2018-ல் நாம் என்ன செய்தோம், 2019-ல் நாம் எதை நோக்கி செல்கிறோம்!

பு.ஜ.தொ.மு. ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பாக அனைத்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கும் 2019-ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

டிசம்பர் 22, அன்று நடந்த 2018-ம் ஆண்டின் கடைசி தொழிற்சங்கக் கூட்டத்தில், நமது தொழிற்துறையில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் கடந்த ஆண்டு தொழிற்சங்கமாக நமது பங்களிப்பு பற்றி விவாதித்தோம். இந்தக் கட்டுரை கடந்த ஆண்டு பல்வேறு பகுதிகளில் நமது தொழிற்சங்க நடவடிக்கைகள் பற்றி சுருக்கமாக கூறுகிறது.

கடந்த ஆண்டு நமது தொழிற்சங்கத்தை அணுகிய கர்ப்பமாக இருந்த ஒரு பெண் ஊழியர் பற்றிய அனுபவத்தோடு நாம் தொடங்குவோம். அவர் 2-வது முறையாக கருவுற்றிருந்த போது, உடனடியாக ராஜினாமாவை சமர்ப்பிக்க சொல்லி HR-இடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது. தான் எதிர்கொண்டிருக்கும் வேலை இழப்பு பற்றி அவருக்கு மிகவும் கவலையாகவும் பயமாகவும் இருந்தது. நாங்கள் அவருக்கு ஆலோசனையை வழங்கி அவருடைய பயத்தைப் போக்கினோம். ஐ.டி துறையில் இருக்கும் ஊழியர்களுக்கான பல்வேறு சட்ட விதிகள் மற்றும் தொழிலாளர் சட்டங்களை பற்றி நாங்கள் விளக்கினோம். நாங்கள் பெண்களுக்கு இருக்கும் பல்வேறு சட்ட உரிமைகள் பற்றி விளக்கி கர்ப்பமாக இருக்கும் ஊழியரை பணியிலிருந்து நீக்குவது சட்டவிரோதம் என்று கூறினோம். கர்ப்பமாக இருக்கும் ஊழியரை பணிநீக்கம் செய்தால் (கட்டாயப் பணிநீக்கம்) செய்வதன் மூலம் நிறுவனம் செய்யும் சட்ட மீறல் நிறுவனத்தைச் செய்வது பற்றி அவரின் மனித வள அதிகாரியிடம் பேச நாங்கள் உதவினோம்.

மகப்பேறு காலத்தில் ஊழியரின் சட்டப்பூர்வ பாதுகாப்பு பற்றியும், மகப்பேறு காலத்தில் அவருக்கு கொடுக்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் இருப்பது ஒரு குற்றம் என்றும் நாங்கள் குறிப்பிட்டோம். அவர் மனித வள அதிகாரி மற்றும் அவரது உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டார். இரண்டே நாட்களுக்குள் மனித வள அதிகாரி அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு ராஜினாமா செய்ய வேண்டியது இல்லை என்றும், அவருடைய வேலையைத் தொடரலாம் என்றும் கூறினார். அவரது வேலை இழப்பு என்ற அச்சுறுத்தல் ஒரு மின்னஞ்சல் மூலம் தீர்க்கப்பட்டது, அதற்குப் பிறகு அவருக்கு எந்த தொந்தரவும் வரவில்லை. அவர் அதே நிறுவனத்தில் பணியில் தொடர்கிறார், தற்போது அவர் மகப்பேறு விடுப்பில் இருக்கிறார். இந்த நிகழ்வு நாங்கள் கடந்த ஆண்டு உதவிய பல ஊழியர்களில் ஒரு மாதிரி மட்டுமே.

