150 வயதில் இளமைத் துடிப்போடு மார்க்சின் மூலதனம்

ன்று மார்க்சின் மூலதனம் நூலின் முதல் பாகம் வெளியிடப்பட்டு 150-வது ஆண்டு.

மூலதனம் நூல்

மூலதனம் நூல்

மூலதனம் நூலின் சிறப்புகள்

 1. சமூக இயக்கத்தை புரிந்து கொள்வதற்கு  அறிவியல் ஆய்வுமுறையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு முதன்மையான முன் உதாரணம் அது. முதல் பாகத்தின் ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு வாக்கியமும் இன்றும் அதை நமக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
 2. இந்த நூலில் அத்தகைய ஒரு சக்திவாய்ந்த கருவியை பயன்படுத்தி மார்க்ஸ் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது முதலாளித்துவ உற்பத்தி முறையை. அந்த உற்பத்தி முறை இலக்கண சுத்தமாக வளர்ந்திருப்பதாக மார்க்ஸ் மதிப்பிட்ட இங்கிலாந்தின் பருண்மையான வரலாற்று விபரங்களையும், சமகால தரவுகளையும் தொகுத்து அதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் தோற்றம், தன்மை, வளர்ச்சிப் போக்கு, வர்க்கங்கள், உற்பத்தி சக்திகள், கருத்தினங்களுக்கிடையேயான உறவுகளை விளக்கிச் செல்கிறார்.
  பிரம்மாண்டமாக வளர்ந்து உலகெங்கும் கால் பரப்பி நிற்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் மரபணுவை படம் போட்டு விளக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
 3. மேலே சொன்ன புரிதலோடு, முதலாளித்துவம் மார்க்ஸ் மூலதனத்தை எழுதி வெளியிட்ட 150 ஆண்டுகளில் அடைந்துள்ள வளர்ச்சி, மாற்றங்கள் ஆகியவற்றை அதே மார்க்சிய ஆய்வுமுறையில் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த ஆய்வுமுறையை ரசிய நிலைமைகளுக்கு பொருத்தி, அரசியல், அமைப்பு திட்டத்தோடு வளர்த்துச் சென்றவர் லெனின்.

காரல் மார்க்ஸ்

காரல் மார்க்ஸ்

மார்க்ஸ் ஆக இருந்தாலும் சரி, லெனின் ஆக இருந்தாலும் சரி, மார்க்சிய ஆய்வு முறையை பயன்படுத்தி அவர்கள் எடுத்துக் கொண்ட (இங்கிலாந்து, முதலாளித்துவம் – மார்க்ஸ், ரசியா, புரட்சி – லெனின்) விஷயத்தின் வரலாற்று விபரங்களையும், சமகால புறநிலை தரவுகளையும் தொகுத்து புரிந்து கொள்கிறார்கள், முன் கணிக்கிறார்கள், திட்டங்களை வகுக்கிறார்கள், மாபெரும் மக்கள் பெருந்திரளை வழி நடத்திச் செல்வதற்கான முழக்கங்களை வடிக்கிறார்கள்.

எப்படி புரிந்து கொண்டார்கள் என்ற ஆய்வுமுறை அணுகுமுறை முக்கியமானது, முதன்மையானது. அவர்கள் வந்தடைந்த புரிதல்களில் காலப்போக்கில் நிகழ்ந்த மாற்றங்களை இணைத்து வளர்த்து அதை ஒவ்வொரு நாட்டு வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப பொருத்தி புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் முன் வைத்த திட்டங்கள், முடிவுகள், முழக்கங்கள் ஆகியவற்றை மிகக் கவனமாக, மேலே சொன்ன இரண்டு அணுகுமுறையின் அடிப்படையில் சமகால ஆய்வு, அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த முடிவுகள், திட்டங்கள், முழக்கங்கள் ஆகியவற்றை நகல் எடுத்து பொருத்திக் கொள்வதை தவிர்கக வேண்டும்.

