கஜா புயல் : யார் முறையான நிவாரணம் வழங்க முடியும்?

3. என்ன செய்ய வேண்டும்?

இந்த அரசு நினைத்தால், தனது முழு வலிமையையும் பயன்படுத்தினால் இது போன்ற சேதங்களை விரைவில் சீர் செய்து மீட்டெடுத்து விட முடியும். இந்தப் பணியை அரசுதான் செய்ய முடியும், ஆனால் அரசுக்கு அதைச் செய்ய வேண்டும் என்ற அக்கறையோ, கண்ணோட்டமோ இல்லை.

பாதிப்பு ஊரும் சேரியும், பணக்காரர்களும் ஏழைகளும் என்று வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பணம் இல்லாத அன்றாடம், வாரா வாரம் கூலி, மாத சம்பளம் என்று வாழ்ந்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களும், பிற கூலி உழைப்பாளர்களும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடி விழுந்திருக்கிறது.

சாலையின் இரு புறங்களிலும் தொலைவில் இருக்கும் குடியிருப்புகள் மீது கவனம் குவிக்க அரசிடம் திட்டம் இல்லை, எனவே விருப்பம் இல்லை, எனவே அதற்கான சக்தி இல்லை.

விவசாய கிராமங்களில் மரம் விழுந்து, மின் கம்பம் விழுந்து எல்லோரும் பாதிக்கப்பட்டாலும் பணம் இருப்பவர்கள் வாழ்வை விரைவில் மீட்டுக் கொண்டிருக்கின்றனர். பாதிப்பு ஊரும் சேரியும், பணக்காரர்களும் ஏழைகளும் என்று வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பணம் இல்லாத அன்றாடம், வாரா வாரம் கூலி, மாத சம்பளம் என்று வாழ்ந்து கொண்டிருந்த விவசாய தொழிலாளர்களும், பிற கூலி உழைப்பாளர்களும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு அடி விழுந்திருக்கிறது. அவர்களுக்கு மீட்புப் பணியும், நிவாரணமும் போய்ச் சேருவது இன்றைய நடைமுறையில் நடக்கவில்லை. அரசு எந்திரத்தில் கிராம நிர்வாக அதிகாரி முதல், காவல் துறை, தபால் துறை, மின் துறை என்று பல்வேறு வழிகளில் மூலை முடுக்குகளில் எல்லாம் ஆள்பலமும், தொடர்பும் இருந்தாலும் இந்தத் திசையில் அரசு யோசிக்கவே இல்லை.

வெளியூரில் இருந்து வந்து செய்யும் முயற்சியைக் கூட உள்ளூரில் அனைவரும் இணைந்து ஒருங்கிணைப்பது இங்கு இல்லை. அரை டஜன் கட்சிகள், என்.ஜி.ஓக்கள் என்று ஒவ்வொருவரும் தனித்தனியாக கடை போட்டு, நிதி வசூலித்து, நிவாரணம் வினியோகிப்பதாகத்தான் இது உள்ளது.

மத்திய அரசிடமிருந்து வந்திருந்த 2 கன்டெய்னர் நிவாரண பொருட்களை மூடியிருந்த மூடியின் மேல் பிரம்மாண்டமான படத்தில் மோடி சிரிக்கிறார். அவற்றை இறக்கி தமக்குள் பிரித்துக் கொண்டு அ.தி.மு.க கறை வேட்டிகளும், பா.ஜ.க-வினரும் வினியோகிக்க எடுத்துச் செல்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் ஓடோடிச் சென்று வரிசையில் நிற்க வேண்டும். அண்ணன் மார்கள் வினியோகிப்பார்கள். அதிலும் ரேஷன் கார்டு எடுத்துக் கொண்டு வா, ஆதார் அட்டை கொண்டு வா என்று அலைக்கழிப்பு உள்ளது.

சாலையின் இரு புறங்களிலும் தொலைவில் இருக்கும் குடியிருப்புகள் மீது கவனம் குவிக்க அரசிடம் திட்டம் இல்லை, எனவே விருப்பம் இல்லை, எனவே அதற்கான சக்தி இல்லை.

இது போக பல டஜன் கணக்கில் தனிநபர்கள், குழுக்கள் நிவாரண பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து வினியோகிக்கின்றனர். பணம் வசூலிப்பது, நிவாரண பொருட்களை திரட்டுவது, இங்கு வரை பயணிப்பது என்ற வகையில் கடுமையாக உழைக்கும் இவர்கள், பொருட்களை கொண்டு போய் சேர்ப்பதில் கோட்டை விடுகின்றனர். அவர்களுக்கு இந்தப் பகுதியில் உள்ளூர் தொடர்புகள் இருப்பதில்லை, எனவே சாலையில் வண்டியை நிறுத்தி வருபவர்களிடம் கொடுத்து விட்டு போகின்றனர். வீட்டையும் வேலைகளையும் விட்டு விட்டு சாலையோரத்தில் காத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் பொருட்கள் கிடைக்கின்றன.

உள்ளூரில் வாழும், பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் கூடிய ஒருவரின் உதவியில்லாமல் இந்த வினியோகத்தைச் செய்ய முடியாது என்பது நிதர்சனம்.

வீட்டுக்கே ரேஷன் பொருட்களை கொண்டு போய் கொடுப்பது போல, அரசு – போலீஸ், துணை ராணுவப் படை, பிற மாவட்ட அரசு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்களை வரவழைத்து இந்தக் காரியத்தை செய்ய முடியும். அல்லது மாநாடுகளுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டும் அரசியல் கட்சிகள் இதைச் செய்ய முடியும்.