கடந்த ஆண்டு மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களை இது போன்ற பிரச்சினைகளுடன் நாங்கள் சந்தித்தோம். இந்த பணியாளர்கள் இந்தியா முழுவதும் (பெங்களூரு, ஹைதராபாத், புனே, கொல்கத்தா, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்) வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். டெக் மஹிந்திரா, விப்ரோ, சி.டி.எஸ்., டி.சி.எஸ்., ஹெச்.சி.எல் மற்றும் வெரிசோன், ஐநாடிக்ஸ், ஆரக்கிள், கேப்ஜெமினி, வேர்ல்ட் சோர்ஸ் போன்ற முதன்மையான ஐ.டி. நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனங்கள் இதில் அடங்கும். இவர்களில் 80 சதவீத ஊழியர்களை அச்சுறுத்திய சட்டவிரோத வேலை நீக்கத்தை நாங்கள் தடுத்துள்ளோம். இந்த எண்ணிக்கை நேரடியாக ஊழியர்களுக்கு உதவியது மட்டும் தான், ஆனால் நிச்சயமாக எமது முயற்சிகள், ஐ.டி கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்ட விரோதமாக ஊழியர்களை வெளியேற்றும் போக்கின் வேகத்தை குறைத்துள்ளது. இது மனித வள அதிகாரிகளின் சட்டவிரோதமான அச்சுறுத்தல்களை ஒட்டுமொத்தமாகக் குறைத்தது.

பணிநீக்க முறைகளும் கடந்த ஆண்டு மாறிவிட்டன, பல ஊழியர்கள் ஒரு நாளில் போதுமான அறிவிப்புக் காலத்தைக் கூட கொடுக்காமல் நீக்கப்படுவதை நாம் காண்கிறோம். இந்த பிரச்சினையை சமாளிக்க இருக்கும் ஒரே வழிமுறை பு.ஜ.தொ.மு. ஐ.டி. ஊழியர்கள் பிரிவில் இணைவது தான் என்று ஐ.டி. ஊழியர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறோம்.

2018-ம் ஆண்டில் ஐ.டி. ஊழியர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளை கீழே தருகிறோம்:

  1. புனே மற்றும் பெங்களூரில் பணியாற்றும் பல ஊழியர்களை டெக் மஹிந்திரா பணிநீக்கம் செய்ய குறிவைத்தது. நாங்கள் டெக் மஹிந்த்ரா ஊழியர்களை ஆதரித்து ஒரு குழுவை உருவாக்கினோம். இந்த கடினமான நேரங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் அவர்களுக்கு அறிவுறுத்தினோம். இதன் விளைவாக 50க்கும் மேலான ஊழியர்களின் வேலையை நேரடியாகவும், மறைமுகமாகவும் காப்பாற்றியுள்ளோம்.
  2. ஒரு நாளில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஐநாடிக்ஸ் நீக்கியது. கடந்த வருடம் வெரிசான் நிறுவனம் குண்டர்களை வைத்து ஊழியர்களை வெளியேற்றியது அனைத்து முன்னணி ஊடகங்களிலும் பரவலாகப் பேசப்பட்டது. ஐநாடிக்ஸ் (இப்போது நியூயார்க் மெலன் வங்கி-BNYM என்று அழைக்கப்படுகிறது) பணிநீக்க நடைமுறைகளை தீவிரப்படுத்தியது. அவர்கள் சீருடை அணியாத போலீசார், ரவுடிகள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என்றெல்லாம் பயன்படுத்தி ஊழியர்களை கட்டாயப் பணிநீக்கம் செய்தது. ஊழியர்கள் மத்தியில் “வேலைக்கு எடுப்பதும் வேண்டாமென்றால் தூக்கி எறிவதும் சட்டபூர்வம்” என்பது போன்ற எதிர்மறை கருத்துக்களை பரப்ப ஐநாடிக்ஸ் கன்பெஷன்ஸ் என்ற முகநூல் பக்கத்தை நிறுவனம் பயன்படுத்தியது. இந்த முகநூல் பக்கத்தின் நோக்கம் ஊழியர்களை ஏமாற்றுவதே என்பதையும் நாங்கள் அம்பலப்படுத்தினோம்.
  3. வெரிசான் இன்ஃபோசிஸுக்கு 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை விற்றது. தேசிய மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்த இந்த ஒப்பந்தம் எப்படி ஊழியர்களைப் பாதிக்கும் என்று நாம் அம்பலப்படுத்தினோம்.
  4. விப்ரோ வருடாந்தர விடுப்பை கட்டாயப்படுத்தி எடுக்க வைப்பதை எதிர்த்து நாங்கள் குரல் கொடுக்கிறோம்.
    எந்தவொரு ஐ.டி/ஐ.டி. சார்ந்த சேவை நிறுவனத்திலும் நியாயமற்ற அல்லது சட்டவிரோதமான தொழிலாளர் நடைமுறைகளை நீங்கள் தடுக்க விரும்பினால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
    வெவ்வேறு நிறுவனங்களுக்கு எதிராக வெவ்வேறு இடங்களில் 2A வழக்குகளை தாக்கல் செய்ய 30-க்கும் மேலான ஊழியர்களுக்கு நாங்கள் உதவியுள்ளோம். விப்ரோ மற்றும் காக்னிசண்ட் நிறுவனங்களுக்கு எதிராக 2K வழக்குகளை சங்கத்தின் மூலம் தாக்கல் செய்தோம்.