மூலதனம் – அரசியல் பொருளாதாரத்தின் மீதான ஒரு விமர்சன உரை
முதல் பாகம்

மார்க்ஸ் - எங்கெல்ஸ்

மார்க்ஸ் – எங்கெல்ஸ்

பாகம் 1 புத்தகம் 1 மூலதனத்தை உற்பத்தி செய்யும் நிகழ்முறை

 • இதில் மூலதனத்தின் தோற்றம், உருவாக்கம், தொடர்ந்து பெருகிச் செல்லும் போக்கு ஆகியவற்றின் பொறியமைவு விளக்கப்படுகிறது. இதற்கான கோட்பாட்டு வகையினங்களை வளர்த்தெடுத்து மூலதனம் பற்றிய ஒரு சித்தரிப்பு தரப்படுகிறது. அதற்கு முன் வில்லியம் பெட்டி முதல் ரிக்கார்டோ வரை முதலாளித்துவ உற்பத்தி முறையை ஆய்வு செய்து எழுதிய பல்வேறு பொருளாதார அறிஞர்களின் கருத்தாக்கங்கள் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பயன்படுத்தப்படுகின்றன.
 • பயன்மதிப்பும்-பரிவர்த்தனை மதிப்பும், பணம், உழைப்பு சக்தி விற்கப்படுதல் (கூலிக்கு), பொருளை உற்பத்தி செய்ய அவசியமான சமூக அளவிலான சராசரி உற்பத்தி நேரம், அதன் ஒரு தனிச்சிறப்பான விஷயமாக தொழிலாளி தனது அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்ய செலவிட வேண்டிய அவசிய உழைப்பு நேரம், உபரி உழைப்பு/உபரி மதிப்பு, மூலதனத் திரட்சி என்று போகிறது.
 • அத்தோடு மூலதன திரட்சி தோன்றி வளர்ந்த வரலாற்று நிகழ்வுகளையும், முதலாளித்துவ பொருளாதார போக்குகளை பற்றிய சமகால அரசியல் பொருளாதார கருத்துக்களையும் தொகுக்கிறார்.

இந்த நூல் புனைவு அல்லாத படைப்புகளில் மனித படைப்புத் திறனின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.

இரண்டாவது பாகம்
பாகம் II, புத்தகம் II மூலதன சுற்றோட்டத்தின் நிகழ்முறை

எங்கெல்ஸ் எடிட் செய்து 1885-ல் மார்க்சின் இறப்புக்குப் பிறகு பதிப்பிக்கப்படுகிறது.

மூலதனம் ஒரு தொழிற்சாலையில் திரட்டப்படுகிறது. ஆனால், அது உறைந்திருக்கும் உற்பத்தி பொருட்களை பணமாக மாற்றி அடுத்த சுற்று முதலீடு செய்வதற்கான பொருட்களையும் உழைப்பு சக்தியையும் வாங்குவதற்கு சந்தைக்குள் முதலாளி செல்ல வேண்டியிருக்கிறது. உபரி மதிப்பை மூலதனமாக மாற்ற வேண்டியிருக்கிறது. அங்கு பிற முதலாளிகளின் போட்டி, விலை, உற்பத்தி செலவு என்று பல விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இது பற்றிய கோட்பாடுகளை இந்த பாகம் தருகிறது.

மூன்றாம் பாகம்
பாகம் III, புத்தகம் மூன்று முதலாளித்துவ உற்பத்தி நிகழ்முறை – முழுமையாக

எங்கெல்சால் 1894-ல் வெளியிடப்படுகிறது.

முதலாளிகளுக்கிடையே ஒரே தொழில் துறையில், தொழில் துறைகளுக்கிடையே போட்டி, சராசரி லாபம், லாப வீதம் குறைந்து கொண்டே போவது, வணிக மூலதனம், வட்டி மூலதனம், வங்கி மூலதனம், நில வாடகை போன்ற விஷயங்கள் பரிசீலிக்கப்படுகின்றன.

லெனின்

லெனின் – ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம்

நான்காம் பாகம்
உபரி மதிப்பு தத்துவங்கள்

காவுட்ஸ்கியால் 3 புத்தகங்களாக வெளியிடப்படுகிறது.

இந்த 4 பாகங்கள் இன்று நாம் பார்க்கும், நம் அனைவரது வாழ்வு மீதும் ஆதிக்கம் செலுத்தும் முதலாளித்து உற்பத்தி முறையின் நாடித் துடிப்பை பிடித்துப் பார்த்து அதன் உடற்கூறியலையும், உடல் இயங்கியலையும், மூளை நரம்பியலையும் விவரிக்கின்றன.

