கிரீஸ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து அந்நாட்டின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்:
கிரீஸின் கன்சர்வேட்டிவ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையானது, தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிற்சங்கத்தின் அடிப்படை உரிமைகளையும் ஒழித்து வருகிறது.
இந்தக்கொள்கை, தொழிலாளர்களை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறைந்த கூலியில் வேலை செய்யநிர்ப்பந்திக்கிறது. பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், தொழிற்சங்கத்தின் கூட்டுப் பேர உரிமையை ஒழிப்பதோடு மட்டுமில்லாமல், மின்னனு வாக்குப் பதிவின் மூலம் அனைத்து தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை அரசு எளிதாக கண்காணிக்கவும் முடியும்.
இதற்கு எதிராக கிரீஸின் ஏதென்சில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செப்டமர் 24ம் தேதியன்று வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்.
ஸ்பெயினில் அல்கோவா அலுமினியத் தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்:
ஸ்பெயினில் அல்கோவா அலுமினியத் தொழிற்சாலை மூடப்படுவதைக் கண்டித்து போராட்டம் நடத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாக அந்த அரசின் மூலம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதற்கு எதிரிப்பு தெரிவித்து செப்டமர் 23ம் தேதியன்று நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்நீதிமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்தினர்.
தண்ணீர் தனியார்மயமாவதைக் கண்டித்து பெருவின் தொழிலாளர்கள் போராட்டம்:
பெருவின் தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகள் தனியார்மயமாவதை எதிர்த்து அந்நாட்டின் தலைநகர் லிமாவின் வீதிகளில்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்திய மக்கள் ”தண்ணீர் ஒரு பண்டம் இல்லை, அது மக்களின் அடிப்படை உரிமை”. ”தண்ணிர் மக்களுக்கான சலுகை இல்லை, அதை வணிகமயமாக்கதே” என்றுமுழக்கமிட்டனர்.
ஏற்கனவே லிமாவில் சுமார் ஏழுலட்சம் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். இப்போது தண்ணீர் வழங்கும் அரசுநிறுவனத்திடமிருந்து அதை தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவதன் மூலம் மக்கள் பல்வேறு அவதிகளுக்கு ஆட்பட நேரிடும் என்று போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இத்தாலியில் வேர்ல்பூல் நிறுவனத்தை விற்பதைக் கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்:
இத்தாலியில் வேர்ல்பூல் நிறுவனத்தில் சுமார் 420 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அந்நிறுவனத்தை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த Passive Refrigeration systems என்ற நிறுவனத்திற்கு விற்பதன் மூலம் பல வேலையிழப்புகள் ஏற்படும் என்று அத்தொழிலாளர்கள் செப்டமர் 18ஆம் தேதியன்று போராட்டம் நடத்தினர்.
கொலம்பியா போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்:
கொலம்பியா நாட்டின் போக்குவரத்து தொழிலாளர்கள் அந்நாட்டின் வலது சாரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் மீது எடுத்துவரும் தொழிலாளர் அடக்குமுறைக்கு எதிராக செப்டமர் 23ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
அந்நாட்டில் இந்த ஆண்டு மட்டும் 13000 ஓட்டுநர்களுக்கு ஓட்டுநர் உரிமம் ஒரு ஆண்டு காலத்திற்கு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 350 ஓட்டுநர்களுக்கு ஆயுட்கால ஓட்டுநர் உரிமம் தடை விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிகளை ஒரு தடவைக்கு மேலே மீறீனால் அங்கு ஓட்டுநர் உரிமம் தடை செய்யப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் வருமானம் இல்லாமல் வீதிக்கு தள்ளப்படுகின்றனர்.
- சின்ன மருது
செய்திஆதாரங்கள் : https://peoplesdispatch.org