்ததும் இதுதான். ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல் கூட்டாக விற்கப் பட்டிருக்கிறார்கள்.
   பார்க்கவும் our coverage on this news

ஐ.டி ஊழியர்களாகிய நாம் அடிமைகளாக நடத்தப்படுகிறோமா இல்லையா என்பதை வாசகர்களின் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.

ஆம், நானும் ஐ.டி துறையில் தான் இருக்கிறேன். ஆனால், என்மீது சுமத்தப் படும் அடிமைத்தனத்தை எதிர்க்கிறேன். என் வேலைக்கு எப்போதும் ஆபத்து இருக்கிறது என்று தெரியும். ஆனாலும், அடிமைத்தனத்தை உணராமல் இருப்பதை விட உணர்வோடு இருப்பது எவ்வளவோ நல்லது என்று நினைக்கிறேன்.

ஐ.டி துறையில் கிடைக்கும் சலுகைகள் பல ஊழியர்களை தங்கள் பிரச்சனையைப் பற்றி விழிப்புணர்வு கொள்ள முடியாமல் செய்கிறது. வேலை போய்விடுமோ என்ற பயம். ஆகையால் தனது நலனை மட்டும் காத்துக் கொண்டு அதற்கு வெளியே எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர். ஆனால், கடந்த கால அடிமைத்தனத்தை போல நம்மால் ஐ.டி துறையிலும் இந்த அடிமைத்தனத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

– சியாம் சுந்தர், தலைவர்,
NDLF IT Employees Wing

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-infosys-deal-what-is-wrong-in-terming-it-slave-trade-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி ஆட்குறைப்பு – அரசு தலையிட வேண்டும்!

கடந்த மே 17-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அமைப்பாளர் தோழர் கற்பகவினாயகம், சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன், பு.ஜ.தொ.மு-வின்...

லெனின், பெரியார் – கார்ப்பரேட், பார்ப்பனிய பா.ஜ.கவுக்கு கிலி

உழைக்கும் மக்களுக்காக பொதுவுடைமை பேசினாலும், தொழிலாளர்களுக்கு நலனாக பேசினாலும் அது பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிரானது என்பதால் அவற்றை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.

Close