முதல் முறையாக ஐ.டி துறையில், விப்ரோவிற்கு எதிரான 2K வழக்கு, ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதில் சமரசம் ஏற்படாததால், மாநில அரசாங்கத்தால் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. விப்ரோ ஊழியர்கள் எழுப்பிய பிரச்சினையை விசாரிப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை பரிந்துரைத்தார். தமிழ்நாடு அரசிதழில் இந்த ஆணை வெளியிடப்பட்டது இந்தியா முழுவதிலும் எந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு எதிராகவும் ஒரு மைல்கல் நிகழ்வு.

விப்ரோவிற்கு எதிராக 2K தாவா தாக்கல் செய்த ஊழியர்களின் வேலைகள் பாதுகாப்பாக உள்ளன, மேலும் இந்த ஊழியர்கள் இன்றும் விப்ரோவில் வேலை செய்கின்றனர். 2K தாவா ஜூலை 2017-இல் எழுப்பப்பட்டது, இந்த வழக்கு இதுவரை 20 மாதங்களுக்கு மேல் ஊழியர்களின் பணியை தக்கவைத்துள்ளது. இந்த வழக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு பேரம் பேசும் உரிமையின் சக்திக்கும் அவை எப்படி ஊழியர்களின் வேலையைக் காப்பாற்றுகின்றன என்பதற்கும் ஒரு நேரடி உதாரணமாகும்.

நாங்கள் எமது உறுப்பினர்களுக்காக ஒவ்வொரு மாதமும் மாதாந்தர சங்கக்கூட்டங்களை நடத்தினோம். அதில் தொழிற்சங்க நடவடிக்கைகள், ஐ.டி தொழிற்துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. இது நமது உறுப்பினர்களுக்கு சமூக பொறுப்புணர்வுள்ள துடிப்பான தொழிற்சங்க உறுப்பினர்களாக வளர உதவியது.

முக்கிய ஊடகங்கள் ஐ.டி. ஊழியர்கள் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளைப் பார்ப்பதில்லை என்பது கடந்த வருடம் ஒரு பிரச்சினையாக இருந்தது என்பதால், செய்திகளை வெளியிட நமக்கான சொந்த ஊடகத்தை உருவாக்க விரும்புகிறோம். எங்களது வலைத்தளத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டோம். எமது தளம் 2018-ஆம் ஆண்டில் அரை மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்தது. முகநூல் பக்கத்தில் பல நூறு மீம்ஸ்களையும் பதிவையும் நாங்கள் வெளியிட்டோம். எங்களது முக்கிய கட்டுரைகளில் சில 3 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களை சென்றடைந்தது. நாங்கள் கோரா-வில் கட்டுரைகளை வெளியிடுகிறோம் மற்றும் ஐ.டி. ஊழியர்களால் எழுப்பப்பட்ட பணிநீக்கம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறோம். சில கட்டுரைகள் கோரா-வில் 6 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது.

