நவம்பர் 7 : என்ன நடந்தது? கேள்வி பதில் வடிவில்

நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்?

ஏனென்றால், அன்றுதான் தொழிலாளர்கள் வர்க்கம் ஏற்கனவே ஆட்சியில் இருந்த முதலாளித்துவ சர்வதிகாரத்தை வீழ்த்திய நாள்.

ஏன் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை வீழ்த்த வேண்டும்?

ஏனென்றால், அதுதான் உழைக்கும் மக்களை உக்கிரமாக சுரண்டியது, உரிமை கோரிய உழைக்கும் மக்களை ஒடுக்கியது. நம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கான எதிர்ப்பு போராட்டத்தை, மெரினா போராட்டத்தை எப்படி ஒடுக்கியது அதுபோல.

என்ன செய்தார்கள்?

எந்தவித சமரசமும் அற்ற புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியான போல்ஷ்விக் கட்சியின் தலைமையில் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், மற்றும் விவசாயிகள் கூட்டணியில் பிற்போக்கான நிலப்பிரபுத்துவமும், முதலாளித்துவமும் வீழ்த்தப்பட்டு, தொழிலாளர்களின் ஆட்சி அரியணையில் அமர்ந்தது, அந்த நாளே நவம்பர் 7, 1917. அதன் பின்னரே நிரூபணம் ஆனது, பூலோகத்தில் தான் சொர்க்கம் படைக்க முடியும், அதுவும் தொழிலாளர்கள் வர்க்கத்தால் மட்டுமே சாத்தியம் என்று.

இங்கு நாம் ஏன் நவம்பர் 7, ரஷ்ய புரட்சி தினத்தை கொண்டாட வேண்டும்?

விவசாயத்தில் இருந்து அன்றாடம் விவசாயிகள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள, லட்சக்கணக்கான பட்டதாரிகள் வேலை வாய்ப்பற்று தினம் தினம் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள், வேலை கிடைத்தாலும் குறைந்த ஊதியம் என்ற நிலை, ஏன், நமது ஐ. டி. துறையில் நடக்கும் சட்ட விரோத வேலை நீக்கங்கள், அப்ரைசல் என்ற பெயரில் நடக்கும் அட்டூழிங்கள், மற்றும் இன்னும் சொல்லி மாளாத துயரங்களை மக்கள் அனுதினமும் அனுபவித்து வருகிறார்கள். நேர வரம்பின்றி உழைக்க வைப்பது, சுற்றுச் சூழல் மாசுபடுவது, இயற்கை வளங்கள் கொள்ளை போவது, புதிய புதிய நோய்கள் தாக்குவது என்று உழைக்கும் மக்களின் வாழ்க்கை மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகையும் கடும் நெருக்கடிக்குள் தள்ளி வருகிறது இந்த கார்ப்பரேட் முதலாளித்துவம்.

இதற்கெல்லாம் மூலக்காரணமாய் இருக்கும் கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்கு ஆதரவாகத்தான் அவர்களது அரசும் செயல்படுகிறது.

ஒவ்வொரு நாளும் ஒரு கதவு உடைகிறது, மேற்கூரையில் விரிசல்கள், சுவர்கள் உடைந்து விழ ஆரம்பிக்கின்றன என்ற நிலையில் இருக்கும் பாழடைந்த பங்களா போல உள்ளது இன்றைய முதலாளித்துவ அரசு கட்டமைப்பு. அப்படி பாழடைந்து, இடிந்து கொண்டிருக்கும் குடியிருக்கும் நமது உயிருக்கும் உடலுக்கும் ஆபத்தாக இருக்கும் பங்களாவுக்கு வெள்ளையடித்து அதில் தொடர்ந்து குடியிருப்பதாக முடிவெடுக்க முடியுமா?

இந்த பங்களாவுக்கு பதிலாக புதிய வீடு கட்டி எழுப்புவதுதானே நல்லது.  முதலாளித்துவ அரசு கட்டமைப்பு எனும் பாழடைந்த பங்களாவை தகர்த்து விட்டு, தொழிலாளர்களுக்கான அரசமைப்பை நிறுவுவதுதான் தொழிலாளி வர்க்கத்தை மட்டுமின்றி அனைத்து உழைக்கும் மக்களையும், ஏன் இந்த உலகையே பாதுகாப்பதற்கான ஒரே வழியாக இருகிறது. அது உழைக்கும் மக்கள் அணிதிரண்டு அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு புரட்சியால் மட்டுமே சாத்தியமாகும்.

ரசியாவில் இப்புரட்சியை நிகழ்த்தி காட்டிய தினம் தான் நமக்கு முன்னோடியான நாள், உத்வேகம் அளிக்கும் நாள், தொழிலாளர்கள் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய புரட்சி முதன் முதலில் வெற்றி அடைந்ததின் குறியீடு…! அதனால் தான் நாம் இந்த நாளை (நவம்பர் 7), நாம் கொண்டாட வேண்டும் என்கிறோம், நம் நாட்டிலும் இது போன்றதொரு புரட்சி ஏற்பட வேண்டும் என்ற அர்த்தத்தோடு.

ஐ.டி. ஊழியர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் வாழ்த்துக்கள்.

R. ராஜதுரை.
பொருளாளர்.
பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-happened-on-november7-qa/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மே மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல் BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம் விப்ரோ 2K - இனி செய்ய வேண்டியது என்ன? சங்க நடவடிக்கைகள்...

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு மக்களின் ஆதரவு

நீதிமன்ற நாட்டான்மைத் தனத்திற்கு அஞ்சாமல் போராட்டத்தை தொடர்வதே தொழிலாளர்களுக்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றி. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தினுடைய மட்டுமல்ல இந்தியாவின் எல்லா உழைக்கும் மக்களின் ஆதரவு...

Close