கடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்

ந்தச் செய்தியை படிக்கும் போது ஆசாராம் பாபு, நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ், ஜெயேந்திரன் போன்ற  சாமியார்களும், தேவநாதன், கண்டரர் போன்ற கோயில் பூசாரிகளும் நினைவுக்கு வந்தால் தவறில்லை. குழந்தைகளிடம் கடவுள் நம்பிக்கையையும், பக்தியையும் விதைப்பது இது போன்ற கிரிமினல்கள் வலை விரிக்க உதவுவதாக உள்ளது. பத்திரமாக இருக்கவும்!

Prosecutor: Priests ‘weaponised’ the faith to abuse kids

70 ஆண்டுகளில் 301 கத்தோலிக்க பூசாரிகளின் பாலியல் குற்றங்களை கத்தோலிக்க மதம் மறைத்திருக்கிறது – நீதி விசாரணைக் குழு அறிக்கை

மெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பல பகுதிகளில் ரோமன் கத்தோலிக்க பூசாரிகள் மதச் சடங்குகளையும், கடவுள் நம்பிக்கை சின்னங்களையும், சாவுக்குப் பின்னர் என்ன நடக்கும் என்ற பயத்தையும் பயன்படுத்தி குழந்தைகளை வசப்படுத்தி, துன்புறுத்தி, பாலியல் கொடுமை செய்திருக்கின்றனர். நீதி விசாரணைக் குழுவின் அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் இந்த செயல்களை அரசு வழக்கறிஞர் “கடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கல்” என்று சித்தரித்திருக்கிறார்.

மாநிலம் முழுவதும் நடத்திய விசாரணையில் கண்டறிந்தவற்றை இக்குழு 884 பக்க அறிக்கையாக கடந்த செவ்வாய் கிழமை (ஆகஸ்ட் 14-ம் தேதி) வெளியிட்டுள்ளது. வேட்டையாடும் பூசாரிகள் குழந்தைகளின் சொந்த மத நம்பிக்கையையும், மதத் தலைவர்களாக தம் மீது வைத்திருந்த மதிப்பையும் பயன்படுத்தி அவர்களை சீரழிக்கவும், பின்னர் வெளியில் அதைப் பற்றி பேசவிடாமல் மௌனிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை.

ஒரு கத்தோலிக்க பூசாரி, ஒரு குழந்தையை பாவமன்னிப்பு கேட்கும் மேடையில் “வழிபடும் நிலையில்” கயிற்றால் கட்டிப் போட்டிருக்கிறார். அந்தக் குழந்தை பாலியல் செயல்பாட்டை செய்ய மறுத்தபோது, கோபமடைந்த அந்த கத்தோலிக்க பூசாரி 7 இஞ்ச் சிலுவையை பயன்படுத்தி அக்குழந்தையை பாலியல் ரீதியாக தாக்கியிருக்கிறார்.

இன்னொரு கத்தோலிக்க பூசாரி உலோக சிலுவையால் ஒரு குழந்தையை அடித்திருக்கிறார்.

ஒரு ஊரின் கத்தோலிக்க பூசாரிகள் தங்கும் உள்ளூர் மடத்தில் நான்கு பூசாரிகள் ஒரு பையனை நிர்வாணப்படுத்தி, இயேசு போல சிலுவையில் நிற்கச் சொல்லி புகைப்படம் எடுத்திருக்கின்றனர். இந்த புகைப்படங்கள்தான் இந்த ஊரின் புதிய மதச் சிலைகளுக்கு விவரப் படமாக பயன்படுத்தப்படும் என்று பேசி சிரித்திருக்கின்றனர். இவர்களின் இரண்டு கத்தோலிக்க பூசாரிகள் மாதா கோயில் பையன்களை பாலியல் ரீதியாக தாக்கியதற்காக சிறைத் தண்டனை பெற்றனர்.

பென்சில்வேனியா அரசு வழக்கறிஞர் ஜோஸ் ஷாபிரோ

தன்னால் பாலியல் ரீதியாக தாக்கப்படும் பையனிடம், “தான் கடவுளின் கைக்கருவி” ஆனதால் பிரச்சனை எதுவும் இல்லை என்று ஒரு பூசாரி சொல்லியிருக்கிறார்.

இந்த கத்தோலிக்க பூசாரிகள் நரகத்தில் சிக்கி தண்டிக்கப்படுவது பற்றிய மிரட்டல்களையும் விட்டு வைக்கவில்லை என்று நீதி விசாரணை குழு கண்டறிந்தது. நடந்த விஷயங்களைப் பற்றி யாரிடமாவது சொன்னால் “நரகத்துக்குப் போவாய்” என்றும், “கடவுளின் சேவகரான தனது பேச்சுக்கு எதிராக பொய் சொல்லும் குழந்தையின் பேச்சை  யாரும் நம்ப மாட்டார்கள்” என்றும் மிரட்டியிருக்கின்றனர்.

பூசைக்கு உதவி செய்யும் பையன்கள் நிர்வாணமாக இருக்க வேண்டும், “ஏனென்றால், மனிதன் படைத்த எந்த ஆடையும் அவர்களது உடம்பில் இருப்பதை கடவுள் விரும்பவில்லை” என்று ஒரு பூசாரி சொல்லியிருக்கிறார்.

Prosecutor: Priests ‘weaponised’ the faith to abuse kids

70 ஆண்டுகளில் 301 கத்தோலிக்க பூசாரிகளின் பாலியல் குற்றங்களை இந்த நீதி விசாரணைக் குழு ஆவணப்படுத்தியிருக்கிறது. 1940-களிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மறை மாவட்டத்தில் 17 லட்சம் கத்தோலிக்கர்கள் உள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/weaponised-faith-to-abuse-children/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தரமான மருத்துவக் கல்வியை, மருத்துவத்தை கொல்வதற்கே “நீட்” : தெருமுனைக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் - ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017...

கிருஷ்ணசாமியின் துரோகமும், சபரிமாலாவின் வீரமும்

எல்லா ஓட்டுக் கட்சிகளும் இப்படித்தான் முதலாளித்துவத்துடன் இணைந்து பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொள்கின்றன. இவர்களின் சொத்து மதிப்பையும் கோழைத்தனத்தையும் பாருங்கள். மறுபுறம் அனிதா குடும்பத்தினர், ஆசிரியை சபரிமாலா...

Close