“பிக் பாஸ்” ஜூலி ஜல்லிக்கட்டு போராளியாம்! போராட்டத்தை கேவலப்படுத்தும் விஜய் டி.வி

நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது!” -‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி

ஜூலி

ஜல்லிக்கட்டை கேவலப்படுத்த விஜய் TV எடுத்த முயற்சி ஜூலி மற்றும் corporate (கார்ப்பரேட் ) உண்மை முகத்தை வெளிப்படுத்தியது

ஜூலி ஒரு ஜல்லிக்கட்டு போராளி என்பது நகைச்சுவை செய்தி. எல்லாரும் போல அவரும் கலந்து கொண்டார் என்பதே உண்மை

ஜல்லிக்கட்டை கேவலப்படுத்த விஜய் TV எடுத்த முயற்சி ஜூலி மற்றும் corporate (கார்ப்பரேட் ) உண்மை முகத்தை வெளிப்படுத்தியது, வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது .

எல்லா ஜல்லிக்கட்டு போராளியும் ஜூலி போலவே சிந்திப்பார்கள், நடந்து கொள்வார்கள் என்பது ஒரு நகைச்சுவை சித்தாந்தம் . இப்போது விஜய் டிவி காமெடி ஆடிஷனலில் கூட ஜூலி ஜல்லிக்கட்டு வாசகங்களை பயன்படுத்துவது நியாயம் இல்லை .

We #HATEVIJAYTV for cheap politics or outsourced politics

பிக் பாஸ்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதுபற்றி பெரிதாக வாய்திறக்காத ‘விஜய் டிவி’, தனது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு ‘ஜல்லிக்கட்டு’ ஜுலி என்ற அடைமொழியுடன் அவரை பிரபலங்களில் ஒருவராக களமிறக்கியிருக்கிறது.

கார்ப்பரேட் ஒழுக்கத்தையும் அது உருவாக்கும் வணிகத்தையும் புரிந்து கொள்வது கடினம்தான். அதுவும் இந்த தலைமுறை பெண்ணுக்கு கடினம்தான். ஆனால் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் சில மணி நேரம் கோஷம். பின்னர் அவரை கொன்று விட்டதாக பரவிய வதந்திக்கு மறுப்பு என அதன் மூலம் கிடைத்த பிரபல்யத்தை, அறியாமையால் விஜய் தொலைக்காட்சிக்கு விற்றுக் கொண்டார் என்று எடுத்து கொள்ள முடியாது.

தான் ஏமாற்றப்படுவதை அறியாதவரா ஜூலி?
‘பிக் பாஸ்’ புகழ் ஜூலி தன் ட்விட்டர் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் எக்கச்சக்கமான அரசியல் மாற்றங்கள் நடந்துகொண்டுதான் உள்ளது. நம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரம், நீட் தேர்வு எதிர்ப்புகள், காவிரிக்கான தேவைகள் என நிறைய உள்ளன. இந்த நிலையில் நம் மண் மீது எனக்கும் பெரிய பொறுப்பு உள்ளது. என்னுடைய மக்களுக்காக நான் என்ன செய்யப் போகிறேன்?” என்று அதில் பேசியுள்ளார் ஜூலி.

ஜூலியின் பொறுப்பை இந்த வீடியோவில் பார்க்கலாம்

Background of VIJAY TV politics
=========================

  1. விஜய் டி.வி

    மெரினாவில் போராடிய மாணவர்களுக்காக தங்கள் உடைமையை இழந்த மீனவ சமுதாயத்தினர், காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர்கள் பலர் இருக்கும்போது ஜுலியை முன்னிலைப்படுத்தி தங்கள் டிஆர்பி ரேட்டிங்-ஐ அதிகப்படுத்தும் வேலையை தெளிவாக செய்கின்றனர், விஜய் டி.வி

    விஜய் டிவி நிகழ்வில் பாடல் வடிவில் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சி ஒன்றை செய்த ஜூலி “அதோ பாரு லைட்டு, தமிழந்தான் வெயிட்டு” “மொளகாண்ணா காரம் தமிழண்ணா வீரம்” என்று பல கோஷங்களைப் போட்டு பெரிய அல்வாதுண்டுகளை தமிழர்கள் வாயில் தள்ளிக் கொண்டிருந்தார்.

  2. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட இந்த போராட்டத்தில், சசிகலா, முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டு பிரபலமானவர் ஜுலி. தைரியமான பெண்மணி, வீரத் தமிழச்சி என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அதுபற்றி பெரிதாக வாய்திறக்காத ‘விஜய் டிவி’, தனது ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு ‘ஜல்லிக்கட்டு’ ஜுலி என்ற அடைமொழியுடன் அவரை பிரபலங்களில் ஒருவராக களமிறக்கியிருக்கிறது.
  3. நேற்று ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஜுலியிடம், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டது பற்றி ஆர்த்தியும், காயத்ரி ரகுராமும் விவாதித்தனர். ஆர்த்தி, போராட்டம் என்றால் அமைதியான முறையில் இருக்க வேண்டும், கத்தி கூச்சலிடுவது போராட்டமல்ல என பேசினார். அமைதியான முறையில் கேட்டும் கிடைக்காததால்தான் இந்த வழியில் போராட்டம் நடத்தினோம் என ஜுலி கூறியதோடு தங்கள் வீட்டில் வளர்த்த மாடுகள் பற்றிய புள்ளி விவரங்களையும் முன்வைத்தார். ஜுலியின் கருத்தை ஆர்த்தி ஏற்க தயாராக இல்லை, எங்க ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிராக கோஷமிடு பார்ப்போம் என நக்கலாக பதிலளித்தார். அதோடு, “மெரினாவில் கடைசி நாளில் யாரால் அடி வாங்குனாங்க..” என ஆர்த்தி கேட்கிறார். “இவங்களாலதான்..” என காயத்ரி சொல்கிறார். ஜூலியானாவோ “அப்படித்தான் சொல்கிறார்கள்” என சாதாரணமாக பதில் கூறுகிறார்.
  4. இங்கே பிரச்சனை என்னவென்றால், விஜய் டிவிதான். மெரினாவில் போராடிய மாணவர்களுக்காக தங்கள் உடைமையை இழந்த மீனவ சமுதாயத்தினர், காவல்துறையால் தாக்கப்பட்ட இளைஞர்கள் பலர் இருக்கும்போது ஜுலியை முன்னிலைப்படுத்தி தங்கள் டிஆர்பி ரேட்டிங்-ஐ அதிகப்படுத்தும் வேலையை தெளிவாக செய்கின்றனர்

sources

தொகுப்பு – காசிராஜன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/vijay-tv-insults-jallikattu-protests/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

புத்தகம் கிடைக்கும் புத்தகக் கடைகள், இணைய கடைகள், பிற இடங்கள்

டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?

உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, பல டஜன் போலீஸ் படைகள் வைத்திருக்கும் நீங்கள் அதைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை எங்கள் மீது சுமத்தாதீர்கள்

Close