நமது தொழிற்சங்க உறுப்பினர்களின் பங்களிப்பே இதை சாத்தியமாக்கியது. இப்போது நமது வலைத்தளம் மற்றும் முகநூல் பக்கம் அதிக கவனத்தைப் பெறுகின்றன. இந்த விஷயத்தில் மேற்கோள் காட்ட சில உதாரணங்கள்: கந்தா சைதன்யா என்ற தொழில்நுட்ப ஊழியரின் தற்கொலை நமது செய்திக்குப் பிறகே பிரதான ஊடகங்களில் வெளியானது. வெரிசான் ஊழியர்களை இன்ஃபோசிஸிற்கு விற்பது பற்றிய நமது செய்தி கிட்டத்தட்ட அனைத்து முக்கிய ஊடகங்களையும் அடைந்தது. ஐ.டி. ஊழியர் ஒருவர் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதன் பின்னணி பற்றிய செய்தியும் பிரதான ஊடகங்களை அடைந்தது. வெளியுலகில் இருப்பவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் பிரச்சினைகளை கொண்டு சேர்ப்பதில் நமது வலைத்தளம் எப்படி உதவியது என்பதற்கு மேலே சொன்னவை சில உதாரணங்கள். இது ஒரு ஆரம்பம், நிச்சயமாக வருங்காலத்தில் ஐடி ஊழியர்கள் தங்களுடைய உரிமைக் குரலை எழுப்ப நமது வலைத்தளம் மற்றும் முகநூல் பக்கம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும். நமது தொழிற்சங்க உறுப்பினர்கள் பு.ஜ.தொ.மு வெளியிடும் மாதாந்திர தொழிலாளர் ஏடான புதிய தொழிலாளியில் ஒவ்வொரு மாதமும் கட்டுரைகளை எழுதினர்.

நமது சங்கம் தொடர்பாகவும், சில மாற்றங்கள் நிகழ்ந்தன. வருடாந்தர தேர்தல் நடத்தப்பட்டு நிர்வாகிகளும் செயற்குழு உறுப்பினர்களும் எமது தொழிற்சங்க உறுப்பினர்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். பு.ஜ.தொமு மைய சங்கத்தின் பொதுச் செயலாளர் சுப.தங்கராசு ஐ.டி. ஊழியர்கள் பிரிவின் சிறப்புத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2017-18 ஆண்டுகளில் சிறப்புத் தலைவராக இருந்த தோழர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மதிப்புமிக்க தனிப்பட்ட வழிகாட்டல் நமது உறுப்பினர்களின் சட்ட வழக்குகளில் பலவற்றை முன்னெடுத்து செல்ல எங்களுக்கு உதவியது.

அகமதாபாத் ஐ.ஐ.எம் கல்லூரியின் ஒரு மேலாண்மை பிரிவு மாணவர், டெல்லியிலிருந்து வந்த ஒரு சட்டக்கல்லூரி மாணவர், சென்னையிலிருந்து ஒரு பத்திரிகையாளர் மாணவர் ஆகியவர்கள் கடந்த ஆண்டு நமது தொழிற்சங்கத்தை அவர்களின் திட்டப்பணி/ஆய்வு தொடர்பாக அணுகியபோது தொழிற்சங்க உறுப்பினர்கள் அவர்களுக்கு உதவினர்.
Brightfuturejobs.com என்ற நிறுவனத்தின் டோனா கான்ராயுடன் விரிவான கலந்துரையாடலை நடத்தினோம். அவரது நிறுவனம் பல்வேறு அமெரிக்க தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடுகிறது. அமெரிக்காவில் வேலை செய்யும் சூழலை பயன்படுத்தி இந்திய நிறுவனங்கள் எவ்வாறு சுரண்டுகின்றன மற்றும் அமெரிக்காவின் வேலை சந்தையில் இது உருவாக்கும் தாக்கம் ஆகியவற்றை அவர் விளக்கினார். அவர் பு.ஜ.தொ.மு-வுடன் உடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த படியாக தனது குழுவினருடன் இந்தியாவுக்கு வருகை வந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இது தொடர்பாக ஒரு தனி கட்டுரை விரைவில் வெளியிடப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் “ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா பிரச்சினைகளா” என்ற தலைப்பில் ஒரு மின்நூலையும் அச்சுப் புத்தகத்தையும் நாங்கள் வெளியிட்டோம். ஜனவரி 4 முதல் 20-ம் தேதி வரை நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியில் (கீழைக்காற்று பிரசுரத்தின் ஒரு பகுதியாக அரங்கு எண் 147 & 148) வாசகர்கள் இந்த புத்தகத்தை வாங்க முடியும். பணிநீக்கத்தை எதிர்கொள்ளும் அனைத்து ஐ.டி. ஊழியர்களுக்கும் அதை எதிர்த்து பணியை காப்பாற்றிக்கொள்ள இந்த புத்தகமானது ஒரு நல்ல துவக்கமாகும். மேலும் ஒவ்வொரு ஐ.டி. ஊழியரின் புத்தக அலமாரிகளில் இருக்க வேண்டிய புத்தகம் இது. எனவே சென்னை புத்தகக் கண்காட்சியில் ஐடி ஊழியர்கள் இந்தப் புத்தகத்தை வாங்க நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

