யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்

லகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர், உலக முதலாளி வர்க்கத்தின் சிம்மசொப்பனம், சோவியத் புரட்சி நாயகன் ஆசான் லெனின் அவர்களின் 149-வது பிறந்த தினம் நேற்று 22 ஏப்ரல் 2018. இதுவரை கதைகளில் சொல்லப்பட்டும் கேட்கப்பட்டும் வந்த சொர்க்கத்தை இம்மண்ணுலகில் படைத்துக் காட்டியவர் லெனின்.

இன்று முதலாளித்துவ கட்டமைப்புகள் அனைத்தும் சிதைந்து சின்னாபின்னமாகி மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் வேளையில், இந்த கொடூரப்பிடியிலிருந்து மக்களை விடுவித்து உழைக்கும் மக்களுக்கான அரசை நிறுவ நமக்கு லெனின் தேவைப்படுகிறார். லெனின் எழுதிய நூல்களும், அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல்களும் ஏராளம். அவற்றை தேடி படிப்போம். மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிப்போம். ஆசான் லெனின் வழி நடப்போம். ஒரு புதிய உலகம் படைப்போம்.

யுகமாகி நின்ற லெனின் உலகாகி நின்ற லெனின்
உறவாகி நின்ற லெனினே!
அகமாகி நின்ற லெனின் அறிவாகி நின்ற லெனின்
அரசாள வந்த லெனினே!
சுகமாகி வந்த லெனின் துணையாகி வந்த லெனின்
சுதந்திர மான லெனினே!
இகமாகி நின்ற லெனின் எமையாள வந்த லெனின்
இறையாகி வந்த லெனினே!
நறவூறுகின்ற மொழி பொருளர்க்கும் என்ற வழி
நடை கொண்டு வந்த லெனினே!
உறவாகி உலகெங்கும் உழைப்பாளர் ஆட்சிநெறி
உரமாக்கி வைத்த லெனினே!
– பாவேந்தர் பாரதிதாசன் (1918)

 

 

 

 

 

 

 

 

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/yugamaagi-nindra-lenin/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு -  உறுப்பினர் கூட்டம்  தேதி: 21-7-2018, சனிக்கிழமை. நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை இடம் :...

செய்தியும் கண்ணோட்டமும் : மகாராஜாக்கள் மகிழ்ச்சி கொள்ளட்டும்

போராடும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் நாட்டின் பிரதம மந்திரி நடிகைகளை சந்தித்து உரையாடுகிறார், சாமியார்கள் ஆசிரமத்தில் சிலையை திறந்து வைத்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார்.

Close