ஆனால், அவர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் என்பதுதான் உண்மை. உழைக்கும் மக்களை அடிமைகளாகவும், ஏதோ தமது தயவுக்கு காத்துக் கிடக்கும் பிச்சைக்காரர்கள் என்று பார்க்கும் அரசியல் கட்சிகளோ அவற்றின் தொண்டர்களோ இந்தப் பணிக்கு பொருத்தமற்றவர்கள். அவர்கள் பணத்தை விட்டெறிந்து, தமது படத்தை பொறித்து நிவாரணத்தை வழங்கி விட்டு போய் விடுவார்கள். அவர்களது தொண்டர்களை திரட்டி கொண்டு வந்தால் (அல்லது போலீஸ், துணை ராணுவப் படை வந்தால்) பாதிக்கப்பட்ட மக்களை இவர்களிடமிருந்து பாதுகாப்பதே பெரிய வேலையாகி போய் விடும்.

4. இதன் அரசியல் என்ன?

அரசு தஞ்சை டெல்டா விவசாயிகளை, உழைக்கும் மக்களை விரோதியாக பார்க்கிறது, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கும், பெட்ரோவேதி மண்டலம் அமைப்பதற்கும் இடத்தை கைப்பற்ற வேண்டும். மக்களை இடம் பெயர்க்க வேண்டும். எனவே டெல்டாவை இயற்கை பேரிடலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறை நீண்ட கால நோக்கில் இல்லை. கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதில்தான் இருக்கிறது. தஞ்சாவூர் டெல்டாவை காலி செய்து மீத்தேன் திட்டம் கொண்டு வருவதுதான் அரசின் நோக்கம். கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயத்தை அழிக்கிறது.

எனவே, இந்தப் பணிக்கு இந்த அரசு கையாலாகாத அரசு. நாம் இதை புரிந்து கொண்டு மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

நிவாரணப் பணியை முறையாக திட்டமிட்டு கையாள்வதற்கான தயாரிப்புகளைச் செய்ய இந்த அரசுக்கு வக்கு இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்களது எண்ணம் எல்லாம் கார்ப்பரேட்டுக்கு என்ன மானியம் கொடுப்பது, வங்கிக் கடனை எப்படி அதிகரிப்பது, நிலத்தை எப்படி கைப்பற்றுவது என்று ஓடுகின்றது. ஓட்டு வாங்குவதற்கும், தாங்க முடியாமல் போராட வருவதை தவிர்க்கவும், ஒரு சில தேர்தல் நேர சலுகைகளையும் வாய் வார்த்தையில் வாரி வீசுவார்கள். ஆனால், அவை நிகழ்ந்தனவா என்றெல்லாம் யாரும் கணக்குக் கேட்க முடியாது.

இந்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

இயற்கைப் பேரிடர்கள் கஜா புயலோடு நின்று விடப் போவதில்லை, சென்னை வெள்ளம், ஒக்கி புயல், வர்தா புயல், அதற்கும் முன்னர் சுனாமி என்று கடந்த காலத்தில் பல அழிவுகளை எதிர்கொண்டோம். இனிமேலும் இயற்கையின் சீற்றம் நிகழும்போது இத்தகைய அழிவுகள் நிகழத்தான் செய்யும். நாம் இதற்கான நிபுணத்துவத்தையும் அமைப்பு முறையையும் வளர்த்துக் கொண்டு மாற்று அமைப்பை உருவாக்க வேண்டும். மின்துறை திறனுடை தொழிலாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என்று அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் இதைக் கொண்டு போக வேண்டும்.

வாழ வழியில்லாமல் தவிப்பர்களுக்கு நிவாரண உதவிகள் – உணவு, இருப்பிடம், மருத்துவ வசதி, மருந்துகள் – கொடுப்பதற்கு பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு தேவை ஏற்பட்டாலும், இந்தக் குழுவினர், நிதி திரட்டுவது, இடத்தை அடையாளம் காண்பது போன்ற பணிகளில் இறங்கி விட வேண்டும்.

– ராம்

(இரண்டாவது இறுதி பகுதி)

 

Series Navigation<< கஜா புயல் : ஒட்டு மொத்த அழிவு, எளிய மக்கள் மீது அதிக சுமைகஜா புயல் நிவாரணப் பணி : எப்படி தயாரித்துக் கொள்ள வேண்டும்? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/who-can-provide-effective-relief/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஸ்டெர்லைட்: உள்ளூர் அரசு நிர்வாகமும், மக்களின் அறியாமையும்

முன்பெல்லாம் மக்களிடம் பிரச்சனை பற்றிய முழுமையான விழிப்புணர்வு இருந்ததில்லை. தன் புருசன் கேன்சரில்தான் செத்தார் என்று தெரியாது. "ஏதோ இருந்தாரு செத்து போயிட்டாரு, என் புள்ள செத்து...

நெடுவாசல் : ஒரு ஐ.டி ஊழியரின் போராட்ட அனுபவம்

ஹைட்ரோ கார்பன் போராட்டம் தொடங்கியவுடன் நாமும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று கருதி போராட்டத்தின் 12-ம் நாள் முதல் 19-ம் நாள் வரை நெடுவாசல் போராட்டக் களத்தில்...

Close