வெரிசான் லே ஆஃப் – நம் முன் இருக்கும் வழி என்ன?

வெரிசான் லேஆஃப் செய்தியை ஒட்டி, அனைத்து ஐ.டி ஊழியர்களும் தமது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் ஒருவர் தயாரித்த ஆடியோ பதிவின் சுருக்கப்பட்ட வடிவம்

ஒலிப் பதிவின் உரை வடிவம்

லே ஆஃப் பதிவு 10 டிசம்பர் 2017

கடந்த 2 நாட்களாக வெரிசான் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் 900 ஊழியர்களை லே ஆஃப் செய்திருக்காங்க. சம்பந்தப்பட்ட நபர்கள் யூனியனை அணுகிக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லோருக்குமே ஒரு தயக்கம் இருந்தது. இப்போது we are flooded with calls.

லே ஆஃப் தொடர்பாக யூனியன் என்ன செய்தது?

அமெரிக்காவில் வெரிசான் கார்ப்பரேட் தாக்குதலுக்கு எதிராக போராடும் தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  யூனியன்  விப்ரோ நிறுவனத்துக்கு எதிராக 68 பேர் சேர்த்து 2K பிரிவின் கீழ் தொழிற்தாவா தாக்கல் செய்திருக்கிறார்கள். வழக்கு நடக்கும் இந்த 6 மாதங்களுக்குள் அதில் இடம் பெற்ற சில ஊழியர்களுக்கு புராஜக்ட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2K என்பது வேலையில் இருக்கும் போதே தொழிற்தகராறு சட்டம் 2K பிரிவின் கீழ் தாக்கல் செய்யப்படுவது. அது முடிவது வரை வேலை நிலைமையை நிறுவனம் மாற்ற முடியாது. தொழிலாளர் துறையிடம் அனுமதி பெறாமல் அவரது வேலைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுத்தக் கூடாது. வழக்கு நடக்கும் 2-3 ஆண்டுகள் வரை அவரது பணிநிலைமை மாற்றப்படக் கூடாது. சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.

இன்னும் பல 2A வழக்குகள் பல நிறுவனங்கள் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2A தாவா என்பது வேலை இழந்த பிறகு தாக்கல் செய்யப்படுவது. சமரச பேச்சு வார்த்தையில் தீர்வு கிடைக்கா விட்டால் சமரச பேச்சு வார்த்தை முறிவு அறிக்கை பெற்று நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.

தனிநபர்கள் தயக்கத்தை விட்டு வெளியில் வர வேண்டும். 2-3 ஆண்டு அனுபவம் உள்ள ஃபிரெஷர்ஸ், ஜூனியர்ஸ் கூட்டம் கூட்டமாக யூனியனில் சேர வேண்டும். ஆட்குறைப்பு ஏன் செய்ய முடியாது என்ற விபரத்தை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும்.

தொடர்ச்சியாக நஷ்டம் காட்டும் நிறுவனம்தான் ஆட்குறைப்பு செய்ய முடியும். அதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும். அதற்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. எனவே ஊழியர்களை மிரட்டி கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கிறார்கள்.

எந்த 2A தொழில்தாவாவிலும் அவராகத்தான் ராஜினாமா செய்து விட்டு போனார் என்ற வாதத்தைத்தான் நிறுவனம் கூறுகிறது. விப்ரோ நிர்வாகம் கூட, இதுவரைக்கும் எங்கள் வரலாற்றில் நாங்கள் ஒருவரைக் கூட ராஜினாமா செய்யச் சொன்னதில்லை என்கிறார்கள்.

ஆனால், 68 பேர் போய் மொத்தமாக போய் எங்களை ராஜினாமா செய்யச் சொன்னார்கள் என்று கேஸ் கொடுப்பதற்கு, தொழிலாளர் அலுவலகத்துக்கு போவதற்கு முட்டாள் கிடையாது.

ராஜினாமா கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். band inertia என்று கொண்டு வந்தார்கள். ஒரே designations-ல 3-5 ஆண்டுகள் இருந்தால் வெளியே போய் விட வேண்டும் என்று பேண்ட் இனர்ஷியா முறையை கொண்டு வந்து ராஜினாமா செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்.

attrition புள்ளிவிபரத்தை எடுத்துப் பார்த்தால் விப்ரோவில் எத்தனை ஊழியர்கள் குறைக்கப்பட்டிருக்கிறார்கள் இந்த காலாண்டில் என்று எடுத்துப் பாருங்கள். நிதர்சனம் தெரியும்.

எல்லோருமே தமது தயக்கத்தை விட்டு வெளியே வர வேண்டும். உற்பத்தித் துறையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் யூனியன் இருக்கிறது.

போக்குவரத்துத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். பி.எஃப் பணத்தை ஒரு அரசாணை போட்டு அரசு செலவு செய்து விட்டது. இன்றைக்கு போக்குவரத்து ஊழியர்கள் எல்லோரும் சேர்ந்து நீதிமன்றத்தை அணுகி தங்களுடைய ஓய்வூதிய நிதியை யூனியன் மூலமாகத்தான் வாங்கியிருக்கிறார்கள். அதனால் யூனியன் மக்களுக்கானது. நாமெல்லாம் சேர்ந்தாதான் யூனியன்.

தனிநபர்கள் தயக்கத்தை விட்டு வெளியில் வர வேண்டும். ஒரு வருடம் முன்பு இருந்ததை விட இன்று நிறைய பேர் தெளிவாக பேசுகிறார்கள். ராஜினாமா செய்ய தேவையில்லை என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ராஜினாமா செய்யச் சொன்னா, ராஜினாமா செய்ய முடியாது என்று சொல்லுங்க, minutes of meeting எழுதுங்க. உங்க ராஜினாமாவை அவர்களே சிஸ்டம் மூலமா ஜெனரேட் செய்தா போலீஸ் புகார் கொடுங்க. எக்காரணத்தைக் கொண்டு ராஜினாமா செய்யாதீர்கள்.

லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்பெனி, லாபத்தை காட்டும் கம்பெனி எந்தச் சூழ்நிலையிலும் ஆட்குறைப்பு செய்ய வேண்டுமானால் சட்டப்படியான வழிமுறையில் அனுமதி வாங்கித்தான் செய்ய வேண்டும். அவர்களே கொத்து கொத்தா கட்டாய ராஜினாமா செய்ய வைத்து வேலையை விட்டு அனுப்புவது தவறு. தனிநபர்கள் தயக்கத்தை விட்டு யூனியனில் சேர வர வேண்டும்.

“இது வெரிசானில் மட்டும்தான் நடக்குது சார், நாளைக்கு என் கம்பெனியில் நடக்காது” என்று சொன்னால், “உங்களுக்கும் நடக்கும் பார்த்துக்கோங்க”

நன்றி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-layoff-the-way-forward-audio/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“லாபம் வேண்டுமா? ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க...

போராடும் செவிலியர்களுக்கு ஆதரவாக பெண்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம்

புகைப்படங்கள் : பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள்.

Close