முதலாளித்துவ உலகை மேலும் விளக்குவதற்காக சர்வதேச வர்த்தகம், உலகச் சந்தை, அரசு, நிலச்சொத்துடைமை, கூலி உழைப்பு ஆகிய அம்சங்களையும் ஆய்வு செய்து எழுதுவதற்கு மார்க்ஸ் திட்டமிட்டிருந்தார். அந்தத் தலைப்புகளில் 1910-க்குப் பிறகு ஏகாதிபத்தியம் – முதலாளித்துவத்தின் உச்சகட்டம் நூலில் தொடங்கி பல விஷயங்களை லெனின் மார்க்சிய ஆய்வுமுறையில் எழுதியிருக்கிறார்.

இன்று நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும், ஆர்வமும் உடைய எவரும் மார்க்ஸ்-எங்கெல்சின் மூலதனம் 4 பாகங்களையும், லெனின் எழுதிய ஏகாதிபத்தியம் பற்றிய படைப்புகளையும் படிப்பதில் இருந்துதான் தொடங்க வேண்டும். அவை முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய 1920-கள் வரையிலான சுமார் 400 ஆண்டு கால அறிவுத்துறை படைப்புகளையும், வரலாற்றையும், சமூக மாற்றங்களையும் உள்வாங்கி தொகுத்து முன் வைக்கின்றன.

அடுத்த 100 ஆண்டுகளில் முதலாளித்துவம் அடைந்துள்ள மாற்றங்களை, அது கட்டவிழ்த்து விட்டுள்ள தொழில்நுட்ப சக்திகளின் வளர்ச்சிக்கு அதுவே தடையாக மாறியிருப்பதையும், அது சிக்கி வெளியில் வர முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நெருக்கடி பற்றியும் புரிந்து கொள்வது அறிவுத்துறையினர் முன் நிற்கும் ஒரு சவால்.

– டார்வின்

படிப்பகம் டாட் காம்-லிருந்து

 1. மூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்று
 2. மூலதனம் முதல் பாகம் புத்தகம் இரண்டு
 3. மூலதனம் இரண்டாம் பாகம்
 4. மூலதனம் மூன்றாம் பாகம் புத்தகம் ஒன்று
 5. மூலதனம் மூண்றாம் பாகம் புத்தகம் இரண்டு

From Marxist.org
Capital, Volume I, Marx, 1867 (2260kb)

“The wealth of those societies in which the capitalist mode of production prevails, presents itself as “an immense accumulation of commodities,” its unit being a single commodity. Our investigation must therefore begin with the analysis of a commodity.”

Volumes II & III of Capital were compiled from Marx’s notes by Engels, after Marx’s death.

Capital, Volume II (1340kb)

“Every individual capital forms, however, but an individualised fraction, a fraction endowed with individual life, as it were, of the aggregate social capital, just as every individual capitalist is but an individual element of the capitalist class.”

Capital, Volume III (2390kb)

“Since the mass of the employed living labour is continually on the decline as compared to the mass of materialised labour set in motion by it, i.e., to the productively consumed means of production, it follows that the portion of living labour, unpaid and congealed in surplus-value, must also be continually on the decrease compared to the amount of value represented by the invested total capital. Since the ratio of the mass of surplus-value to the value of the invested total capital forms the rate of profit, this rate must constantly fall.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/youthful-das-kapital-after-150-years/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பாதுகாப்பின்மை, குடும்ப பொறுப்பு, வாடகை வீடு, மன அழுத்தம் – ஐ.டி ஊழியர்களின் நிலைமை

பெரும்பான்மை ஐ.டி ஊழியர்களுக்கு சொந்த வீடும், காரும் கிடையாது, குடும்பம் அவர்களை நம்பியே இருக்கிறது, பணி பாதுகாப்பின்மை உணர்வும், மன அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. பணி பிரச்சனைகளை...

சேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்

"தற்போதைய சாலைகளை ஒட்டிய நிலங்களில் பெரும்பாலும் கட்டிடங்கள் இருக்கும் என்பதால் அவற்றை விட விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்துவது மிகவும் மலிவு"

Close