ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு – பெண்களின் உரிமை

38% பெண்கள் உட்பட 1,400 ஊழியர்கள் பணிபுரியும் வயாகாம்18 என்ற ஊடக நிறுவனம் பெண் ஊழியர்களுக்கு 9 மாதம் ஊதியத்துடனான மகப்பேறு விடுப்பு உரிமை வழங்குவதாக அறிவித்துள்ளது.

maternity-leave-mom-baby26 மாத மகப்பேறு விடுப்பு உரிமைக்கான சட்ட திருத்தத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மேலவை நிறைவேற்றியது, அது மக்களவையில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு உரிமை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்தப்பட்டது.

செய்தி ஆதாரம் : Maternity leave for Tamil Nadu government employees increased to nine months

வயாகாம்18-ன் இப்போதைய அறிவிப்புக்கு முன்பாக கடந்த மே மாதம் டாடா குழுமம் 7 மாத மகப்பேறு விடுப்பு வழங்கும் கொள்கையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதைத் தவிர ஃபிளிப்கார்ட், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மைக்ரோசாஃப்ட் இந்தியா, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் உள்ளிட்ட ஐ.டி, பன்னாட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை துறைகளின் ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே கடந்த 6-12 மாதங்களில் 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமையை அங்கீகரித்துள்ளன.

செய்தி ஆதாரம்: Viacom18 sets benchmark with 9 months paid maternity leave

முறைசாரா ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்து பெண் உழைப்பாளர்களுக்கும் 1 ஆண்டு வரை ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை அடிப்படை உரிமையாக்கும் சட்டங்களை நிறைவேற்றவும், அமல்படுத்தவும் ஐ.டி துறை உட்பட கார்ப்பரேட் துறையில் பணி புரியும் பெண்-ஆண் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.


Permanent link to this article: http://new-democrats.com/ta/viacom18-announces-9months-paid-maternity-leave-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்

முன்பெல்லாம் மக்களிடம் பிரச்சனை பற்றிய முழுமையான விழிப்புணர்வு இருந்ததில்லை. தன் புருசன் கேன்சரில்தான் செத்தார் என்று தெரியாது. "ஏதோ இருந்தாரு செத்து போயிட்டாரு, என் புள்ள செத்து...

ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது!

அநீதிக்கும், அடக்குமுறைக்கும் முடிவு கட்டுவோம்! அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம், நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற தொழிற்சங்கத்தின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை...

Close