«

»

Print this Post

“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்

This entry is part 6 of 21 in the series பண மதிப்பு நீக்கம்

“10 நாட்களில் பிறக்கப் போவதாக மோடி வாக்களித்த புதிய இந்தியா எப்படி இருக்கும்” என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் சி.பி கிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுனர் சேதுராமன், வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து வெள்ளையன் மற்றும் பா.ஜ.க/மோடி ஆதரவாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் விவாதிக்கும் டி.வி-7 தொலைக்காட்சியின் கேள்வி நேரம் நிகழ்ச்சி.

“ரிசர்வ் வங்கி செய்யும் குளறுபடிகளுக்கு மோடி எப்படி பொறுப்பாவார்?” “நல்ல ஒரு திட்டத்தை சீர்குலைப்பது வங்கி ஊழியர்களில் இருக்கும் கருப்பாடுகள்தான்” “இந்தத் திட்டம் வெற்றி பெறும், கருப்புப் பணப் பொருளாதாரம் பெருமளவு கட்டுப்படுத்தப்படும்” என்று பா.ஜ.க சார்பில் பா.ஜ.க பாணியில் வாதிடுகிறார் இராமசுப்பிரமணியன்.

“வங்கி என்பது பணக்காரர்களுக்கானது, பெரு முதலாளிகளுக்கானது. நாங்கள் கடன் வாங்குவது கந்து வட்டிக்குத்தான், நாங்கள் ஏன் வங்கிக் கணக்கை பயன்படுத்த வேண்டும்?” “கடன் அட்டை, பண அட்டையை திணிப்பதன் மூலம் சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் வேலையைத்தான் செய்கிறார்கள்.” “புதிய இந்தியா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக இருக்கும், அதற்கு ஏஜென்டுதான் மோடி” என்று ஒரே போராட போடுகிறார் வணிகர் சங்கக் கூட்டமைப்பின் வெள்ளையன்.

“வங்கி அட்டையை பயன்படுத்தி 160 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால், 171 ரூபாய் கணக்கில் இருந்து எடுத்து விட்டார்கள்.” “தினமும் 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்த நான் இப்போதெல்லாம் 200-300தான் சம்பாதிக்க முடிகிறது. குடும்பப் பொறுப்பு உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் மிகவும் மன உளைச்சலுடன் இருக்கிறார்கள்”. “எங்களுக்கு வேலை தரும் முதலாளிகள் ஏ.டி.எம் முன்பும், வங்கிகளிலும் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமே பணம் இல்லை” என்று உழைக்கும் மக்களின் துயரத்தை முன் வைக்கிறார் ஆட்டோ ஓட்டுனர் சேதுராமன்.

“1991-களுக்குப் பிறகு பொதுத்துறை வங்கிகள் கூட சாதாரண விவசாயிகளுக்கு, சிறு தொழில்களுக்கு சேவை செய்வதாக இல்லை. இந்தப்  போக்கை வங்கி ஊழியர் சம்மேளனம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.” “ரிசர்வ் வங்கியின் செயல்பாடுகள் வங்கி ஊழியர்களுக்கு கடும் அழுத்தத்தை தருபவையாக உள்ளன.” என்று சமூகப் பொறுப்புடனும், ஊழியர்கள் தரப்பிலும் பேசுகிறார் சி.பி.கிருஷ்ணன்.

Series Navigation<< கருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?வங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-is-in-store-after-demonetization/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!

ஈழத்திற்கு எதிராக ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது.

பெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்

மோடி நம்மை இழுத்துச் செல்ல விரும்பும் மின்னணுப் பொருளாதாரத்தின் எதிர்காலம் இதுதான். இத்தகைய விளைவுகளை எதிர்கொள்ளவும், எதிர்க்கவும், எதிர்த்துப் போராடவும் நாம் தயாராக இருக்க வேண்டும். அப்படி...

Close