நாங்கள் அரசியல் ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறோம், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதிலும் நடக்கும் உள்ள பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் பங்கேற்கிறோம். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில், கார்ப்பரேட் உத்தரவின் பேரில் இரக்கமற்ற முறையில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். சோழிங்கநல்லூர், சிப்காட், சிறுசேரி மற்றும் மஹிந்த்ரா சிட்டி ஆகிய இடங்களில் FITE தொழிற்சங்கத்துடன் இணைந்து நாங்கள் 5000-க்கும் மேற்பட்ட ஐ.டி. ஊழியர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அது ஐ.டி. ஊழியர்களைப் பற்றி வெளியுலகம் புரிந்து கொள்ள ஒரு நல்ல தொடக்கமாக இருந்தது.

நியாயமற்ற மற்றும் சட்டவிரோத நடைமுறைகளுக்கு எதிரான போராட்டத்தில் மற்ற தொழிற்சங்கங்களை ஆதரிப்பதில் நமது ஒற்றுமையை நாங்கள் காட்டினோம். யமஹா தொழிலாளர்கள் போராட்டத்தில் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தோம். அந்தத் தொழிலாளர்களை ஆதரித்து நமது இணையதளத்தில் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டோம்.

கஜா புயல் நிவாரணத்திற்காக, நாங்கள் நிதி சேகரித்தது. பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் சங்கத்தின் உறுப்பினர்கள் பல நாட்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தின் தொலைதூர பாதிக்கப்பட்ட பகுதிகளில் தங்கி, வரம்புக்குட்பட்ட நிதி மற்றும் ஆள்பலத்தை வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதான அச்சுறுத்தல் பிஜேபி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட காலவரையறைகுட்பட்ட வேலைவாய்ப்பு ஆகும். இது அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப கார்ப்பரேட்டுகள் ஊழியர்களை பணியமர்த்துவதற்கும் பணியிலிருந்து நீக்குவதற்கும் அனுமதிக்கும். இது தொழிலாளர் நிலைமைகளை 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தள்ளும். பி.ஜே.பி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையையும், இது பற்றி வாய்திறக்காத மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து அரசியல் கட்சிகளையும் கடுமையாக கண்டனம் செய்கிறோம்.

நிச்சயமாக நமக்கு ஒரு கடுமையான ஆனால் சுவாரஸ்யமான ஆண்டு 2018. இது ஒரு தொடக்கம் என்று நமக்கு தெரியும் ஆனால் நிச்சயமாக நாம் இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது என்று முன்கூட்டியே நாம் சொல்ல முடியும். இந்த 2019-ம் ஆண்டு எமது தொழிற்சங்கம் வேகமாக வளரும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நிச்சயமாக கார்ப்பரேட்டுகள் மேலும் மேலும் தங்களின் நடவடிக்கைகளால் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியத்தை உணரவைப்பார்கள்.

– தலைவர், பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

மொழிபெயர்த்தவர் – செல்வம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-we-did-in-2018-where-we-are-headed-in-2019-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ

"இந்த மோடி வவுத்துல அடிச்சிருக்காங்களே.." "கருப்புப் பணம்னா வச்சிருக்கவன போய் புடி. மோடிக்கு தெரியாதா" "பணக்காரனுக்கு கோடி கோடியா தள்ளுபடி செய்றயில்ல" "கருப்புப் பணம் வெச்சிருக்கறவன் வாழ்றான்,...

“முன்னேற்றத்துக்கு” நாடு கொடுக்கும் விலை என்ன?

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18.5 லட்சம் டன் மின்-கழிவுகள் (அதாவது ஒரு நபருக்கு 1.5 கிலோ) உருவாக்கப்படுகின்றன என்கிறது ஒரு ஆய்வு. 2018-ல் இந்த அளவு 30...

Close