உச்சநீதி மன்றத்தின் நீதியை “சட்ட ரீதியாக” முறியடித்த மேற்கு வங்க சாராய வியாபாரிகள்

ஆங்கிலச் செய்தி : நன்றி Economic Times

Liquor can make highways vanish

சாதாரண நிலைமைகளுக்கு சில நேரங்களில் அசாதாரண தீர்வுகள் தேவைப்படுகின்றன. கல்கத்தாவின் சொந்த மேஜிக் நிபுணரான பிசி சர்காரை மட்டுமல்ல மேற்குலகின் ஹூடினியையும் காப்பர்ஃபீல்டையும் ஓரங்கட்டுமளவுக்கு, கண் இமைக்கும் நேரத்தில் மாநில நெடுஞ்சாலையின் ஒரு முக்கியமான பகுதி, அதுவும் மாநில தலைநகர் கல்கத்தாவின் நட்டநடுவில், மாயமாக மறைய வைக்கப்பட்டு விட்டது.

குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது சாலை பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறது. எனவே, உச்ச நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் சாராயக் கடைகள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.

ஆனால், ஆளும் கும்பலுக்கு தேவைப்பட்டால் சாராயம் நெடுஞ்சாலைகளையே ஒழித்துக் கட்டி விடும் என்று தெரிய வருகிறது. மேற்கு வங்க மாநில நெடுஞ்சாலைகள் 1 மற்றும் 3 ன் சில பகுதிகளில் சில சாராயக்கடைகள் இருந்திருக்கின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அவைகளை அகற்ற வேண்டி வந்திருக்கும். ஆனால் அவைகளை அருகில் எங்குமே மாற்ற விரும்பாத சாராய வியாபாரிகள்/அரசியல்வாதிகள் கூட்டணி அந்த பகுதிகளையே நெடுஞ்சாலை என்ற தகுதியிலிருந்து பதவி நீக்கம் செய்துவிட்டார்கள்.

உள்ளூர் மக்களுக்கு சாலையை வகைமாற்றம் செய்தது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. ஆனால் வரைபடங்களையும், நவீன கூகிள் மேப்-ஐயும் நம்பி பயணிப்பவர்களின் கதி அதோ கதிதான். இதே போன்று சாராயக் கடைகள் வழியாக போகும் தேசிய/ மாநில நெடுஞ்சாலைகளில் பல காணாமல் போகும் போக்கு தேசிய அளவில் பரவலாம்.

ஆங்கிலச் செய்தி : நன்றி Economic Times Liquor can make highways vanish

மொழிபெயர்ப்பு : நேசன்

மேற்கு வங்க சாராய வியாபாரிகள்/அரசியல்வாதிகள் கூட்டணியின் இந்த மந்திர வித்தை, பிற மாநிலங்களில் உள்ள அவர்களது சகபாடிகளாலும் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கலாம். உச்சநீதிமன்றமும், சட்டத்தின் ஆட்சியில் நம்பிக்கை வைக்கும்படி பஜனை செய்து கொண்டிருக்கும் ஆளும் மேட்டுக் குடியினரும் முகத்தை எங்கு கொண்டு வைத்துக் கொள்வார்கள்?

இதிலிருந்து தெளிவாக தெரிவது என்னவென்றால் நீதியும், சட்டத்தின் ஆட்சியும் நீதிமன்ற வளாகங்களிலோ, அரசு படைகளிடமிருந்தோ, அரசியல்வாதிகளாலோ அல்லது அரசு அதிகாரிகள் மூலமாகவோ கிடைக்கப் போவதில்லை. இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நம் நாட்டு மக்கள் கிராமத்து தெருக்கள் முதல் மாநில தலைநகர சாலைகள் வரை தெருக்களில் போராடுவதன் மூலம்தான் உண்மையான ஜனநாயகத்தை வென்றெடுக்க முடியும்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/wb-liquor-mafia-beats-supreme-court-legally-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை

பிரிவு 25Mக்கு முரணான வகையில் Lay–Off விடப்பட்டால் சம்பத்தப்பட்ட முதலாளிக்கு ஒருமாத கால அளவிற்கு மிகாத சிறை தண்டனையோ, ரூ.1000க்கு மிகாத தண்டமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.

டெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்

நிகழ்ச்சி நிரல் டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் - எதிர்கொள்வது எப்படி? கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் - ஊடகங்கள் விற்பனைக்கு சங்க நடவடிக்கைகள் குறித்து

Close